ரவி சுப்பிரமணியம் தற்கொலை?!
காஞ்சிபுரம்:
அப்புவை 7 நாள் போலீஸ் காவலில் எடுக்கத் திட்டமிட்டுள்ளதாக காஞ்சிபுரம் எஸ்.பி. பிரேம்குமார் தெரிவித்தார். ரவிசுப்பிரமணியம் தற்கொலை செய்து கொண்டதாக வரும் தகவல்களை அவர் மறுத்தார்.
அப்புவை காஞ்சிபுரம் கொண்டு வந்து நிருபர்கள் முன் ஆஜர்படுத்திய பிரேம்குமார் கூறியதாவது:
இன்று மாலை நீதிமன்றத்தில் அப்புவை ஆஜர்படுத்தவுள்ளோம். அவனை 7 நாள் போலீஸ் காவலில் எடுத்து விசாரிக்கநீதிமன்றத்திடம் அனுமதி கோரவுள்ளோம்.
அப்பு பிடிபட்டது இந்த வழக்கில் மிக முக்கியமான திருப்பமாகும். அவனிடம் தொடர்ந்து விசாரணை நடக்கும். சங்கரராமன்கொலைக்கு முன்பாக காஞ்சி மடத்துக்கு 12 முறை வந்து சென்றிருக்கிறான் அப்பு. அதற்கான ஆதாரம் எங்களிடம் உள்ளது.
கோவா, நாக்பூர், மும்பை, டெல்லி, ஹைதராபாத் என பல இடங்களில் அப்புவை தனிப் படை போலீசார் தேடியலைந்தனர். உச்சநீதிமன்றத்தில் சங்கராச்சாரியாருக்கு ஜாமீன் மறுக்கப்பட்டவுடன் அப்புவுடன் பல வழிகளில் தொடர்பு கொள்ள ஆரம்பித்தோம்.அதே நேரத்தில் திருப்பதி, புத்தூர், சித்தூர் ஆகிய இடங்களில் கண்காணிப்பை தீவிரப்படுத்தினோம்.
குறிப்பாக கடந்த 3 நாட்களாக சித்தூரில் இரவு, பகலாக தூங்காமல் ரகசியமாக கண்காணிப்பில் ஈடுபட்டோம். அப்பு இருக்கும்இடம் உறுதியானதும் மாறுவேடத்தில் தனியார் வாகனங்களில் பாலகிருஷ்ணாபுரத்தை சுற்றி வந்தோம். மலையடிவாரபங்களாவில் துப்பாக்கி முனையில் சுற்றி வளைத்தவுடன் எந்த எதிர்ப்பும் காட்டாமல் அப்பு சரணடைந்தான்.
இந்தக் கொலையில் எனக்கு சம்பந்தமே இல்லை என்று அப்பு கூறியிருக்கிறான். எந்த கிரிமினல் தான் செய்த குற்றத்தை ஒப்புக்கொண்டான்?. அவனிடம் 6 மணி நேரம் மட்டுமே போலீஸ் விசாரித்திருக்கிறது. இன்னும் அவனிடம் நிறைய விசாரிக்கவேண்டியுள்ளது.
ரவி சுப்பிரமணியம் தற்கொலை செய்து கொண்டதாக வரும் செய்திகள் உண்மையில்லை, விரைவில் அவனும் பிடிபடுவான்என்றார்.
ரவி மானஸ்தன் என்றும் அவனை போலீசார் அவமானப்படுத்தினால் தற்கொலை செய்து கொள்வான் என்றும் அவனதுகுடும்பத்தினர் சில தினங்களுக்கு முன் தெரிவித்திருந்தனர். இந் நிலையில் அவன் தற்கொலை செய்து கொண்டதாகவே புரளிகிளம்பியுள்ளது.
இதைத் தான் பிரேம்குமார் மறுத்துள்ளார்.
-
ஐஏஎஸ் அதிகாரிகள் பணியிட மாற்றம்! நாகை, தஞ்சை, திருச்சிக்கு புதிய ஆட்சியர்கள் நியமனம்! -
வருங்கால இளைஞர்களுக்கு வழிவிடுங்க! அதிமுக ராஜசத்யன் திடீர் ட்வீட்! டீகோடு செய்து பார்த்தால்..! -
கோடை விடுமுறை முடிந்து... சென்னை திரும்பும் மக்கள்! 10 கி.மீ தூரத்திற்கு போக்குவரத்து நெரிசல்! -
ராணிப்பேட்டை டூ தேனி வரை.. 16 மாவட்டங்களில் பேய் மழை! வார்னிங் கொடுத்த வானிலை மையம் -
அண்ணாமலை தொடங்கும் புது இயக்கம்.. பெரிய பிளானில் மாஜி ஐபிஎஸ்.. அப்போ கட்சி எப்போது? கசிந்த தகவல் -
ஆளுநரின் தனி செயலாளர் உட்பட.. தமிழகம் முழுவதும் ஐஏஎஸ் அதிகாரிகள் பலர் பணியிட மாற்றம்! -
கனிமவள கொள்ளைக்கு ‘செக்'.. 67 குவாரிகளுக்கு பூட்டு - 469 வாகனங்கள் பறிமுதல்! அமைச்சர் பிரபு அதிரடி -
இந்திய ரயில்வே வரலாற்றில் விசித்திரம்! சேலம்- சென்னை ஓடும் ரயிலில் ரூ.5.78 கோடி கொள்ளை நினைவிருக்கா? -
Weather: பலத்த இடி, மின்னல், காற்றுடன் 17 மாவட்டங்களுக்கு கனமழை அலெர்ட்! வானிலை மையம் சொல்வதென்ன? -
தமிழகத்தில் 30 ஐஏஎஸ் அதிகாரிகள் அதிரடி மாற்றம்.. மதுரை உள்பட பல மாவட்டங்களின் கலெக்டர்கள் இடமாற்றம் -
தமிழகத்தில் முந்தைய ஆண்டுகளை விட அதிகரித்த சர்க்கரை நோய் பாதிப்பு! பெண்களை விட ஆண்களுக்கு அதிகம் -
கத்திரி முடிந்தும்.. குறையாத வெப்பத்தின் தாக்கம்! 14 மாவட்டங்களில் செஞ்சுரி போட்ட வெயில்!












Click it and Unblock the Notifications