ரவி சிக்கியது உறுதி: நாளை நீதிமன்றத்தில் ஆஜர்?
சென்னை:
சங்கரராமன் கொலை வழக்கில் 2வது குற்றவாளியான காண்டிராக்டர் ரவி சுப்ரமணியம் சென்னை அருகே கைதுசெய்யப்பட்டுள்ளதாகவும், நாளை அவர் காஞ்சிபுரம் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்படுவார் என்றும் கூறப்படுகிறது.
சங்கரராமன் கொலை வழக்கில் முதல் குற்றவாளியான ஜெயேந்திரர், 3வது குற்றவாளியான கூலிப் படைத் தலைவன் அப்பு, கூலிப்படையில் இடம் பெற்றிருந்தவர்கள், போலி குற்றவாளிகள் என இதுவரை 21 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். கூலிப் படையை ஏற்பாடுசெய்த ரவி சுப்ரமணியம் மட்டும் இன்னும் பிடிபடாமல் இருந்து வருகிறார்.
இந் நிலையில் சென்னை அருகே உள்ள படாளம் என்ற இடத்தில் கோயம்பேடு இன்ஸ்பெக்டரிடம் ரவிசுப்ரமணியம் சரணடைந்துவிட்டதாகக் கூறப்பட்டது. ஆனால் போலீஸ் தரப்பு இது குறித்து உறுதிப்படுத்த மறுக்கிறது.
ஆனால், நேற்று முன் தினம் காஞ்சிபுரம் நீதிமன்றத்தில் பேசிய அரசுத் தரப்பு வழக்கறிஞர், விசாரணை அதிகாரியான எஸ்பி பிரேம்குமார்இப்போது ரவி சுப்பிரமணியத்தை கட்டுப்பாட்டில் எடுக்கச் சென்றுள்ளார். இதனால் தான் அவர் இன்று நீதிமன்றம் வரவில்லை என்றார்.
இதனால் ரவி சுப்ரமணியம் உண்மையிலேயே போலீஸ் பிடியில் சிக்கிவிட்டதாகவே தெரிகிறது. போலீஸ் வசம் வந்துள்ள ரவிசுப்ரமணியத்திடம் மகாபலிபுரம் செல்லும் வழியில் உத்தண்டி என்ற ஊரில் ஒரு ரகசிய இடத்தில் வைத்து போலீஸார் விசாரணைநடத்தியதாகவும் கூறப்படுகிறது.
விசாரணை முடிந்த நிலையில் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்த ஏதுவாக அவர் காஞ்சிபுரம் காட்டு பங்களாவில் வைக்கப்பட்டுள்ளதாகத்தெரிகிறது.
நாளை அவர் காஞ்சிபுரம் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்படுவார் என்றும் கூறப்படுகிறது.
-
வாட்டி எடுத்த வெயில்! வேலூரில் அதிகபட்சமாக 106°F பதிவு! 15 இடங்களில் செஞ்சுரி! -
ஐஏஎஸ் அதிகாரிகள் பணியிட மாற்றம்! நாகை, தஞ்சை, திருச்சிக்கு புதிய ஆட்சியர்கள் நியமனம்! -
வருங்கால இளைஞர்களுக்கு வழிவிடுங்க! அதிமுக ராஜசத்யன் திடீர் ட்வீட்! டீகோடு செய்து பார்த்தால்..! -
கோடை விடுமுறை முடிந்து... சென்னை திரும்பும் மக்கள்! 10 கி.மீ தூரத்திற்கு போக்குவரத்து நெரிசல்! -
ராணிப்பேட்டை டூ தேனி வரை.. 16 மாவட்டங்களில் பேய் மழை! வார்னிங் கொடுத்த வானிலை மையம் -
கனிமவள கொள்ளைக்கு ‘செக்'.. 67 குவாரிகளுக்கு பூட்டு - 469 வாகனங்கள் பறிமுதல்! அமைச்சர் பிரபு அதிரடி -
இந்திய ரயில்வே வரலாற்றில் விசித்திரம்! சேலம்- சென்னை ஓடும் ரயிலில் ரூ.5.78 கோடி கொள்ளை நினைவிருக்கா? -
தமிழகத்தில் 30 ஐஏஎஸ் அதிகாரிகள் அதிரடி மாற்றம்.. மதுரை உள்பட பல மாவட்டங்களின் கலெக்டர்கள் இடமாற்றம் -
தமிழக குழந்தைகள் எவ்வளவு பாதுகாப்பாக உள்ளனர்? தடுப்பூசி குறித்து வெளியான புதிய டேட்டா -
வேலூர் டூ கன்னியாகுமரி.. 9 மாவட்டங்களுக்கு ஆரஞ்சு அலர்ட்! கொட்டப்போகும் மழை.. உஷார்! -
வெயிலுக்கு இன்று ‘பிரேக்’.. சென்னை உட்பட பல மாவட்டங்களில் மழை பெய்ய வாய்ப்பு.. வானிலை மையம் அப்டேட்! -
கத்திரி முடிந்தும்.. குறையாத வெப்பத்தின் தாக்கம்! 14 மாவட்டங்களில் செஞ்சுரி போட்ட வெயில்!












Click it and Unblock the Notifications