கடத்தப்பட்ட மலேசியர் கொலை
திருவண்ணாமலை:
நடிகர் கமல்ஹாசனுடன் விருந்து நிகழ்ச்சியில் பங்கேற்க வருமாறு கூறி சென்னைக்கு வரவழைக்கப்பட்டு கடத்தப்பட்ட மலேசியாவைச்சேர்ந்த லாரி டிரைவர் சுப்பிரமணி, திருவண்ணாமலை மாவட்டம் செய்யூர் அருகே கொலை செய்யப்பட்டுக் கிடந்தது தெரிய வந்துள்ளது.
மலேசியாவில் உள்ள சிலாங்கூர் பகுதியைச் சேர்ந்தவர் சுப்பிரமணி. இவர் லாரி டிரைவர். இவரது மனைவி வில்லியம்மா. சுப்ரமணிக்குசென்னையிலிருந்து ஒரு கடிதம் வந்துள்ளது. அதில், நீங்கள் கலந்து கொண்ட போட்டியில் உங்களுக்குப் பரிசு கிடைத்துள்ளது.
பரிசளிப்பு விழாவில் நடிகர் கமல்ஹாசன் கலந்து கொண்டு பரிசுகளை வழங்கவிருக்கிறார் என்று கூறப்பட்டிருந்தது. சென்னைக்குவருவதற்கான விமான டிக்கெட்டுகளும் அதில் இணைக்கப்பட்டிருந்தன.
இதையடுத்து சுப்பிரமணியும், வில்லியம்மாவும் கடந்த 12ம் தேதி சென்ன்ைகு வந்துள்ளனர். விமான நிலையத்தில் இரு கார்களில்அவர்களை 3 பேர் தனித்தனியே அழைத்துச் சென்றனர்.
ஹோட்டலுக்குக் கூட்டிச் செல்லாமல், வில்லியம்மாவை அந்த குழு புதுவைக்கு அழைத்துச் சென்று அங்கு ஒரு இடத்தில் அடைத்துவைத்தது. சுப்பிரமணி சென்ற கார் எங்கே போனது என்றே தெரியவில்லை.
இந் நிலையில் வில்லியம்மா புதுவையில் இருந்து தப்பி வந்தார். சென்னை மீனம்பாக்கம் வந்த அவர் அங்குள்ள விமான நிலைய காவல்நிலையத்தில் புகார் கொடுத்தார். போலீஸார் சுப்பிரமணியையும், அவரைக் கடத்தியவர்களையும் தேடத் தொடங்கினர்.
இந் நிலையில் திருவண்ணாமலை மாவட்டம் செய்யூர் அருகே ஒரு பிணம் கிடந்ததாக செய்யூர் போலீஸார் சென்னைக்குத் தகவல்அனுப்பினர். இதைத் தொடர்ந்து வில்லியம்மா செய்யூர் அழைத்துச் செல்லப்பட்டார். அங்கு பிணத்தின் புகைப்படம், பிணமான நபர்அணிந்திருந்த உடைகள் ஆகியவற்றைப் பார்த்த வில்லியம்மா அது தனது கணவர்தான் என்று அடையாளம் காட்டினார்.
இதைத் தொடர்ந்து சுப்பிரமணி கடத்தல் வழக்கை கொலை வழக்காக மாற்றியுள்ள சென்னை போலீஸார் இந்த வழக்கை செய்யூர்போலீஸாரிடம் ஒப்படைத்துள்ளனர்.
வில்லியம்மாவை புதுவைக்குக் கடத்திச் சென்ற கும்பல் சுப்பிரமணியையும் அங்குதான் கடத்திச் சென்றிருக்க வேண்டும். அங்கு வைத்துக்கொலை செய்த பின்னர் பிணத்தை செய்யூரில் கொண்டு வந்து போட்டிருக்கலாம் என போலீஸார் சந்தேகிக்கிறார்கள்.
சுப்பிரமணியின் மகன் நரசய்யா, மலேசியாவைச் சேர்ந்த கருணாராஜ் என்பவரின் மகள் ரீட்டாவை காதல் திருமணம் செய்து கொண்டார்.இது கருணாராஜுக்குப் பிடிக்கவில்லை. அவர்தான் சுப்பிரமணியை ஏமாற்றி சென்னைக்கு வரவழைத்து ஆள் வைத்துக் கொன்றிருக்கவேண்டும் என்று போலீஸார் சந்தேகிக்கிறார்கள்.
கருணாராஜே தமிழகம் வந்து கூலிக்கு ஆள் வைத்து இந்தக் கடத்தலை நடத்தியதாகவும் கொலையைச் செய்ததாகவும் போலீசார்கூறுகின்றனர்.
-
புதிய கட்சி தொடங்கும் அண்ணாமலை? கடைசி வரை மறுப்பே சொல்லல பாருங்க.. அப்போ கன்பார்ம் தானா? -
தமிழகத்தில் 3வது குழந்தை பெற்றுக்கொண்டால் சலுகை? சுகாதாரத்துறை அமைச்சருக்கு விசிக கடிதம் -
ராணிப்பேட்டை டூ தேனி வரை.. 16 மாவட்டங்களில் பேய் மழை! வார்னிங் கொடுத்த வானிலை மையம் -
அண்ணாமலை தொடங்கும் புது இயக்கம்.. பெரிய பிளானில் மாஜி ஐபிஎஸ்.. அப்போ கட்சி எப்போது? கசிந்த தகவல் -
"2.0 அவதாரம் எடுக்கும் அண்ணாமலை!".. பாஜகவா? புதிய கட்சியா? அரசியல் களத்தை அலற விட்ட போஸ்டர்கள் -
சென்னையில் விட்டு விளாச போகுது.. இன்று 17 மாவட்டங்களில் கனமழை பெய்யும்.. வானிலை மையம் எச்சரிக்கை -
Weather: பலத்த இடி, மின்னல், காற்றுடன் 17 மாவட்டங்களுக்கு கனமழை அலெர்ட்! வானிலை மையம் சொல்வதென்ன? -
கொ*யில் முடிந்த பார் டான்ஸ்.. கொதித்துப் போன கோயம்பேடு! யான்சிக்கு இப்படியா சாவு வரனும்! ஷாக்! -
வருங்கால இளைஞர்களுக்கு வழிவிடுங்க! அதிமுக ராஜசத்யன் திடீர் ட்வீட்! டீகோடு செய்து பார்த்தால்..! -
வேளாங்கண்ணி பேராலயத்துக்கு வந்த சென்னை மருத்துவ மாணவி.. யாருக்குமே இப்படி ஆகக்கூடாது -
சென்னை துறைமுகம் மதுரவாயல் ஈரடுக்கு மேம்பாலம்: 60% பணிகள் ஓவர்! போக்குவரத்து நெரிசல் விரைவில் முடிவு -
பெங்களூருக்கு ஜில் அப்டேட் கொடுத்த வெதர்மேன்! மழை கொட்டப்போகுது.. சென்னை நிலவரம் என்ன? விவரம்!












Click it and Unblock the Notifications