ஜெயேந்திரர்: ஜெவை சந்திக்க பாஜக குழு அமைப்பு
சென்னை:
ஜெயேந்திரரை வீட்டுக் காவலில் வைக்கக் கோரி முதல்வர் ஜெயலலிதாவைச் சந்திக்க பா.ஜ.க. ஒரு குழுாவ அமைத்துள்ளது.
தமிழக பாஜக தலைவர் ராதாகிருஷ்ணன் இன்று நிருபர்களுக்கு அளித்த பேட்டி:
ஜெயேந்திரர் கைது செய்யப்பட்டதற்கு மத்திய அரசின் நெருக்கடிதான் முக்கிய காரணம். அதை இல்லை என்று நிரூபிக்க வேண்டியதுகாங்கிரஸ் தலைவர் சோனியா காந்தியின் கடமை.
சங்கரராமன் கொலையை அரசியல் சாயம் பூசியது நாங்கள் அல்ல, திமுகதான். நாட்டில் எத்தனையோ கொலைகள் நடந்தபோதும்அதுகுறித்து கவலைப்படாத திமுக ஜெயேந்திரர் விவகாரத்தில் மட்டும் குழம்பிய குட்டையில் மீன் பிடிக்கப் பார்க்கிறது.
ஒரு குறிப்பிட்ட சமூகத்திற்கு எதிரான உணர்வுகளை களங்கப்படுத்தி, அதை அரசியலுக்குப் பயன்படுத்த வேண்டும் என்பதுதான் திமுகவின்ஒரே குறிக்கோள். முதல்வர் ஜெயலலிதாவும், ஜெயேந்திரரும் குறிப்பிட்ட சமூகத்தைச் சேர்ந்தவர்கள் என்ற காரணத்தால் ஒரு பெரும்அரசியல் சூழ்ச்சியை செய்திருக்கிறார்கள்.
வீரப்பன், வீராணம் என ஜெயலலிதாவுக்கு தொடர்ந்து சிறப்புகளும், செல்வாக்கும் கிடைத்ததால், அதைக் குலைக்க வேண்டும்என்பதற்காக ஜெயேந்திரரை பகடைக் காயாக திமுக பயன்படுத்தியுள்ளது. இந்து மதத்தின் பெருமையினை சீர்குலைக்கும் முயற்சி இது.
ஜெயேந்திரரை சிறையில் வைத்துத்தான் விசாரிக்க வேண்டும் என்பதில்லை. வீட்டுக் காவலில் வைத்தும் அவரை விசாரிக்கலாம்.சிறையில் இருப்பதால் ஒரு மடாதிபதியாக அவரால் செயல்பட முடியவில்லை. இந்தக் கோரிக்கையை அரசு நிராகரிப்பது நியாயமல்ல.
இதுதொடர்பாக முதல்வரை சந்தித்துப் பேச பாஜக சார்பில் ஒரு குழு அமைத்துள்ளோம். முதல்வரை சந்திக்க நேரம் கிடைத்ததும் அவரைசந்தித்து சிறைக் காவலிலிருந்து வீட்டுக் காவலுக்கு ஜெயேந்திரரை மாற்றக் கோருவோம்.
தேசிய நெடுஞ்சாலைகளில் உள்ள மைல் கற்களில் இந்தியில் ஊர் பெயர்கள் எழுதப்பட்டு இருப்பது திமுக அமைச்சர்களின் மனமாற்றத்தைக்காட்டுகிறது.
தமிழ்நாட்டில் திரைப்படத் துறை தொடர்ந்து நலிந்து வருகிறது. இந் நிலையில், பாமக நிறுவனர் ராமதாஸும் அவரது கட்சியினரும்தொடர்ந்து ரஜினிகாந்த், விஜயகாந்த் என திரையுலகினரை எதிர்த்து அரசியல் செய்வது அநாகரீகமானது. இது ஜனநாயகமும் இல்லை.படங்களை ஓட விட மாட்டோம், பெட்டியைப் பறிப்போம் என கூறுவது ஒரு தொழிலை நசுக்க முயற்சிப்பது போலாகும் என்றார் அவர்.
-
தமிழ்நாட்டின் புதிய டிஜிபியாக மகேஷ்குமார் அகர்வால் நியமனம்! முடிவுக்கு வரும் சட்டம் ஒழுங்கு பிரச்சனை -
"22 வயதில் ஐபிஎஸ் - பஞ்சாப்பை சேர்ந்தவர்".. தமிழகத்தின் புதிய டிஜிபி மகேஷ் குமார் அகர்வால் யார்? பின்னணி -
கனிமவள கொள்ளைக்கு ‘செக்'.. 67 குவாரிகளுக்கு பூட்டு - 469 வாகனங்கள் பறிமுதல்! அமைச்சர் பிரபு அதிரடி -
Chennai Metro: சென்னை பூந்தமல்லி- வடபழனி மெட்ரோ ரயில் சேவை எப்போது தொடங்கும்? எங்கெங்கு நிற்கும்? -
சென்னையில் சிறுவனுக்கு பாலியல் தொல்லை.. காவலரை டிஸ்மிஸ் செய்து அதிரடி உத்தரவிட்ட ஆணையர்! -
தமிழகத்தில் 30 ஐஏஎஸ் அதிகாரிகள் அதிரடி மாற்றம்.. மதுரை உள்பட பல மாவட்டங்களின் கலெக்டர்கள் இடமாற்றம் -
4 ஆயிரம் உதவி பேராசிரியர் பணியிடங்கள்! 6 மாதத்திற்குள் தேர்வு நடத்த வேண்டும்.. சென்னை ஐகோர்ட் அதிரடி -
கத்திரி முடிந்தும்.. குறையாத வெப்பத்தின் தாக்கம்! 14 மாவட்டங்களில் செஞ்சுரி போட்ட வெயில்! -
தமிழ்நாட்டில் மதுப்பழக்கம் உள்ளவர்கள் எத்தனை சதவீதம்? மத்திய அரசு வெளியிட்ட புதிய டேட்டா -
வெயிலுக்கு இன்று ‘பிரேக்’.. சென்னை உட்பட பல மாவட்டங்களில் மழை பெய்ய வாய்ப்பு.. வானிலை மையம் அப்டேட்! -
மாஸ் லுக்கில் சிங்கப்பெண் அதிரடிப்படையினர்! முற்றிலும் வேறான சீருடை.. காரணம் இதுதான்! -
தேசிய நெடுஞ்சாலையில் செல்பவர்களுக்கு குட் நியூஸ்.. வருது சுங்கக் கட்டண சலுகை.. யாருக்கு பொருந்தும்?












Click it and Unblock the Notifications