மக்களை ஏமாற்றும் ஜெ: கருணாநிதி
சென்னை:
ஆண்டிப்பட்டியில் மருத்துவக் கல்லூரியைத் தொடங்கமாலே அதற்கான கட்டடத்தை மட்டும் ஜெயலலிதா திறந்து வைத்திருப்பதுதேர்தலை மனதில் வைத்து நடத்தப்பட்ட செயல் என திமுக தலைவர் கருணாநிதி கூறியுள்ளார்.
அவர் கூறியதாவது:
தென் மாவட்டங்களில் பல்வேறு திட்டங்களுக்கு பலகோடி ரூபாய் மதிப்பில் முதல்வர் ஜெயலலிதா அடிக்கல் நாட்டியிருக்கிறார்.இதிலிருந்தே இதுவரை நிதிப்பற்றாக்குறை என்று சொல்லி வந்ததும், திமுக ஆட்சியின் இறுதியில் கருவூலம் காலியாக இருந்தது என்றும்கூறிவந்தது பொய் என்பது நிரூபணமாகிவிடடது.
ஆண்டிப்பட்டி தொகுதியில் மருத்துவக் கல்லூரி இன்னும் தொடங்கப்படவில்லை. ஆனால் மருத்துவமனைக் கட்டடத்தை திறந்திருப்பதுதேர்தலை மனதில் வைத்துதான்.
வீரப்பனைப் பிடிக்கச் சென்ற அதிகாரிகளின் வீடுகளில் அவர்களுடைய மனைவிமார்களிடம் டிரைவர் வேலை பார்த்தவர்களுக்குக் கூடபரிசுகள் வழங்கப்பட்டு உள்ளன. வீரப்பனைப் பிடிப்பதாக புகைப்படங்களுக்கு மட்டுமே போஸ் கொடுத்து ஓய்வுப்பெற்றஅதிகாரிகளுக்கும் கோடி ரூபாய்க்கு மேல் மதிப்புள்ள அரசு வீட்டு மனைகள் வழங்கப்பட்டுள்ளன.
ஆனால் அதிடிப்படையினரால் பாதிக்கப்பட்ட பழங்குடி மக்களுக்கு நிவாரணம் அளிக்க எந்த நடவடிக்கையும் மேற்கொள்ளப்படவில்லை.
வேலை கொடுங்கள், போனஸ் வழங்குங்கள் என்று கேட்டால் நிதிப்பற்றாக்குறை என்கிறார்கள். ஆனால் முதல்வர் தனது தொகுதியிலே ஒருவிழாவிற்கு செல்வதற்கு மட்டும் மதுரை வரை தனி விமானம், அங்கிருந்து தனி ஹெலிகாப்டர், புதிதாக பல லட்ச செலவில் ஒரு விமானதளம். இது யார் வீட்டுப் பணம்? மக்கள் தரும் வரிப்பணம் தானே. அதை ஏன் இப்படி வீணடிக்க வேண்டும்.
தூத்துக்குடியில் திமுக ஆட்சியில் மின்சார வளர்ச்சிக்காக எதுவுமே செய்யவில்லை என்று ஜெயலலிதா கூறியிருக்கிறார். கேட்பதற்கு ஆள்இல்லை என்றால் எழுதிக் கொடுப்பதையெல்லாம் படிப்பதற்கு ஜெயலலிதாவுக்கு என்ன தயக்கம் இருக்கப் போகிறது.
1990ம் ஆண்டு திமுக ஆட்சியில் வட சென்னையிலே 630 மெகாவாட் உற்பத்தித் திறன் வாய்ந்த அனல் மின் நிலையத்தை முன்னாள்குடியரசு தலைவர் வெங்கட்ராமன் அவர்களை அழைத்து தொடங்கி வைத்தோம்.
1997--98 ஆம் ஆண்டில் திமுக அரசு சிறப்பான செயல்பாட்டிற்காகவும், குறைந்த எண்ணெய் உபயோகம் மற்றும் அனல் மின் நிலையதுணை உபகரணங்களில் குறைவான மின்சக்தி உபயோகம் ஆகியவற்றுக்காக விருதுகள் வென்றது. எண்ணூ
திமுக ஆட்சியில் பிப்ரவரி 98ல் 8 மெகாவாட் திறன்கொண்ட கீழ் பவானி புனல் மின் திட்டம், பிப்ரவரி 99இல் 196 மெகாவாட் திறன்கொண்ட பேசின்பாலம் டீசல் எஞ்சின் மின் திட்டம், மார்ச் 99இல் 7.5 மெகாவாட் சாத்தனூர் புனல் திட்டம் உட்பட பல்வேறு மின் உற்பத்திநிலையங்கள் நிறுவப்பட்டன.
3,245 எம்.வி.ஏ. திறனில் 233 துணை மின் நிலையங்கள் ரூபாய் 1,720 கோடி செலவில் திமுக அரசில் நிறுவப்பட்டன. அதிமுக ஆட்சியில்66.7 சதவிகிதமாக இருந்த அனல்மின் நிலையங்களின் உற்பத்தி திமுக ஆட்சியில் 80.24 சதவிகிதமாக அதிகரித்தது.
திமுக ஆட்சியில் வெளி மாநிலங்களிலிருந்து மின்சாரம் வாங்குவது குறைக்கப்பட்டதால் தமிழ்நாடு மின்சார வாரியத்திற்கு ரூ. 174 கோடிமிச்சமானது. இதையெல்லாம் மறைத்துவிட்டு ஜெயலலிதா அதிகாரிகள் எழுதித் தரும் புள்ளி விவரங்களில் ஒளிந்து கொண்டு மக்களைஏமாற்ற எண்ணுகிறார் ஜெயலலிதா என்றார் கருணாநிதி.












Click it and Unblock the Notifications