பிரேம்குமாரிடம் துப்பாக்கி முனையில் பிடிபட்ட அப்பு
திருப்பதி:
கூலிப் படைத் தலைவன் அப்புவை துப்பாக்கி முனையில் கைது செய்ததாக எஸ்.பி. பிரேம்குமார் கூறியுள்ளார். ஆனால், அவன் தானாகவேசரணடைந்தாக அவனது மைத்துனர்கள் கூறுகின்றனர்.
சங்கரராமன் கொலை வழக்கின் நாயகனான அப்புவைப் பிடிக்க போலீஸ் படைகள் அமைக்கப்பட்டு நாட்டின் பல பகுதிகளிலும்போலீஸார் தேடுதல் வேட்டையை நடத்தி வந்தனர். அவனைப் பற்றிய தகவல் தந்தால் ரூ. 1 லட்சம் தரப்படும் எனவும் அறிவிக்கப்பட்டது.
இந் நிலையில் அப்பு அவனது சொந்த ஊரான சித்தூர் மாவட்டம் புத்தூர் அருகே உள்ள பாலகிருஷ்ணாபுரத்தில் வைத்துபிடிக்கப்பட்டுள்ளான். அவனைத் துப்பாக்கி முனையில் கைது செய்ததாக எஸ்.பி. பிரேம்குமார் கூறியுள்ளார்.
பிரேம்குமார் கூறுகையில், அப்புவைத் தேடி கடந்த 3 மாதங்களுக்கும் மேலாக தனிப்படை போலீஸார் தீவிர தேடுதல் வேட்டையில்ஈடுபட்டு வந்தனர். இரவு பகலாக நடந்து வந்த தேடுதல் வேட்டையின் இறுதியில், சொந்த ஊரான பாலகிருஷ்ணாபுரம் அருகே அப்புபதுங்கியிருப்பதாகத் தகவல் கிடைத்தது.
இதையடுத்து போலீஸ் படையுடன் அங்கு விரைந்தேன். பாலகிருஷ்ணாபுரம் அருகே உள்ள மலைப் பகுதியில் அப்பு பதுங்கியிருந்தார்.அவரைப் பிடிக்க முயன்றபோது தப்பியோட முயன்றார்.
இதையடுத்து துப்பாக்கியைக் காட்டி மிரட்டி அப்புவைப் பிடித்தோம் என்றார் பிரேம்குமார்.
பிரேம்குமார் இப்படிக் கூறினாலும், அப்புவின் அக்காள் கணவர் செங்கல்வரயாலு ரெட்டியோ தனது வீட்டில் வைத்து போலீஸாரிடம்அப்பு சரணடைந்ததாகக் கூறுகிறார்.
மைத்துனர் தரப்பினர் கூறுவது:
பாலகிருஷ்ணபுரத்தில்தான் அப்புவின் பண்ணை வீடும், அவரது சகோதரி பத்மாவின் வீடும் உள்ளது. நேற்று பகல் பத்மாவின் வீட்டுக்குபிரேம்குமார் தலைமையிலான போலீஸ் குழு வந்தது.
அங்கு வைத்து செங்கல்வராயலு, இன்னொரு சகோதரியின் கணவர் ராமச்சந்திர ரெட்டி ஆகியோருடன் பிரேம்குமார் பேச்சுவார்த்தைநடத்தினர்.
அப்பு சரணடைந்தால் அவனது உயிருக்கு ஆபத்து ஏற்படாது என்று அப்புவின் மைத்துனர்களிடம் பிரேம்குமார் உறுதியளித்தார். சுமார் 2மணி நேரப் பேச்சுவார்த்தைக்குப் பின்னர் பிரேம்குமாரின் உறுதிமொழியால் அப்புவின் மைத்துனர்கள் சமாதானமடைந்தனர்.
அதன் பின்னர் அப்பு அங்கு வரவழைக்கப்பட்டார். தான் சரணடைவதாக பிரேம்குமாரிடம் அப்பு தெரிவித்தார். இவ்வாறு மைத்துனர்தரப்பு கூறுகிறது.
