விழுப்புரம் நகராட்சி கூட்ட அரங்கு திறப்பு

Subscribe to Oneindia Tamil

விழுப்புரம்:

விழுப்புரம் நகராட்சி கூட்ட அரங்கு இரண்டரை ஆண்டுகளுக்குப் பிறகு, சென்னை உயர் நீதிமன்ற உத்தரவுப்படி இன்று சீல் நீக்கப்பட்டுதிறக்கப்பட்டது.

விழுப்புரம் நகராட்சித் தலைவராக திமுகவைச் சேர்ந்த எஸ்.எஸ்.பன்னீர் செல்வம் தேர்ந்தெடுக்கப்பட்டார். இதைத் தொடர்ந்து அதிமுகவைச்சேர்ந்த கவுன்சிலர்கள் நகராட்சிக் கூட்டத்தை நடத்த விடாமல் தடுத்து வந்தனர். இந் நிலையில் தமிழக அரசின் உத்தரவுப்படி நகராட்சிகூட்ட அரங்கத்தைப் பூட்டி சீல் வைத்தார் ஆணையர் நடராஜன்.

இதை எதிர்த்து பன்னீர் செல்வம் சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்குத் தொடர்ந்தார். கடந்த இரண்டரை ஆண்டுகளாக நடந்து வந்த இந்தவிசாரணை கடந்த 16ம் தேதி தலைமை நீதிபதி மார்க்கண்டேய கட்ஜூ முன்னிலையில் விசாரணைக்கு வந்தது.

அப்போது அரசின் நடவடிக்கைக்கு நீதிபதி கட்ஜு கடும் கண்டனம் தெரிவித்தார். அரசின் நடவடிக்கை சட்ட விரோதமானதுமட்டுமல்லாது மக்கள் விரோதமானதும் கூட என்று கூறிய அவர் 2 நாட்களுக்குள் கூட்ட அரங்கைத் திறந்து நகராட்சியின் நடவடிக்கைக்குவழி வகுக்க வேண்டும் என்று உத்தரவிட்டார்.

இதன்படி இன்று காலை கூட்ட அரங்கின் சீல் நீக்கப்பட்டு அறை திறக்கப்பட்டது. இதையடுத்து திமுக, பாமக, மதிமுக உள்ளிட்ட கட்சிகளைச்சேர்ந்த கவுன்சிலர்கள் கைதட்டி சந்தோஷத்தை வெளிப்படுத்தினர்.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+