அப்புவுக்கு அடைக்கலம்: போலீஸ் எச்சரிக்கை
காஞ்சிபுரம்:
அப்புவுக்கு யாராவது அடைக்கலம் கொடுத்தால் அவர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என காஞ்சிபுரம் போலீஸார் எச்சரிக்கைவிடுத்துள்ளனர்.
இதுதொடர்பாக காஞ்சிபுரம் மாவட்ட காவல்துறைக் கண்காணிப்பாளர் அலுவலகம் வெளியிட்ட அறிக்கையில், சங்கரராமன் கொலைவழக்கில் சம்பந்தப்பட்டுள்ள 2வது குற்றவாளி ரவி சுப்ரமணியம் மற்றும் 3வது குற்றவாளியான அப்பு ஆகியோர் தொடர்ந்துதலைமறைவாக உள்ளனர்.
அவர்களுக்கு அவர்களின் உறவினர்களோ, நண்பர்களோ அடைக்கலம் கொடுக்கக் கூடாது. அப்படிக் கொடுப்பது சட்டப்படி குற்றமாகும்.குற்றவாளிகளாக அறிவிக்கப்பட்டுள்ள இருவருக்கும் அடைக்கலம் கொடுப்போர், உதவுவோர் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும் எனஎச்சரிக்கப்பட்டுள்ளது.
இந் நிலையில், அப்புவின் இருப்பிடம் குறித்த தகவல்களை அறிவதற்காக அவரது நண்பர் செல்வராஜ், உறவினர் உமாபதி ஆகியோரிடம்காஞ்சிபுரம் போலீஸார் தீவிர விசாரணை நடத்தினர்.
பெங்களூரில் அப்பு?:
இதற்கிடையே, அப்புவையும், ரவி சுப்ரமணியத்தையும் பிடிக்க அமைக்கப்பட்டுள்ள 3 தனிப்படைகளில் ஒன்று, பெங்களூரில்முகாமிட்டுள்ளது. அப்பு பெங்களூரில் பதுங்கியிருப்பதாக வந்த தகவலையடுத்து போலீஸ் படை அங்கு விரைந்துள்ளதாகத் தெரிகிறது.
சொத்துகள் முடக்கம்?:
இதற்கிடையே அப்புவின் கோடிக்கணக்கான ரூபாய் மதிப்புடைய சொத்துக்ளை முடக்க போலீஸார் நடவடிக்கை எடுத்துவருகின்றனர். அப்புவின் சொத்து விவரங்கள் குறித்து அவரது நண்பர்கள் மற்றும் உறவினர்களிடம் போலீஸார் விசாரித்துவருகின்றனர்.
விரைவில் அவரது சொத்துக்கள் முடக்கப்படும் என்று தெரிகிறது. ஏற்கனவே அப்புவின் பாஸ்போர்ட் முடக்கிவைக்கப்பட்டிருப்பது குறிப்பிடத்தக்கது.
-
கோவை, நீலகிரியில்.. கன முதல் மிக கனமழை பெய்யும்! மொத்தம் 11 மாவட்டங்களுக்கு வார்னிங்! -
பத்திரப்பதிவு செய்ய இனி சார் பதிவாளர் அலுவலகங்களுக்கு நேரில் செல்ல வேண்டாம்! தமிழக அரசு அதிரடி! -
ரூ. 20,000 கோடி 'ஸ்மார்ட் மீட்டர்' திட்டத்திற்கு மூடுவிழாவா? அமைச்சர் நிர்மல் குமார் விளக்கம் -
கமல், கார்த்திக் கூடதான் கட்சி ஆரம்பிச்சாங்க! என்னாச்சு? அண்ணாமலைலாம் ஒரு ஆளே இல்லை! முஸ்தபா விமர்சனம் -
மாதம் 2500 மகளிர் உரிமை தொகை தருவதற்கு தமிழக அரசுக்கு எவ்வளவு பணம் தேவை.. அரசுக்கு மாற்று வழிகள் -
Real Estate: தமிழகத்தில் கட்டுமான பொருட்களின் விலை கிடுகிடு உயர்வு! வீடு கட்டுவோர் கவலை! -
மினி பஸ்சில் லைட்டை ஆப் செய்து.. 45 நிமிடம் அட்டகாசம்! கிளம்பும்போது கோவை ஜோடி எடுத்து சென்ற பொருள்? -
அண்ணாமலையின் ஸ்கெட்ச்.. பாஜகவுக்கு இல்லை! அதிமுகவுக்குதான்! எடப்பாடி பழனிசாமி ஷாக்! -
கஜானா காலியா? விஜய் சொன்ன மேட்டர்.. அப்படி எல்லாம் ஆகாது! உடைத்து பேசிய ப.சிதம்பரம் -
செந்தில் பாலாஜி கைதாகிறாரா? தவெக கடிதத்திற்கு ஓகே சொன்ன ஆளுநர்! மறுபடியும் முதல்ல இருந்தா? -
திமுகவை சீண்டும் துரை வைகோ.. இன்னைக்கு என்ன சொல்லி இருக்காருன்னு பாருங்க! புது பஞ்சாயத்து -
விஜய் வந்தும் வேலைக்கு ஆகல! சர்ச்சையை கிளப்பும் சட்டம் ஒழுங்கு.. டிஜிபி அதிரடி உத்தரவு!












Click it and Unblock the Notifications