டிப் டாப்பாக இருந்த அப்பு:
மழுங்க ஷேவ் செய்த முகத்துடன், டிப் டாப் உடையில் காணப்பட்ட அப்பு பிரேம்குமார் உள்ளிட்ட போலீஸ் அதிகாரிகளுடன் சகஜமானமுறையில் சிரித்தபடி காணப்பட்டான்.
அவனைப் பார்த்தால் காட்டில் ஓடி பதுங்கியிருந்து துப்பாக்கி முனையில் பிடிக்கப்பட்டதைப் போலத் தெரியவில்லை.
போலீஸ் பாதுகாப்பில் தனது உயிருக்கு எந்தவித ஆபத்தும் ஏற்படக் கூடாது என்ற நிபந்தனையுடன் அப்பு சரணடைய முன் வந்ததாககூறப்படுகிறது. அப்பு சரணடைந்த பின்னர் அவனது வீட்டில் வைத்து ஒரு மணி நேரம் பிரேம்குமார் விசாரணை நடத்தினார். அதன்பின்னர்தான் அவனை காரில் ஏற்றிக் கொண்டு போலீஸ் குழு கிளம்பியது.
போலீஸில் சரணடைவதற்கு முன்பு சில பத்திரிக்கையாளர்களும், தெலுங்கு டிவி சானலின் நிருபர் ஒருவரும் அப்புவை பேட்டிகண்டுள்ளனர்.
-
"RSS பிடியில் தமிழ்நாடு.." இந்து முன்னணி தலைவரிடம் வாழ்த்து பெற்ற அமைச்சர்கள்.. திமுக கடும் தாக்கு -
புதிய கட்சி தொடங்கும் அண்ணாமலை? கடைசி வரை மறுப்பே சொல்லல பாருங்க.. அப்போ கன்பார்ம் தானா? -
தமிழகத்தில் 3வது குழந்தை பெற்றுக்கொண்டால் சலுகை? சுகாதாரத்துறை அமைச்சருக்கு விசிக கடிதம் -
கோடை விடுமுறை முடிந்து... சென்னை திரும்பும் மக்கள்! 10 கி.மீ தூரத்திற்கு போக்குவரத்து நெரிசல்! -
ராணிப்பேட்டை டூ தேனி வரை.. 16 மாவட்டங்களில் பேய் மழை! வார்னிங் கொடுத்த வானிலை மையம் -
"2.0 அவதாரம் எடுக்கும் அண்ணாமலை!".. பாஜகவா? புதிய கட்சியா? அரசியல் களத்தை அலற விட்ட போஸ்டர்கள் -
சென்னையில் விட்டு விளாச போகுது.. இன்று 17 மாவட்டங்களில் கனமழை பெய்யும்.. வானிலை மையம் எச்சரிக்கை -
Weather: பலத்த இடி, மின்னல், காற்றுடன் 17 மாவட்டங்களுக்கு கனமழை அலெர்ட்! வானிலை மையம் சொல்வதென்ன? -
கொ*யில் முடிந்த பார் டான்ஸ்.. கொதித்துப் போன கோயம்பேடு! யான்சிக்கு இப்படியா சாவு வரனும்! ஷாக்! -
வருங்கால இளைஞர்களுக்கு வழிவிடுங்க! அதிமுக ராஜசத்யன் திடீர் ட்வீட்! டீகோடு செய்து பார்த்தால்..! -
சென்னை துறைமுகம் மதுரவாயல் ஈரடுக்கு மேம்பாலம்: 60% பணிகள் ஓவர்! போக்குவரத்து நெரிசல் விரைவில் முடிவு -
பெங்களூருக்கு ஜில் அப்டேட் கொடுத்த வெதர்மேன்! மழை கொட்டப்போகுது.. சென்னை நிலவரம் என்ன? விவரம்!












Click it and Unblock the Notifications