கிறிஸ்துமஸ்: கலாம், பர்னாலா, ஜெ. வாழ்த்து

Subscribe to Oneindia Tamil

சென்னை:

கிறிஸ்துமஸ் பண்டிகையையொட்டி குடியரசுத் தலைவர் அப்துல் கலாம், தமிழக ஆளுநர் பர்னாலா, முதல்வர்ஜெயலலிதா ஆகியோர் கிறிஸ்தவர்களுக்கு வாழ்த்துக்களைத் தெரிவித்துள்ளனர்.

கலாம் வெளியிட்டுள்ள வாழ்த்துச் செய்தியில், கிறிஸ்துமஸ் மனிதர்களுக்கு அமைதியையும், மகிழ்ச்சியையும் தரும்நாளாகும். உங்களது நண்பர்கள் அமைதியையும், மகிழ்ச்சியையும் கொண்டாடும்போது அவர்களுக்கு உற்சாகம்கொடுங்கள். எனது அன்பான கிறிஸ்துமஸ் வாழ்த்துக்களை இந்திய மக்களுக்குத் தெரிவித்துக் கொள்கிறேன்என்று கூறியுள்ளார்.

ஆளுநர் பர்னாலா வெளியிட்டுள்ள வாழ்த்துச் செய்தியில், கிறிஸ்தவ மக்கள் அனைவருக்கும் இனியவாழ்த்துக்கள். மனித மதிப்பீடுகளை பரவச் செய்யவும், உலகில் அமைதியை வளர்க்கவும் கிறிஸ்தவ மக்கள்பாடுபட வேண்டும் என்று கூறியுள்ளார்.

ஜெயலலிதா வெளியிட்டுள்ள வாழ்த்துச் செய்தியில், கிறிஸ்துமஸ் நன்னாளில் கிறிஸ்தவ மக்களுக்குவாழ்த்துக்களைத் தெரிவிப்பதில் மட்டற்ற மகிழ்ச்சி அடைகிறேன். கிறிஸ்துவின் பிறப்புக்கு முன், இறப்புக்குப் பின்என்று காலம் பிரிக்கப்படுகிறது. இதற்கு கிறிஸ்துவின் காலம் கடந்து நிற்கும் கருணைப் பண்பே காரணம்.

என்றென்றும் அறவழியில் நடத்தும் ஆற்றல் பெற்றது கிறிஸ்துவின் கருணை. அந்த அற்புதக் கருணையைஉலகெங்கும் பரவச் செய்ய வேண்டும் என்று கூறியுள்ளார் ஜெயலலிதா.

இதேபோல் தமிழக காங்கிரஸ் தலைவர் வாசன், மதிமுக பொதுச் செயலாளர் வைகோ, பாஜக முன்னாள் அமைச்சர்திருநாவுக்கரசர், எம்ஜிஆர் கழகத் தலைவர் ஆர்.எம்.வீரப்பன், மூவேந்தர் முன்னேற்ற கழக நிறுவனர் சேதுராமன்ஆகியோரும் தங்களது வாழ்த்துக்களைத் தெரிவித்துள்ளனர்.

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+