ஜெயேந்திரரை சந்திப்பேனா மாட்டேனா: குட்டி சாமி புதிர்
சேலம்:
ஜெயேந்திரரை சிறையில் சென்று சந்திப்பேனா மாட்டேனா என்று எனக்கே தெரியாது என்று மிகத் தெளிவாக கூறினார் குட்டி சாமியார்பரணீதரன்.
சேலத்தில் இன்று நிருபர்களிடம் அவர் கூறியதாவது:
சங்கராச்சாரியார் கைது காரணமாக நானும் தலைமறைவாகிவிட்டதாக சிலர் புரளி கிளப்பிவிட்டுவிட்டார்கள். நான் மும்பைக்குச் சென்றுஷீரடி பாபாவை தரிசிரித்தேன். எனக்கு உடல் நலக்குறைவும் ஏற்பட்டுள்ளது.
ஸ்கேன் எடுக்கப்பட்டதில் எனது தலையில் நரம்பு மண்டலம் பாதிக்கப்பட்டது தெரியவந்தது. கண்ணாடி போடச் சொன்னதால் மூக்குக்கண்ணாடி போட்டுக் கொண்டுள்ளேன்
.நான் சென்னையில் ஆஸ்ரமம் தொடங்கப் போவதாக சிலர் கிளப்பி விடுகிறார்கள். நான் சேலத்தில் தான் இருக்கப் போகிறேன். இங்கே என்ஆஸ்ரமம் அமையும். அது எப்போது என்பது பகவானின் அனுகிரகத்தைப் பொறுத்தது. அந்த ஆஸ்ரமத்தில் நரசிம்மரையும், ஈஸ்வரனையும்பிரதிஷ்டை செய்வேன்.
நான் காஞ்சி மடத்துக்கு வாரிசாக மாட்டேன். அதே போல மதுரை ஆதீனத்துடன் நெருக்கமாக இருந்ததால் தான் அதன் இளையமடாதிபதியை ஆதீனம் நீக்கியதாக சொல்கிறார்கள். இவையெல்லாம் தவறான செய்திகள்.
சங்கராச்சாரியாருக்கு ஏற்பட்டுள்ள சிறைவாசம் ஆண்டவன் கொடுத்துள்ள சோதனை. ஒழுக்கம் தவறினால் ஆன்மீகத்துக்கு பிரச்சனைவரும். சிறையில் இருக்கும் ஜெயேந்திரரை சந்திப்பேனா மாட்டேனா என்று எனக்கே தெரியாது (அடே..!!). கடவுள் சித்தம் இருந்தால் எதுநடக்க வேண்டுமோ அது நடக்கும் (அடடே..!!).
நான் காஞ்சி சென்று சங்கராச்சாரியாரை சந்தித்த பிறகு தான் அவருக்கு கெட்ட நேரமே தொடங்கியதாக சிலர் பேசுகின்றனர். நான் அவரைகாஞ்சியில் சந்திக்கவே இல்லை. நான் சந்தித்தது சென்னையில். ஜெயேந்திரரின் யோசனையை ஏற்று 7 கணுக்கள் கொண்ட தண்டம்வைத்திருக்கிறேன்.
அவர் எனக்கு மகாமந்திர உபதேசம் தந்தார். பூஜை செய்ய ஸ்படிக லிங்கம் தந்தார். ஜெயேந்திரரை சந்தித்தது தொடர்பாக போலீஸ்விசாரிக்க வந்தால் ஒத்துழைப்பு தரத் தயார்.
என்னைச் சுற்றி ரெளடிகள் இருக்கிறார்கள் என்று பொய்யைப் பரப்புகிறார்கள். தமிழ்நாட்டில் சாமியார்கள் அடுத்தடுத்து புகார்களுக்குஉள்ளாகி வருவது ஆன்மிகத்துக்கே ஏற்பட்ட சோதனை என்றார் குட்டிச் சாமியார்.
அப்போது உடனிருந்த குட்டி சாமியின் தாயார் சாவித்திரி கூறுகையில்,
என் மகன் தெய்வ வடிவானவன். அவனை இந்த உலகத்துக்கே கொடுத்துவிட்டேன். அவருக்கு சேவை செய்வது என் கடமை என்றார்.
இவரே தான் பல மாதங்களுக்கு முன் தனது மகனை சிலர் தங்கள் கட்டுப்பாட்டில் வைத்துக் கொண்டு குட்டி சாமியார் என்ற பெயரில் பணம்பார்ப்பதாக குற்றம் சாட்டினார் என்பது நினைவுகூறத்தக்கது.
எல்லாம் அவன் செயல்....!!!
-
தமிழ்நாடு முதலமைச்சர் விஜய் காவல்துறை அதிகாரிகளுக்கு அவசர உத்தரவு -
ஐபிஎஸ் டிரான்ஸ்ஃபர்! காத்திருப்போர் பட்டியலில் இருந்த அருண் IPS-க்கு சூப்பர் பதவி கொடுத்த விஜய் -
பிச்சு உதற போகுது கனமழை.. 7 மாவட்டங்களில் டமால் டுமீல் தான்! வங்கக்கடல் சக்கரத்தால் இனி கூலிங் தான்! -
சொத்து பதிவு பிரச்சனைக்கு தீர்வு.. STAR 3.0 மூலம் தமிழக பதிவுத்துறை கொண்டுவந்த புதிய வசதி -
திரையரங்குகளில் 5 காட்சிகளுக்கு அனுமதி! முதலமைச்சர் விஜய் அதிரடி உத்தரவு! திரை துறையினர் ஹேப்பி! -
இலவசம் அரசு பஸ்களில்.. இப்போ எங்கே தெரியுமா? நம்ம தமிழகத்தின் விடியல் பயணம்தான் இதில் பெஸ்ட் -
23 தொகுதிகளில் காங்கிரஸ் தோல்வி! தேர்தல் நிதியில் முறைகேடு? ஐவர் குழு அமைப்பு! வேட்பாளர்கள் ஷாக் -
தாய்மாமன் என வசனம் பேசிய விஜய்.. குழந்தைகள் பாலியல் மிருகங்களிடம் சீரழிவதை வேடிக்கை பார்க்கிறாரா? -
இடைத்தேர்தலில் மீண்டும் மதுராந்தகம் தொகுதியில் போட்டியிடுவீர்களா? மரகதம் குமரவேல் ரியாக்ஷன் என்ன? -
லேட் ஆகுது மதுரவாயல் பாலம்.. முடங்கும் கார் ஏற்றுமதி! சென்னை போர்ட்டில் நடப்பது என்ன? எக்ஸ்க்ளூசிவ் -
பிரதமர் மோடியை வணங்கி.. பத்மஸ்ரீ விருது பெற்ற சிலம்ப கலைஞர் பழனிவேல்! தமிழருக்கு பெரிய கவுரவம் -
தங்க நகை கடன் சந்தையில் ஆதிக்கம் செலுத்தும் டாப் 5 தென் மாநிலங்கள்! தமிழகத்திற்கு எத்தனையாவது இடம்?












Click it and Unblock the Notifications