ஸ்டெபானி கொலை: 800 பக்க குற்றச்சாட்டு
சென்னை:
சென்னையில் இளம் பெண்ணை ஈவ் டீசிங் செய்து கொன்ற வழக்கில் சென்னை சைதாப்பேட்டை நீதிமன்றத்தில் 800 பக்க குற்றப்பத்திரிக்கை தாக்கல் செய்யப்பட்டது.
கடந்த செப்டம்பர் 18ம் தேதி சென்னை மயிலாப்பூர் ராதாகிருஷ்ணன் சாலையில், மொபட்டில் சென்ற இளம் பெண் ஸ்டெபானி என்பவர்இளைஞர்கள் சிலர் குடித்துவிட்டு காரில் துரத்தியதால் விபத்து ஏற்பட்டு மரணமடைந்தார்.
இந்த வழக்கு தொடர்பாக மாணவர் நெஸ்லே, பள்ளி மாணவர் டென்வர் (19 வயது), காரை ஓட்டி வந்த வெங்கடேசன், செல்போன்நிறுவன ஊழியர் ராஜா ஆகியோரை போலீஸார் கைது செய்தனர்.
இவர்களில் டென்வர் மட்டும் ஜாமீனில் விடுதலையாகி உள்ளார். மற்ற 3 பேரும் சிறையில் உள்ளனர். அவர்களது ஜாமீன் மனு மீதானவிசாரணை இன்று விசாரணைக்கு வருகிறது.
19 வயது பள்ளி மாணவர் இந்த ஈவ் டீசிங் சம்பவத்தில் ஈடுபட்டிருந்தது தெரிய வந்தபோது தமிழகம் அதிர்ந்தது. மேலும், அவர்கள்நட்சத்திர ஹோட்டலில் மது அருந்தி விட்டு அங்கு நடனமாடிய பெண்ணை காரில் துரத்திச் சென்று கொன்றுள்ளனர்.
இதைத் தொடர்ந்து இரவு 11 மணிக்கு மேல் பார்களைத் திறந்து வைக்கக் கூடாது, 21 வயதுக்குட்பட்ட இளைஞர்களுக்கு மது பானம் விற்கக்கூடாது என்று தமிழக அரசு கட்டுப்பாடுகளை அறிவித்தது.
இந் நிலையில் ஸ்டெபானி வழக்கில் குற்றப் பத்திரிக்கையை போலீசார் தாக்கல் செய்துள்ளனர்.
சென்னை சைதாப்பேட்டை 18வது பெருநகர குற்றவியல் நீதிமன்றத்தில் அரசு வழக்கறிஞர் சங்கர் 800 பக்க குற்றப் பத்திரிக்கையை தாக்கல்செய்தார்.
மொத்தம் 7 பிரிவுகளின் கீழ் 4 பேர் மீதும் குற்றம் சுமத்தப்பட்டள்ளது. 53 பேர் சாட்சிகளாக சேர்க்கப்பட்டுள்ளனர். வரும் 15ம் தேதி இந்தவழக்கு விசாரணைக்கு வரவுள்ளது. அப்போது செஷன்ஸ் நீதிமன்றத்திற்கு இந்த வழக்கு மாற்றப்படும்.
-
சூட்டோடு சூடா.. அதையும் ஒரு கை பாத்துருவோம்! அடுத்த பரிட்சைக்கு தயாரான விஜய்! வேகமெடுக்கும் பணிகள்! -
அந்த ‘4’ ஓல்டு ஸ்டூடண்ட்ஸ்.. என்னை ஒதுக்கி ஓரம் கட்டிட்டாங்க! நபினிடம் கொட்டித் தீர்த்த அண்ணாமலை! -
கொ*யில் முடிந்த பார் டான்ஸ்.. கொதித்துப் போன கோயம்பேடு! யான்சிக்கு இப்படியா சாவு வரனும்! ஷாக்! -
"RSS பிடியில் தமிழ்நாடு.." இந்து முன்னணி தலைவரிடம் வாழ்த்து பெற்ற அமைச்சர்கள்.. திமுக கடும் தாக்கு -
"வரும் சட்டமன்ற கூட்ட தொடரிலேயே ஆணவ கொலைக்கு எதிரான தனி சட்டம்!" அமைச்சர் வன்னியரசு முக்கிய தகவல் -
புதிய கட்சி தொடங்கும் அண்ணாமலை? கடைசி வரை மறுப்பே சொல்லல பாருங்க.. அப்போ கன்பார்ம் தானா? -
கோடை விடுமுறை முடிந்து... சென்னை திரும்பும் மக்கள்! 10 கி.மீ தூரத்திற்கு போக்குவரத்து நெரிசல்! -
வருங்கால இளைஞர்களுக்கு வழிவிடுங்க! அதிமுக ராஜசத்யன் திடீர் ட்வீட்! டீகோடு செய்து பார்த்தால்..! -
தமிழகத்தில் 3வது குழந்தை பெற்றுக்கொண்டால் சலுகை? சுகாதாரத்துறை அமைச்சருக்கு விசிக கடிதம் -
விஜய் நிறைவேற்றியே ஆகணும்.. பழைய ஓய்வூதியம் டூ 4 ‘டிமாண்ட்'.. பிரஷர் போடும் அரசு ஊழியர் சங்கம் -
வாட்டி எடுத்த வெயில்! வேலூரில் அதிகபட்சமாக 106°F பதிவு! 15 இடங்களில் செஞ்சுரி! -
ராணிப்பேட்டை டூ தேனி வரை.. 16 மாவட்டங்களில் பேய் மழை! வார்னிங் கொடுத்த வானிலை மையம்












Click it and Unblock the Notifications