ஜெயலலிதா திருந்தவில்லை என்கிறார் வைகோ
பழனி:
முதல்வர் ஜெயலலிதா ஆட்சியில் நீதியும் கிடையாது, நியாயமும் கிடையாது என்று மதிமுக பொதுச் செயலாளர் வைகோ கூறினார்.
பழனியில் மதிமுக நிர்வாகிகள் கூட்டத்தில் வைகோ பேசியதாவது:
காஞ்சி சங்கராச்சாரியார் சொன்னதைக் கேட்டு பழனி கோயிலில் மூலவர் சிலையை மறைத்து பஞ்சலோக சிலையை ஜெயலலிதாவைத்தார். அதன் பலனாக 40 மக்களவைத் தொகுதிகளையும் இழந்தார். பின்னர் சிலையை அகற்றினார். இதையடுத்து தீபாவளிநள்ளிரவில் சிலை வைக்கச் சொன்ன மடாதிபதியையே கைது செய்தார்.
இப்போதும் ஜெயலலிதா திருந்தவில்லை. பழனி கோயில் கர்ப்ப கிரகத்தில் வெள்ளிச் சர விளக்குகளை தொங்க விட்டுள்ளார்.இதனால் சரம் சரமாக தோல்வியைத் தழுவுவார். ஜெயலலிதாவிடம் மக்கள் இனி ஏமாற மாட்டார்கள்.
தான் நீதிக்கும் நேர்மைக்கும் கட்டுப்பட்டவள் என்று கூறும் ஜெயலலிதா, அவர் கைது செய்யப்பட்டபோது தர்மபுரியில் மூன்றுமாணவிகள் உயிரோடு எரித்துக் கொல்லப்பட்ட வழக்கில் அரசு வழக்கறிஞரை நியமிக்காதது ஏன்? இந்த ஆட்சியில் நீதியும்கிடையாது, நியாயமும் கிடையாது.
சிறையில் இருந்ததால் கடந்த 2 ஆண்டுகளாக நான் பொங்கலைக் கொண்டாட முடியவில்லை. எனவே இந்த ஆண்டு எனக்குவிஷேச பொங்கல்.
வரும் சட்டசபைத் தேர்தலில் ஜெயலலிதாவின் அரசியல் வாழ்க்கை குப்பைத் தொட்டிக்குப் போய்விடும். அனைத்துத்தொகுதிகளிலும் ஜனநாயக முற்போக்குக் கூட்டணி வெற்றி பெறும் என்றார்.
-
பிறப்பொக்கும் எல்லா உயிர்க்கும்.. என சொன்ன வள்ளுவர் சனாதனியா? ஆளுநர் மன்னிப்பு கோர வேண்டும் -சிபிஎம் -
வேளாங்கண்ணி பேராலயத்துக்கு வந்த சென்னை மருத்துவ மாணவி.. யாருக்குமே இப்படி ஆகக்கூடாது -
"2.0 அவதாரம் எடுக்கும் அண்ணாமலை!".. பாஜகவா? புதிய கட்சியா? அரசியல் களத்தை அலற விட்ட போஸ்டர்கள் -
பெங்களூருக்கு ஜில் அப்டேட் கொடுத்த வெதர்மேன்! மழை கொட்டப்போகுது.. சென்னை நிலவரம் என்ன? விவரம்! -
சென்னையில் விட்டு விளாச போகுது.. இன்று 17 மாவட்டங்களில் கனமழை பெய்யும்.. வானிலை மையம் எச்சரிக்கை -
ஐஏஎஸ் அதிகாரிகள் பணியிட மாற்றம்! நாகை, தஞ்சை, திருச்சிக்கு புதிய ஆட்சியர்கள் நியமனம்! -
வருங்கால இளைஞர்களுக்கு வழிவிடுங்க! அதிமுக ராஜசத்யன் திடீர் ட்வீட்! டீகோடு செய்து பார்த்தால்..! -
ராணிப்பேட்டை டூ தேனி வரை.. 16 மாவட்டங்களில் பேய் மழை! வார்னிங் கொடுத்த வானிலை மையம் -
அண்ணாமலை தொடங்கும் புது இயக்கம்.. பெரிய பிளானில் மாஜி ஐபிஎஸ்.. அப்போ கட்சி எப்போது? கசிந்த தகவல் -
Ajith Kumar: நடிகர் அஜித்குமாரின் தாய் மோகினி காலமானார்! -
கனிமவள கொள்ளைக்கு ‘செக்'.. 67 குவாரிகளுக்கு பூட்டு - 469 வாகனங்கள் பறிமுதல்! அமைச்சர் பிரபு அதிரடி -
கத்திரி முடிந்தும்.. குறையாத வெப்பத்தின் தாக்கம்! 14 மாவட்டங்களில் செஞ்சுரி போட்ட வெயில்!












Click it and Unblock the Notifications