ஒப்புதல் வாக்குமூலம் அளிக்க அப்பு முடிவு
காஞ்சிபுரம்:
சங்கரராமன் கொலை வழக்கில் கூலிப்படைத் தலைவன் அப்புவை அப்ரூவராக்க போலீஸார் முயற்சித்து வருவதாகத் தெரிகிறது.
போலீஸ் விசாரணைக்கு அப்பு முழு ஒத்துழைப்பு அளித்து வருகிறான். அவனது பதில்களை போலீஸார் வீடியோவிலும் பதிவுசெய்கிறார்கள். அப்புவின் கடந்த காலம், போலீஸ் அதிகாரிகள், அரசியல்வாதிகளுடனான தொடர்பு, வீரமணி உள்ளிட்ட தாதாக்களுடன்உள்ள தொடர்பு, நடிகைகள்-பெண்கள் தொடர்பு, சங்கர மடத்துடனான நெருக்கம், பணம் ஈட்டிய வழிகள் என அப்புவை போலீசார்குடைந்தெடுத்து வருகின்றன.
இந் நிலையில் நீதிபதி முன்னிலையில் 164-வது பிரிவின் கீழ் ஒப்புதல் வாக்குமூலமும் அளிக்கவும் அப்பு சம்மதம் தெரிவித்துள்ளதாகத்தெரிகிறது. இதற்காக இன்று அல்லது நாளை அப்பு நீதிபதி முன்பு ஆஜரார்படுத்தப்படுவான் என தனிப் படைச போலீஸ் வட்டாரங்கள்தெரிவிக்கின்றன.
இதற்கிடையே அப்புவை அப்ரூவராக்கவும் முயற்சிகள் நடந்து வருவதாகத் தெரிகிறது.
மேலும் அப்புவை சங்கர மடத்திற்கு அழைத்து சென்று விசாரிக்க போலீஸார் முடிவு செய்துள்ளனர்.
ஆடிட்டர் வழக்கிலும் அப்பு கைது:
சங்கரராமன் கொலை வழக்கில் 3வது குற்றவாளியாக சேர்க்கப்பட்டுள்ள அப்புவை ஆடிட்டர் ராதாகிருஷ்ணன் தாக்குதல் வழக்கிலும் கைது செய்யபோலீசார் முடிவு செய்துள்ளனர்.
ஆடிட்டர் ராதாகிருஷ்ணன் சென்னையில் வைத்து தாக்கப்பட்ட வழக்கில் முதல் குற்றவாளியாக ஜெயேந்திரர் சேர்க்கப்பட்டுள்ளார். அத்தோடுரவிசுப்ரமணியம் உள்ளிட்ட 10 பேரும் இதில் குற்றவாளிகளாக சேர்க்கப்பட்டுள்ளனர்.
இந் நிலையில் அப்புவையும் இந்த வழக்கில் சேர்த்து கைது செய்ய போலீஸார் முடிவு செய்துள்ளனர். அப்புவின் நீதிமன்றக் காவல் வரும் 27ம் தேதிடிவடைகிறது. அன்றைய தினம் அவரை ஆடிட்டர் ராதாகிருஷ்ணன் வழக்கில் கைது செய்து சைதாப்பேட்டை நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தத் திட்டமிட்டுள்ளனர்.
-
வருங்கால இளைஞர்களுக்கு வழிவிடுங்க! அதிமுக ராஜசத்யன் திடீர் ட்வீட்! டீகோடு செய்து பார்த்தால்..! -
"2.0 அவதாரம் எடுக்கும் அண்ணாமலை!".. பாஜகவா? புதிய கட்சியா? அரசியல் களத்தை அலற விட்ட போஸ்டர்கள் -
பெங்களூருக்கு ஜில் அப்டேட் கொடுத்த வெதர்மேன்! மழை கொட்டப்போகுது.. சென்னை நிலவரம் என்ன? விவரம்! -
ஆளுநரின் தனி செயலாளர் உட்பட.. தமிழகம் முழுவதும் ஐஏஎஸ் அதிகாரிகள் பலர் பணியிட மாற்றம்! -
இந்திய ரயில்வே வரலாற்றில் விசித்திரம்! சேலம்- சென்னை ஓடும் ரயிலில் ரூ.5.78 கோடி கொள்ளை நினைவிருக்கா? -
வேளாங்கண்ணி பேராலயத்துக்கு வந்த சென்னை மருத்துவ மாணவி.. யாருக்குமே இப்படி ஆகக்கூடாது -
தமிழகத்தில் 30 ஐஏஎஸ் அதிகாரிகள் அதிரடி மாற்றம்.. மதுரை உள்பட பல மாவட்டங்களின் கலெக்டர்கள் இடமாற்றம் -
தமிழக குழந்தைகள் எவ்வளவு பாதுகாப்பாக உள்ளனர்? தடுப்பூசி குறித்து வெளியான புதிய டேட்டா -
சென்னை துறைமுகம் மதுரவாயல் ஈரடுக்கு மேம்பாலம்: 60% பணிகள் ஓவர்! போக்குவரத்து நெரிசல் விரைவில் முடிவு -
வேலூர் டூ கன்னியாகுமரி.. 9 மாவட்டங்களுக்கு ஆரஞ்சு அலர்ட்! கொட்டப்போகும் மழை.. உஷார்! -
Weather: பலத்த இடி, மின்னல், காற்றுடன் 17 மாவட்டங்களுக்கு கனமழை அலெர்ட்! வானிலை மையம் சொல்வதென்ன? -
கத்திரி முடிந்தும்.. குறையாத வெப்பத்தின் தாக்கம்! 14 மாவட்டங்களில் செஞ்சுரி போட்ட வெயில்!












Click it and Unblock the Notifications