ஒப்புதல் வாக்குமூலம் தரவேயில்லை: சின்னா மறுப்பு
காஞ்சிபுரம்:
சங்கரராமன் கொலை வழக்கில் குற்றத்தை ஒப்புக் கொண்டு நீதிபதி முன்னிலையில் ரகசிய வாக்குமூலம் தரவில்லை என்றுகாஞ்சிபுரம் நீதிமன்றத்தில் சின்னா என்ற ரஜினி தெரிவித்தார்.
சங்கரராமன் கொலை வழக்கில் கைது செய்யப்பட்ட கதிரவன், ரஜினி என்கிற சின்னா, அம்பிகாபதி, அனில்குமார் ஆகியோரின்சிறைக்காவல் நேற்றோடு முடிவடைந்தது.
காவல் நீட்டிப்புக்காக 4 பேரையும் காஞ்சிபுரம் முதலாவது நீதிமன்ற நீதிபதி உத்தமராஜன் முன் போலீஸார் ஆஜர்படுத்தினர். 4பேரின் சிறைக்காவலையும் அடுத்த மாதம் 3ம் தேதி வரை நீட்டித்து நீதிபதி உத்தரவிட்டார்.
அப்போது நீதிபதியிடம் ரஜினி கூறியதாவது:-
நான் 164-ம் பிரின்கீழ் ஒப்புதல் வாக்குமூலம் எதையும் தரவில்லை. ஆனால் அவ்வாறு தந்ததாக பத்திரிகைகளில் செய்திகள்வெளியாகின்றன என்று கூறினார்.
பின்னர் வெளியே வந்த சின்னாவின் வழக்கறிஞர் டார்வின் விஸ்டம் நிருபர்களிடம் கூறியதாவது:
164-வது பிரிவின்கீழ் சின்னா எந்த வாக்குமூலத்தையும் தரவில்லை. ஆனால் இப்படிப்பட்ட வாக்குமூலத்தை அவர் கொடுத்ததாகஜெயேந்திரரின் ஜாமீன் மனு விசாரணையின்போது உயர் நீதிமன்றத்தில் போலீஸ் தரப்பில் கூறப்பட்டுள்ளது.
இதன் மூலம் நீதிமன்ற நடைமுறையை எந்த அளவுக்கு போலீஸ் தவறாக பயன்படுத்துகிறது என்பது தெரிகிறது. சின்னா 161-வதுபிரிவின்கீழ் தான் வாக்குமூலம் கொடுத்து இருக்கிறார்.
குற்றப்பத்திரிகை தாக்கல் செய்வதற்கு முன்பாகவே 161-வது பிரிவு வாக்குமூலத்தின் நகலை எதிர் தரப்பினர் பெறலாம் என்றுசந்திரலேகா வழக்கில் உச்ச நீதிமன்றம் கூறியுள்ளது. இந்த தீர்ப்பின் நகல் இன்னும் தரப்படவில்லை.
அது கிடைத்ததும் சின்னா வாக்குமூலத்தின் நகலை பெறுவதற்கான விண்ணப்பத்தை தாக்கல் செய்வோம் என்று கூறினார்.
-
தமிழ்நாட்டில் பெண்கள், ஆண்களில் மதுப்பழக்கம் உள்ளவர்கள் எத்தனை சதவீதம்? மத்திய அரசு வெளியிட்ட டேட்டா -
அண்ணாமலை தொடங்கும் புது இயக்கம்.. பெரிய பிளானில் மாஜி ஐபிஎஸ்.. அப்போ கட்சி எப்போது? கசிந்த தகவல் -
சென்னை துறைமுகம் மதுரவாயல் ஈரடுக்கு மேம்பாலம்: 60% பணிகள் ஓவர்! போக்குவரத்து நெரிசல் விரைவில் முடிவு -
"2.0 அவதாரம் எடுக்கும் அண்ணாமலை!".. பாஜகவா? புதிய கட்சியா? அரசியல் களத்தை அலற விட்ட போஸ்டர்கள் -
Weather: பலத்த இடி, மின்னல், காற்றுடன் 17 மாவட்டங்களுக்கு கனமழை அலெர்ட்! வானிலை மையம் சொல்வதென்ன? -
Ajith Kumar: நடிகர் அஜித்குமாரின் தாய் மோகினி காலமானார்! -
கனிமவள கொள்ளைக்கு ‘செக்'.. 67 குவாரிகளுக்கு பூட்டு - 469 வாகனங்கள் பறிமுதல்! அமைச்சர் பிரபு அதிரடி -
தமிழகத்தில் 30 ஐஏஎஸ் அதிகாரிகள் அதிரடி மாற்றம்.. மதுரை உள்பட பல மாவட்டங்களின் கலெக்டர்கள் இடமாற்றம் -
தமிழக குழந்தைகள் எவ்வளவு பாதுகாப்பாக உள்ளனர்? தடுப்பூசி குறித்து வெளியான புதிய டேட்டா -
தமிழகத்தில் முந்தைய ஆண்டுகளை விட அதிகரித்த சர்க்கரை நோய் பாதிப்பு! பெண்களை விட ஆண்களுக்கு அதிகம் -
வேலூர் டூ கன்னியாகுமரி.. 9 மாவட்டங்களுக்கு ஆரஞ்சு அலர்ட்! கொட்டப்போகும் மழை.. உஷார்! -
கத்திரி முடிந்தும்.. குறையாத வெப்பத்தின் தாக்கம்! 14 மாவட்டங்களில் செஞ்சுரி போட்ட வெயில்!












Click it and Unblock the Notifications