இலங்கை அரசின் புதிய திட்டம்: புலிகள் நிராகரிப்பு
கொழும்பு:
அமைதிப் பேச்சுவார்த்தையை மீண்டும் தொடங்குவதற்கு இலங்கை அரசு முன் வைத்த புதிய சமரச திட்டத்தை விடுதலைப் புலிகள்நிராகரித்து விட்டனர்.
நார்வே அமைதி தூதர் எரிக் சோல்ஹைமிடம் இலங்கை அரசின் அமைதிக்குழு செயலாளர் ஜெயந்த தனபாலா, அரசின் புதிய சமரசதிட்டத்தைக் கொடுத்தார். அதை லண்டனில் புலிகளின் அரசியல் ஆலோசகர் ஆண்டன் பாலசிங்கத்திடம் எரிக் சோல்ஹைம்ஒப்படைத்தார்.
பின்பு அத் திட்டம் புலிகளின் தலைவர் பிரபாகரனுக்கு அனுப்பி வைக்கப்பட்டது.
இந் நிலையில் அரசின் புதிய திட்டத்தை புலிகள் நிராகரித்து விட்டதாக அந்த இயக்கத்திற்கு நெருக்கமான வட்டாரங்கள் தெரிவித்தன.
அரசின் புதிய திட்டம் தெளிவாக இல்லை. புலிகள் எழுப்பிய பிரச்சினைகளுக்கு அதில் எந்த தீர்வும் இல்லை. வடகிழக்கு மாகாணத்தில்இடைக்கால ஏற்பாடுகளை செய்ய அரசு ஆர்வம் தெரிவித்திருந்தபோதிலும், புலிகள் முன்வைத்த இடைக்கால சுயாட்சி திட்டம் தொடர்பாகஎதுவும் குறிப்பிடப்படவில்லை. அதனால் அத் திட்டத்தை புலிகள் நிராகரித்து விட்டனர் என்று அந்த வட்டாரங்கள் தெரிவித்தன.
புலிகளின் இந்த நிராகரிப்பை ஆண்டன் பாலசிங்கம் அதிகாரப்பூர்வமாக ஓரிரு நாட்களில் அறிவிப்பார் என்று தெரிகிறது.
-
வாட்டி எடுத்த வெயில்! வேலூரில் அதிகபட்சமாக 106°F பதிவு! 15 இடங்களில் செஞ்சுரி! -
வேளாங்கண்ணி பேராலயத்துக்கு வந்த சென்னை மருத்துவ மாணவி.. யாருக்குமே இப்படி ஆகக்கூடாது -
கத்திரி முடிந்தும்.. குறையாத வெப்பத்தின் தாக்கம்! 14 மாவட்டங்களில் செஞ்சுரி போட்ட வெயில்! -
வெயிலுக்கு இன்று ‘பிரேக்’.. சென்னை உட்பட பல மாவட்டங்களில் மழை பெய்ய வாய்ப்பு.. வானிலை மையம் அப்டேட்! -
ரேஷன் கார்டுதாரர்களுக்கு ஹேப்பி நியூஸ்.. ஜூன் 2, 3ல் வீடு தேடி வரும் சர்ப்ரைஸ்.. கலெக்டர் அதிரடி -
வங்கி கணக்கில் வரும் ரூ.3000.. விஜய் அனுப்பும் ஜூன் மாத தொகை.. 3 திட்டங்களில் கிடைக்கும் பணம் -
பசிக்கு இரண்டு சமோசா.. கல்வி கடன்.. ஐஐடி-யில் தோற்றவர் துபாயில் சரித்திரம் படைத்த இந்திய இளைஞன் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
தாய் பத்திரம் தொலைஞ்சிருச்சா? ஆன்லைனில் ஈஸியாக ஒரிஜினலை மீட்க 6 ஆவணங்கள் என்ன? சிம்பிள் ஸ்டெப்ஸ் -
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
எல்பிஜி சிலிண்டர் பயன்படுத்துபவர்களுக்கு..நாளை முதல் புதிய கட்டுப்பாடுகள்! PNGக்கு மாற்றம் கட்டாயம்? -
ஆள் மட்டுமில்லை.. கட்சியையே தவெகவில் இணைக்கும் புகழேந்தி.. புஸ்ஸி - செங்கோட்டையனுடன் சந்திப்பு












Click it and Unblock the Notifications