நாடாளுமன்றம் முற்றுகை: மீனவர்கள் முடிவு
சென்னை:
இலங்கை கடற்படை வீரர்களின் அடாவடிப் போக்கைத் தடுத்து நிறுத்தக் கோரி நாடாளுமன்றம் முன்பு போராட்டம் நடத்த ராமேஸ்வரம்,புதுக்கோட்டை பகுதி மீனவர்கள் முடிவு செய்துள்ளனர்.
ராமேஸ்வரம், புதுக்கோட்டை மாவட்ட மீனவர்கள் அடிக்கடி இலங்கை கடற்படை வீரர்களால் தாக்கப்படுவதும், கடத்தப்படுவதும்,அவர்களது படகுகள் பறிமுதல் செய்யப்படுவதும் அதிகரித்து வருகிறது.
கடந்த 9ம் தேதி புதுக்கோட்டை மாவட்டம் ஜெகதாப்பட்டனத்தைச் சேர்ந்த 13 மீனவர்களை இலங்கை கடற்படையினர் பிடித்துச் சென்றுவிட்டனர். அத்தோடு ராமேஸ்வரத்தைச் சேர்ந்த மீனவர்கள் மீது தாக்குதலும் நடத்தப்பட்டது. இதில் 3 படகுகள் கடலில் மூழ்கடிக்கப்பட்டன.
இதையடுத்து ராமேஸ்வரம் மற்றும் புதுக்கோட்டை மாவட்ட மீனவர்கள் காலவரையற்ற வேலைநிறுத்தப் போராட்டத்தில் குதித்துள்ளனர்.தங்களது அடுத்த கட்டப் போராட்டம் குறித்து தமிழக-புதுவை மீனவர் கூட்டமைப்பின் பொதுச் செயலாளர் என்.ஜே.போஸ் கூறுகையில்,
மத்திய, மாநில அரசுகள் மீனவர் விஷயத்தில் எங்களை தொடர்ந்து புறக்கணித்து வருகின்றன.எங்களது நீண்ட நாள் கோரிக்கைகளை இருஅரசுகளும் புறந்தள்ளி வருகின்றன. தற்போது காலவரையற்ற வேலைநிறுத்தம் செய்து வரும் மீனவர்கள், அடுத்த கட்டமாக டெல்லி சென்றுநாடாளுமன்றம் முன்பு ஆர்ப்பாட்டம் நடத்தத் திட்டமிட்டு வருகிறோம்.
இந்தப் போராட்டத்திற்கான தேதி விரைவில் அறிவிக்கப்படும். கச்சத் தீவு பகுதியில் மீன் பிடிப்பது எங்களது பாரம்பரிய உரிமை. அதைநாங்கள் நிச்சயம் விட்டுக் கொடுக்க மாட்டோம. எங்களது உயிர் இருக்கும் வரை போராடுவோம் என்றார் அவர்.












Click it and Unblock the Notifications