ஜெயலலிதாவின் அறியாமை: சு.சுவாமி தாக்கு
சென்னை:
ஜெயலலிதாவுக்கு இந்திய நாட்டின் கலாச்சாரம், வரலாறு தெரியவில்லை என்று ஜனதா கட்சித் தலைவர் சுப்பிரமணியம் சுவாமி கூறியுள்ளார்.
அவர் வெளியிட்டுள்ள அறிக்கை விவரம்:
தேசிய நெடுஞ்சாலைகளில் உள்ள மைல் கற்களில் ஊர்ப் பெயர்கள், தூரம் ஆகியவை இந்தியில் எழுதியிருப்பதை ஆட்சேபித்து பிரதமருக்கு தமிழக முதல்வர் ஜெயலலிதா கடிதம் எழுதியிருக்கிறார்.
ஜெயலலிதாவின் இந்தச் செயல் அவரது இந்திய மொழிகள் பற்றிய அறியாமையையே வெளிப்படுத்துகிறது.
தமிழகத்திற்கு நாட்டின் பல பகுதிகளில் இருந்து சுற்றுலாப் பயணிகள் வருகிறார்கள். ஆகவே தமிழ் மற்றும் இந்தி எழுத்தில் மைல் கற்களில் எழுதப்படுவது அனைத்து இந்திய மக்களுக்கும் வசதியாக இருக்கும்.
பிரிட்டிஷ் ஏகாதிபத்தியத்தின் ஊக்கத்துடன் தொடங்கப்பட்ட திராவிட இயக்கங்களில் அரசியல் வாழ்வைத் தொடங்கிய ஜெயலலிதாவுக்கு இந்திய நாட்டின் கலாச்சாரம், வரலாறு தெரியாமல் போனதில் ஆச்சரியம் ஏதுமில்லை.
ஜெயலலிதா தனது நேரத்தில் கொஞ்சத்தை ஒதுக்கி, இன்டர்நெட்டுக்குப் போய், இந்தியாவின் புராதன சிறப்பை அறிந்து கொள்ள முயற்சிக்க வேண்டும். இந்தி வேண்டாம் என்றெல்லாம் பேசி தனது அறியாமையை வெளிப்படுத்தாமல் இருப்பது ஜெயலலிதாவுக்கு நல்லது.
இவ்வாறு சுவாமி கூறியுள்ளார்.
-
தமிழ்நாட்டில் பெண்கள், ஆண்களில் மதுப்பழக்கம் உள்ளவர்கள் எத்தனை சதவீதம்? மத்திய அரசு வெளியிட்ட டேட்டா -
பெங்களூருக்கு ஜில் அப்டேட் கொடுத்த வெதர்மேன்! மழை கொட்டப்போகுது.. சென்னை நிலவரம் என்ன? விவரம்! -
சென்னை துறைமுகம் மதுரவாயல் ஈரடுக்கு மேம்பாலம்: 60% பணிகள் ஓவர்! போக்குவரத்து நெரிசல் விரைவில் முடிவு -
ஐஏஎஸ் அதிகாரிகள் பணியிட மாற்றம்! நாகை, தஞ்சை, திருச்சிக்கு புதிய ஆட்சியர்கள் நியமனம்! -
கோடை விடுமுறை முடிந்து... சென்னை திரும்பும் மக்கள்! 10 கி.மீ தூரத்திற்கு போக்குவரத்து நெரிசல்! -
அண்ணாமலை தொடங்கும் புது இயக்கம்.. பெரிய பிளானில் மாஜி ஐபிஎஸ்.. அப்போ கட்சி எப்போது? கசிந்த தகவல் -
Ajith Kumar: நடிகர் அஜித்குமாரின் தாய் மோகினி காலமானார்! -
இந்திய ரயில்வே வரலாற்றில் விசித்திரம்! சேலம்- சென்னை ஓடும் ரயிலில் ரூ.5.78 கோடி கொள்ளை நினைவிருக்கா? -
Weather: பலத்த இடி, மின்னல், காற்றுடன் 17 மாவட்டங்களுக்கு கனமழை அலெர்ட்! வானிலை மையம் சொல்வதென்ன? -
தமிழகத்தில் 30 ஐஏஎஸ் அதிகாரிகள் அதிரடி மாற்றம்.. மதுரை உள்பட பல மாவட்டங்களின் கலெக்டர்கள் இடமாற்றம் -
தமிழக குழந்தைகள் எவ்வளவு பாதுகாப்பாக உள்ளனர்? தடுப்பூசி குறித்து வெளியான புதிய டேட்டா -
வேலூர் டூ கன்னியாகுமரி.. 9 மாவட்டங்களுக்கு ஆரஞ்சு அலர்ட்! கொட்டப்போகும் மழை.. உஷார்!












Click it and Unblock the Notifications