Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

ஜெயேந்திரர் ஜாமீன் விசாரணை 27க்கு ஒத்திவைப்பு

Subscribe to Oneindia Tamil

சென்னை:

Jeyandrarஆடிட்டர் ராதாகிருஷ்ணன் தாக்கப்பட்ட வழக்கில் ஜெயேந்திரர் தாக்கல் செய்த ஜாமீன் மனு மீதான விசாரணை வரும் 27ம்தேதிக்கு ஒத்தி வைக்கப்பட்டுவிட்டது.

இந்த மனு இன்று உயர் நீதிமன்றத்தில் நீதிபதி பாலசுப்பிரமணியம் முன் விசாரணைக்கு வந்தது.

அப்போது ஆஜரான அரசுத் தரப்பு வழக்கறிஞர் கே.டி.எஸ்.துல்சி, ஆடிட்டர் மீது நடந்தது ஒரு கொலை முயற்சி. இதனால்சங்கராச்சாரியார் மீது இந்திய தண்டனைச் சட்டம் 307வது பிரிவின்படி கொலை முயற்சி வழக்குப் பதிவாகியுள்ளது.

இந்த வழக்கின் கீழ் கைது செய்யப்பட்ட ஒருவருக்கு 437(1)(ஐ) பிரிவின்படி ஜாமீன் வழங்க முடியாது. இதற்கான விளக்கத்தைஅளிக்க எங்களுக்கு 27ம் தேதி வரை அவகாசம் வேண்டும் என்றார்.

அப்போது பேசிய சங்கராச்சாரியாரின் வழக்கறிஞர் சத்யநாராயணன், ஆடிட்டரும் அவரது மனைவியும் தாக்கப்பட்ட 2ஆண்டுகளாகிவிட்டன. இந்த வழக்கில் குற்றவாளிகளின் அடையாள அணிவகுப்பு முடிந்துவிட்டது. தாக்குதலுக்குப்பயன்படுத்தப்பட்ட ஆயுதங்கள் கூட ஒரு தண்ணீர் தொட்டியின் கீழ் இருந்து போலீசாரால் பறிமுதல் செய்யப்பட்டுவிட்டன.

இதனால் அவருக்கு நிபந்தனைகளுடன் கூடிய ஜாமீன் வழங்கலாம். கைது செய்யப்பட்டு சிறையில் இருக்கும் ஜெயேந்திரருக்குவயதாகிவிட்டது. அவர் சாட்சிகளைக் கலைக்கவோ, விசாரணையைத் தடுக்கவோ மாட்டார் என்றார்.

இதையடுத்து ஜெயேந்திரருக்கு எதிராக ஒரு மனுவை போலீசார் தரப்பு தாக்கல் செய்த. அதில், ஆடிட்டர் மீதான தாக்குதல் சும்மாபோன போக்கில் நடக்கவில்லை. மிகவும் தீவிரமாகத் திட்டமிடப்பட்டு நடந்த கொலை வெறித் தாக்குதல் அது. கொலை செய்யும்நோக்கத்தில் தான் அவரைத் தாக்கினார்கள்.

மடத்துக்குச் சம்பந்தமில்லாத வேலைகளில் சங்கராச்சாரியார் ஈடுபட்டதையும், பண மோசடிகள் செய்தைதயும் கண்டித்துகடிதங்கள் வந்ததால் ஆடிட்டர் மீது சந்தேகப்பட்ட ஜெயேந்திரரை அவரைக் கொல்லத் திட்டமிட்டார்.

ரவி, அப்பு, கதிரவன் ஆகியோருடன் சேர்ந்து சதித் திட்டம் தீட்டி ரெளடிகளை கூலிக்குப் பிடித்து பணம் கொடுத்து தாக்குதலைநடத்தினார் சங்கராச்சாரியார். தாக்குதல் நடப்பதற்கு ஒரு வாரத்துக்கு முன் இநத்ச் சதித் திட்டம் தீட்டப்பட்டது.

இதையடுத்து கதிரவன் போய் சுந்தரம் என்ற மீனாட்சிசுந்தரம் என்ற ரெளடியை அழைத்து வந்தான். இருவரும் சேர்ந்துஅனந்தகுமார், லட்சுமண் மற்றும் மூவரை கூலிக்குப் பிடித்தனர். பின்னர் 2002ம் ஆண்டு செப்டம்பர் 20ம் தேதி மந்தைவெளியில்உள்ள ராதாகிருஷ்ணனின் வீட்டில் புகுந்து சரமாரித் தாக்குதல் நடத்தினார்கள்.

இந்த வழக்கில் கடந்த நவம்பர் மாதம் மீனாட்சுந்தரம் போலீசிடம் பிடிபட்டபோது தான் சங்கரராமன் கொலையோடு ஆடிட்டர்தாக்கப்பட்ட சம்பவத்திலும் சங்கராச்சாரியாருக்குத் தொடர்பிருப்பது தெரியவந்தது.

இந் நிலையில் சங்கராச்சாரியாரை ஜாமீனில் வெளியில் விட்டால் சாட்சியங்களை எப்பாடுபட்டாவது கலைப்பார். விசாரணையைமுடக்க எல்லா வழிகளிலும் திட்டமிடுவார்.

வழக்கு விசாரணையை நடத்த முடியாத அளவுக்கு நிலையைக் கூட உருவாக்குவார்.

இவ்வாறு போலீசாரின் மனுவில் கூறப்பட்டிருந்தது.

இரு தரப்பு வாதங்களையும் கேட்ட நீதிபதி விசாரணையை 27ம் தேதிக்கு ஒத்தி வைத்தார்.

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+