மதுரை பள்ளிக்கு நீதிபதி கண்டனம்
மதுரை:
தமிழகத்தில் உள்ள பள்ளிகளில் பாதுகாப்பு ஏற்பாடுகள் குறித்து ஆராயும் குழுவைச் சேர்ந்த நீதிபதி சம்பத்வருகையையொட்டி மதுரையில் உள்ள ஒரு பள்ளியில் அவசரம் அவசரமாக கேட் போடப்பட்டது. இதை நீதிபதிசம்பத் கண்டித்தார்.
கும்பகோணத்தில் கடந்த ஜூலை மாதம் 16ம்தேதி பள்ளிக்கூடத்தில் ஏற்பட்ட பெரும் தீ விபத்தில் 90 குழந்தைகள்கருகி இறந்தன. இந்த சம்பவத்தையடுத்து தமிழகம் முழுவதும் உள்ள பள்ளிகளில் தீயணைக்கும் ஏற்பாடுகள்,பாதுகாப்பு ஏற்பாடுகள் குறித்து ஆராய்வதற்காக ஓய்வு பெற்ற நீதிபதி சம்பத் தலைமையிலான குழுவை தமிழகஅரசு நியமித்தது.
நீதிபதி சம்பத் குழு தமிழகம் முழுவதும் உள்ள பள்ளிகளைப் பார்வையிட்டு பாதுகாப்பு ஏற்பாடுகள் குறித்துஆய்வை மேற்கொள்ளவுள்ளது. முதல் கட்டமாக மதுரைக்கு வந்த நீதிபதி சம்பத், நரிமேடு பகுதியில் உள்ள சிலபள்ளிகளைப் பார்வையிட்டார்.
அப்போது ஒரு பள்ளியில் அவசரகதியில் நுழைவாயில் போடப்பட்டிருப்பதைப் பார்த்த நீதிபதி அதுகுறித்துவிசாரித்தார். இது நாள் வரை அந்தப் பள்ளியில் கேட்டே கிடையாது என்றும் குறுதிய பாதை மட்டுமேஇருந்ததாகவும் அப்பகுதியைச் சேர்ந்தவர்கள் தெரிவித்தனர்.
தான் வருவதை அறிந்ததும் அவசரம் அவசரமாக கேட் போட்ட விதத்தை நீதிபதி கண்டித்தார். பின்னர் அந்தப்பள்ளிக்குள் நுழைந்து சுற்றிப் பார்த்தார். அப்போது குறுகலான மாடிப்படி இருப்பதைப் பார்த்த அவர் உடனடியாகஅதை இடித்து விட்டு விசாலமான படிகளுடன் அதை மாற்றி அமைக்குமாறு உத்தரவிட்டார்.
-
ஆளுநரின் தனி செயலாளர் உட்பட.. தமிழகம் முழுவதும் ஐஏஎஸ் அதிகாரிகள் பலர் பணியிட மாற்றம்! -
"RSS பிடியில் தமிழ்நாடு.." இந்து முன்னணி தலைவரிடம் வாழ்த்து பெற்ற அமைச்சர்கள்.. திமுக கடும் தாக்கு -
புதிய கட்சி தொடங்கும் அண்ணாமலை? கடைசி வரை மறுப்பே சொல்லல பாருங்க.. அப்போ கன்பார்ம் தானா? -
தமிழகத்தில் 3வது குழந்தை பெற்றுக்கொண்டால் சலுகை? சுகாதாரத்துறை அமைச்சருக்கு விசிக கடிதம் -
கோடை விடுமுறை முடிந்து... சென்னை திரும்பும் மக்கள்! 10 கி.மீ தூரத்திற்கு போக்குவரத்து நெரிசல்! -
சென்னையில் விட்டு விளாச போகுது.. இன்று 17 மாவட்டங்களில் கனமழை பெய்யும்.. வானிலை மையம் எச்சரிக்கை -
Weather: பலத்த இடி, மின்னல், காற்றுடன் 17 மாவட்டங்களுக்கு கனமழை அலெர்ட்! வானிலை மையம் சொல்வதென்ன? -
வருங்கால இளைஞர்களுக்கு வழிவிடுங்க! அதிமுக ராஜசத்யன் திடீர் ட்வீட்! டீகோடு செய்து பார்த்தால்..! -
வேளாங்கண்ணி பேராலயத்துக்கு வந்த சென்னை மருத்துவ மாணவி.. யாருக்குமே இப்படி ஆகக்கூடாது -
சென்னை துறைமுகம் மதுரவாயல் ஈரடுக்கு மேம்பாலம்: 60% பணிகள் ஓவர்! போக்குவரத்து நெரிசல் விரைவில் முடிவு -
வாட்டி எடுத்த வெயில்! வேலூரில் அதிகபட்சமாக 106°F பதிவு! 15 இடங்களில் செஞ்சுரி! -
பெங்களூருக்கு ஜில் அப்டேட் கொடுத்த வெதர்மேன்! மழை கொட்டப்போகுது.. சென்னை நிலவரம் என்ன? விவரம்!












Click it and Unblock the Notifications