சுந்தரேச அய்யர் ரெக்கார்ட் பிரேக்!!
காஞ்சிபுரம்:
சங்கரராமன் கொலை வழக்கு தொடர்பாக, சங்கர மடத்தின் மேலாளர் சுந்தரேச அய்யர், சங்கர மடம் சார்பில் சென்னையில் நடத்தப்படும்குழந்தைகள் மருத்துவமனையின் நிர்வாக அதிகாரியும், சுந்தரேச அய்யரின் மருமகனுமான அனந்த நாராயணன், ஆந்திரா வங்கி கிளைமேலாளர் ஆகியோடம் இன்று காஞ்சிபுரம் போலீஸார் இன்று விசாரணை நடத்தினர்.
சங்கர மடம் சார்பில் சென்னை நுங்கம்பாக்கத்தில் காஞ்சி காமகோடி குழந்தைகள் நல அறக்கட்டளை மருத்துவமனை நடத்தப்பட்டுவருகிறது. இதன் நிர்வாக அதிகாரியாக இருப்பவர் அனந்த நாராயணன். இவர் சங்கர மட மேலாளர் சுந்தரேச அய்யரின் மருமகன் ஆவார்.
அனந்த நாராயணன் இன்று காஞ்சிபுரம் போலீஸார் முன் விசாரணைக்கு வரவழைக்கப்பட்டார். அதேபோல சுந்தரேச அய்யரும் இன்றுவிசாரிக்கப்பட்டார். அய்யர் விசாரிக்கப்படுவது இது 13 வது முறையாகும். இதன்மூலம் சங்கரராமன் கொலை வழக்கில் மிக அதிகமானமுறை விசாரிக்கப்பட்டவர் என்ற சாதனையைப் படைத்துள்ளார் அய்யர்.
அதேபோல சென்னை அடையாறில் உள்ள ஆந்திரா வங்கி கிளை மேலாளர் குந்தனும் இன்று காஞ்சிபுரம் போலீஸாரால்விசாரிக்கப்பட்டார்.
சுந்தரேச அய்யருக்கு மடத்தின் நிதி விவகாரங்கள் அனைத்தும் அத்துபடி என போலீஸ் நம்புகிறது. ஆனாலும் வாயைத் திறக்க அய்யர்மறுப்பதால் இப்போது அவரது மருமகனையும் விசாரணை வளையத்துக்குள் கொண்டு வந்து அய்யருக்கு டென்சனை மேலும்கூட்டியுள்ளனர் போலீசார்.
-
ஐஏஎஸ் அதிகாரிகள் பணியிட மாற்றம்! நாகை, தஞ்சை, திருச்சிக்கு புதிய ஆட்சியர்கள் நியமனம்! -
இந்திய ரயில்வே வரலாற்றில் விசித்திரம்! சேலம்- சென்னை ஓடும் ரயிலில் ரூ.5.78 கோடி கொள்ளை நினைவிருக்கா? -
தமிழகத்தில் 30 ஐஏஎஸ் அதிகாரிகள் அதிரடி மாற்றம்.. மதுரை உள்பட பல மாவட்டங்களின் கலெக்டர்கள் இடமாற்றம் -
வேலூர் டூ கன்னியாகுமரி.. 9 மாவட்டங்களுக்கு ஆரஞ்சு அலர்ட்! கொட்டப்போகும் மழை.. உஷார்! -
Ajith Kumar: நடிகர் அஜித்குமாரின் தாய் மோகினி காலமானார்! -
கோட் சூட்டிற்கு பதிலாக பட்டு வேஷ்டி சட்டை.. திடீரென டிரஸ் கோடு மாற்றிய முதல்வர் விஜய்! ஏன் தெரியுமா? -
திருச்செந்தூர் முருகன் கோயிலில் அர்ச்சகருக்கு தடை மட்டும் விதிக்கப்பட்டது ஏன்? அமைச்சர் விளக்கம்! -
பெங்களூரின் இன்றைய சிக்கலுக்கு ஒரே தவறு தான் காரணம்.. முதல்வர் விஜய் செய்யவே கூடாத தவறு -
தமிழ்நாட்டின் புதிய டிஜிபியாக மகேஷ்குமார் அகர்வால் நியமனம்! முடிவுக்கு வரும் சட்டம் ஒழுங்கு பிரச்சனை -
"22 வயதில் ஐபிஎஸ் - பஞ்சாப்பை சேர்ந்தவர்".. தமிழகத்தின் புதிய டிஜிபி மகேஷ் குமார் அகர்வால் யார்? பின்னணி -
4 ஆயிரம் உதவி பேராசிரியர் பணியிடங்கள்! 6 மாதத்திற்குள் தேர்வு நடத்த வேண்டும்.. சென்னை ஐகோர்ட் அதிரடி -
வேலூர் டூ கன்னியாகுமரி.. 19 மாவட்டங்களில் கொட்டி தீர்க்கப்போகும் மழை! அடுத்த 2 மணி நேரம் உஷார்!












Click it and Unblock the Notifications