காட்டு பங்களா சாலைக்கு தடை
காஞ்சிபுரம்:
சங்கரராமன் வழக்கு, சங்கர மடம் தொடர்பான விவகாரங்களை விசாரிக்க ஒதுக்கப்பட்டுள்ள காட்டுப் பங்களாவின் வழியாக செல்லும்பொதுப்பாதையை போலீஸார் மூடி விட்டதால் 5,000க்கு மேற்பட்ட பொதுமக்கள், மாணவர்கள் பாதிக்கப்பட்டுள்ளனர்.
காஞ்சிபுரம் மாவட்ட ஆட்சித் தலைவர் அலுவலக வளாகத்தில் உள்ளது இந்த காட்டுப் பங்களா. பொதுப் பணித்துறைக்குச் சொந்தமானஇந்த பங்களாவுக்கு இரு பக்கமும் ஆட்சித் தலைவர் இல்லம், எஸ்.பி. இல்லம் உள்ளன.
நடுவே செல்லும் பாதை வழியாக மக்கள் புழங்கி வந்தனர். காஞ்சிபுரம்-வந்தவாசி மெயின் ரோடு, காஞ்சிபுரம்-உத்திரமேரூர் முக்கியச்சாலையை இணைக்கும் சாலையாக இது இருந்து வந்தது. மேலும் இப்பகுதியில் ஒரு மேல் நிலைப் பள்ளியும் சில நகர்களும் உள்ளன.
இந் நிலையில் திடீரென போலீஸார் இந்த சாலையை மூடி விட்டனர். இந்த சாலை வழியாக யாரும் செல்லக் கூடாது என்று போலீஸார்உத்தரவிட்டுள்ளனர். மேலும், கருவேல மரச் செடிகளை சாலையில் போட்டு தடுப்பும் ஏற்படுத்தியுள்ளனர்.
விசாரணை நடக்கும் பங்களாவிற்குள் யார் கொண்டு வரப்படுகிறார்கள், என்பதை பத்திரிககையாளர்களும் இந்த சாலை வழியாக இருந்துகொண்டுதான் கண்காணித்து வந்தனர். இப்போது இதற்குத் தடை ஏற்படுத்தப்பட்டு விட்டதால் பத்திரிக்கையாளர்கள் மட்டுமல்லாதுஅப்பகுதியைச் சேர்ந்த 5,000க்கும் மேற்பட்டோர் பாதிக்கப்பட்டுள்ளனர்.
முக்கியச் சாலைக்கு செல்ல வேண்டுமானால் தற்போது 2 கிலோமீட்டர் சுற்றிச் செல்ல வேண்டியுள்ளதாக அப்பகுதி மக்கள் கூறுகிறார்கள்.மாணவர்களுக்கும் பெரும் அவதி ஏற்பட்டுள்ளது. அவர்களால் உரிய நேரத்திற்கு பள்ளிக்குச் செல்ல முடியாத நிலை ஏற்பட்டுள்ளது.
-
தமிழகத்தில் முந்தைய ஆண்டுகளை விட அதிகரித்த சர்க்கரை நோய் பாதிப்பு! பெண்களை விட ஆண்களுக்கு அதிகம் -
Ajith Kumar: நடிகர் அஜித்குமாரின் தாய் மோகினி காலமானார்! -
தமிழக குழந்தைகள் எவ்வளவு பாதுகாப்பாக உள்ளனர்? தடுப்பூசி குறித்து வெளியான புதிய டேட்டா -
"22 வயதில் ஐபிஎஸ் - பஞ்சாப்பை சேர்ந்தவர்".. தமிழகத்தின் புதிய டிஜிபி மகேஷ் குமார் அகர்வால் யார்? பின்னணி -
இந்திய ரயில்வே வரலாற்றில் விசித்திரம்! சேலம்- சென்னை ஓடும் ரயிலில் ரூ.5.78 கோடி கொள்ளை நினைவிருக்கா? -
வேலூர் டூ கன்னியாகுமரி.. 19 மாவட்டங்களில் கொட்டி தீர்க்கப்போகும் மழை! அடுத்த 2 மணி நேரம் உஷார்! -
கனிமவள கொள்ளைக்கு ‘செக்'.. 67 குவாரிகளுக்கு பூட்டு - 469 வாகனங்கள் பறிமுதல்! அமைச்சர் பிரபு அதிரடி -
சென்னையில் சிறுவனுக்கு பாலியல் தொல்லை.. காவலரை டிஸ்மிஸ் செய்து அதிரடி உத்தரவிட்ட ஆணையர்! -
தமிழகத்தில் 30 ஐஏஎஸ் அதிகாரிகள் அதிரடி மாற்றம்.. மதுரை உள்பட பல மாவட்டங்களின் கலெக்டர்கள் இடமாற்றம் -
4 ஆயிரம் உதவி பேராசிரியர் பணியிடங்கள்! 6 மாதத்திற்குள் தேர்வு நடத்த வேண்டும்.. சென்னை ஐகோர்ட் அதிரடி -
திருச்செந்தூர் முருகன் கோயிலில் அர்ச்சகருக்கு தடை மட்டும் விதிக்கப்பட்டது ஏன்? அமைச்சர் விளக்கம்! -
தேசிய நெடுஞ்சாலையில் செல்பவர்களுக்கு குட் நியூஸ்.. வருது சுங்கக் கட்டண சலுகை.. யாருக்கு பொருந்தும்?












Click it and Unblock the Notifications