இலங்கை அகதியை சுட முயன்ற முன்னாள் எஸ்பி
கடையநல்லூர்:
இலங்கை அகதியை துப்பாக்கியால் சுட்டுக் கொல்ல முயன்ற முன்னாள் டிஎஸ்பி தலைமறைவாகிவிட்டார். அவரை போலீசார் தேடிவருகின்றனர்.
திருநெல்வேலி மாவட்டம் கடையநல்லூரில் வசிக்கும் மருதையா பாண்டியன், ஓய்வு பெற்ற காவல்துறை டிஎஸ்பியாவார். பணியில்இருந்தபோது நல்ல சொத்து சேர்த்த இவருக்கு சுந்தரேசபுரம் பகுதியில் ஏக்கர் கணக்கில் விவசாய நிலங்கள் உள்ளன.
நிலம் தொடர்பாக இவருக்கும் சந்தன பாண்டியன் என்பவருக்கும் தகராறு இருந்து வந்தது. நேற்று முன் தினமும் இரு தரப்பினருக்கும்சண்டை மூண்டது. இது காவல் நிலையத்துக்குப் போனது. அங்கு வைத்து சமரசமும் பேசப்பட்டது.
இந் நிலையில் ஓய்வு பெற்ற எஸ்பி மருதையா பாண்டியன் நேற்றிரவு துப்பாக்கியுடன் சந்தன பாண்டியனின் தோட்டத்துக்கு வந்தார். அங்குகாவலாளியாகப் பணியாற்றும் இலங்கை அகதியான செபாஸ்டியனை (56) அடித்து உதைத்தார்.
சந்தன பாண்டியன் எங்கே என்று கேட்டவாரே அவரைத் தாக்கினார். செபாஸ்டியன் எதிர்த்து தாக்க முயன்றபோது துப்பாக்கியால் சுட்டார்மருதையா. நல்லவேளையாக குண்டு வேறு பக்கமாகப் போனது.
இதையடுத்து அங்கிருந்து தப்பியோடி காவல் நிலையத்துக்கு வந்து புகார் தந்தார் செபாஸ்டியன். போலீசார் மருதையாவைத் தேடிச்சென்றபோது ஆள் தலைமறைவாகிவிட்டார். அவரை போலீசார் தேடி வருகின்றனர்.
-
மாதம் 2500 மகளிர் உரிமை தொகை தருவதற்கு தமிழக அரசுக்கு எவ்வளவு பணம் தேவை.. அரசுக்கு மாற்று வழிகள் -
Real Estate: தமிழகத்தில் கட்டுமான பொருட்களின் விலை கிடுகிடு உயர்வு! வீடு கட்டுவோர் கவலை! -
மினி பஸ்சில் லைட்டை ஆப் செய்து.. 45 நிமிடம் அட்டகாசம்! கிளம்பும்போது கோவை ஜோடி எடுத்து சென்ற பொருள்? -
அண்ணாமலையின் ஸ்கெட்ச்.. பாஜகவுக்கு இல்லை! அதிமுகவுக்குதான்! எடப்பாடி பழனிசாமி ஷாக்! -
கஜானா காலியா? விஜய் சொன்ன மேட்டர்.. அப்படி எல்லாம் ஆகாது! உடைத்து பேசிய ப.சிதம்பரம் -
பேய் மழை வெளுக்கப் போகுது.. கோவை, நீலகிரியில் மிக கனமழை! 11 மாவட்டங்களுக்கு கனமழை எச்சரிக்கை! -
செந்தில் பாலாஜி கைதாகிறாரா? தவெக கடிதத்திற்கு ஓகே சொன்ன ஆளுநர்! மறுபடியும் முதல்ல இருந்தா? -
2031 வரை அண்ணாமலை காத்திருக்க மாட்டார்.. அவரின் உண்மையான திட்டம் இதுதான்.. வெளியான தகவல்! -
திமுகவை சீண்டும் துரை வைகோ.. இன்னைக்கு என்ன சொல்லி இருக்காருன்னு பாருங்க! புது பஞ்சாயத்து -
பத்திரப்பதிவு செய்ய இனி சார் பதிவாளர் அலுவலகங்களுக்கு நேரில் செல்ல வேண்டாம்! தமிழக அரசு அதிரடி! -
ரூ. 20,000 கோடி 'ஸ்மார்ட் மீட்டர்' திட்டத்திற்கு மூடுவிழாவா? அமைச்சர் நிர்மல் குமார் விளக்கம் -
கமல், கார்த்திக் கூடதான் கட்சி ஆரம்பிச்சாங்க! என்னாச்சு? அண்ணாமலைலாம் ஒரு ஆளே இல்லை! முஸ்தபா விமர்சனம்












Click it and Unblock the Notifications