அந்தமானில் பயங்கர சேதம்: 3,000 பேர் சாவு- மீண்டும் நிலநடுக்கம்!

Subscribe to Oneindia Tamil

போர்ட்பிளேர்:

அந்தமானில் இன்று காலை மீண்டும் பயங்கர நிலநடுக்கம் ஏற்பட்டது. இந்தத் தீவுகளில் கடல் கொந்தளிப்புக்கு சுமார் 3,000 பேர் வரைபலியாகியுள்ளனர். மேலும் நூற்றுக்கணக்கான விமானப் படையினர் உள்பட 2,000 பேரைக் காணவில்லை. இந் நிலையில் இன்று மீண்டும்ஏற்பட்ட நில நடுக்கம் மக்களை கடும் பீதியில் ஆழ்த்தியுள்ளது.

அந்தமானில் கடல் கொந்தளிப்பில் காயமடைந்தவர்கள் சென்னைக்குக் கொண்டு வரப்பட்டு சிகிச்சை அளிக்க ஏற்பாடுசெய்யப்பட்டுள்ளது.

நிலநடுக்கம் நிகழ்ந்த சுமத்ரா தீவுக்கு அருகில் இருந்த தீவு அந்தமான். இதனால் கடல் கொந்தளிப்பு ஏற்பட்டவுடன் முதலில் பாதிக்கப்பட்டதுஇந்தத் தீவுகள் தான். கடல் நீர் உள்ளே புகுந்ததில் போர்ட்பிளேர் விமான நிலையம் பெரும் சேதமடைந்தது. அங்கிருந்த இந்திய விமானப்படைத் தளமும் சேதமடைந்தது.

இதில் 25 விமானப் படையினரும் அவர்களது குடும்பத்தினரும் பலியாயினர். அந்தமான் முழுவதும் 3,000 பேர் பலியாகிவிட்டதாகவும்,பலியானவர்கள் எண்ணிக்கை மேலும் உயரக் கூடும் என்றும் அந்தமான் காவல்துறை தலைவர் தியோல் தெரிவித்தார்.

45,000 பேர் வசிக்கும் கார் நிகோபார் மற்றும் 18,000 மக்கள் வசிக்கும் நான்கெளரி ஆகிய தீவுக் கூட்டங்கள் தான் மிக மோசமாகபாதிக்கப்பட்டிருப்பதாகவும், அங்கு பெரும் அளவில் உயிர் பலிகள் நேர்ந்திருக்கலாம் என்றும் அவர் தெரிவித்தார்.

அந்தத் தீவுகளை அடைய முடியாத அளவுக்கு அங்கு கடல் அலைகள் இருந்தன. இந்தத் தீவுகளை அடைய இந்திய விமானப் படை,ராணுவம், கடற்படையினரின் குழுக்கள் கப்பல்களில் புறப்பட்டன. ஆனால், அலைகளின் சீற்றம் மிக அதிகமாக இருந்ததால் இன்று காலைவரை நெருங்க முடியவில்லை.

நேற்றைய கடல் கொந்தளிப்பால் விமானப் படையின் எண்ணெய் கிடங்குகளும் சேதமடைந்துவிட்டதால் ராணுவ விமானங்களையோ,ஹெலிகாப்டர்களையோ கூட இயக்க முடியாத சூழல் ஏற்பட்டது.

இதையடுத்து சென்னையில் இருந்தும் கொல்கத்தாவில் இருந்தும் எரிபொருள் அனுப்பப்பட்டது. இதைத் தொடர்ந்து கடற்படையின்விமானங்களும் ஹெலிகாப்டர்களும் கார் நிகோபார் தீவுகளுக்குச் சென்று மீட்ப்புப் பணிகளில் ஈடுபட்டன.

அப்போகு கார் நிகோபார் தீவுகளுக்குச் சென்ற கடற்படையினருக்கு பெரும் அதிர்ச்சி காத்திருந்தது. அங்கு எண்ணிப் பார்க்க முடியாதஅளவுக்கு பெரும் சேதம் ஏற்பட்டுள்ளது. ஆயிரக்கணக்கான மக்கள் கடல் அலைகளால் இழுத்துச் செல்லப்பட்டுவிட்டனர்.

மரங்களிலும் கட்டடங்களிலும் காயங்ளுடன் தொங்கிக் கொண்டிருக்கும் மக்களை ஹெலிகாப்டர்கள் மூலம் மீட்டு அழைத்து வரும் பணிநடந்து வருகிறது.

இதற்கிடையே இன்று காலை 6.20 மணிக்கு மீண்டும் நிலநடுக்கம் ஏற்பட்டது. இது ரிக்டர் அளவுகோலில் 6.0 என்ற அளவுக்குப் பதிவானது.நிலநடுக்கம் ஏற்பட்டவுடன் கடல் அலைகள் எழுமோ என்ற பீதியில் மக்கள் ஆழ்ந்தனர்.

நேற்றைய கடல் கொந்தளிப்பில் தீவில் உள்ள தொலைத் தொடர்பு கட்டமைப்பு முழுமையாக சிதைந்து போனது. அந்தமானைத் தாக்கியஅரை மணி நேரத்துக்குப் பிறகே இந்திய கடலோரப் பகுதிகளை கடல் ராட்சத அலைகள் தாக்கின.

அங்கு சுற்றுலா சென்ற ஆயிரக்கணக்கான பயணிகளும் சிக்கிக் கொண்டுள்ளனர். அவர்களை பத்திரமாக மீட்டு வர கொல்கத்தாவில்இருந்து மூன்று இந்தியன் ஏர்லைன்ஸ் விமானங்கள் அனுப்பப்பட்டுள்ளன.

பாதிக்கப்பட்ட பகுதிகளில் விமானப் படை விமானங்களும் ஹெலிகாப்டர்களும் உணவுப் பொருட்களை வானில் இருந்து வீசி வருகின்றன.

140 பேர் சென்னை வந்தனர்:

அந்தமானில் இருந்து மீட்கப்பட்ட 140 சுற்றுலாப் பயணிகளை ஏற்றிக் கொண்டு ஒரு விமானம் சென்னை வந்தது.

இன்று காலை 9.30 மணிக்கு இந்தியன் ஏர்லைன்ஸ் சிறப்பு விமானம் மூலம் இவர்கள் சென்னைக்கு அழைத்து வரப்பட்டனர். அவர்களில் ஒரு பெண் பயணிகூறுகையில், அந்தமானில் நாங்கள் இருந்தபோது 9 முறை கடல் கொந்தளிப்பு ஏற்பட்டது.

சுற்றுலாப பயணிகள் அனைவரும் விமான நிலையத்தில் தங்க வைக்கப்பட்டனர். அந்தமானில் எங்குமே மின்சாரம, தகவல் தொடர்பு இல்லை. எங்குபார்த்தாலும் ஒரே பரபரப்பு காணப்படுகிறது என்றார்.

சென்னை அழைத்து வரப்பட்ட இவர்கள் நகரின் பல்வேறு பகுதிகளில் ஹோட்டல்களில் தங்க வைக்கப்பட்டுள்ளனர். இவர்களை சொந்த ஊர்களுக்கு அனுப்பஅதிகாரிகள் நடவடிக்கை எடுத்து வருகின்றனர்.

அந்தமானுக்கு விமானப் படை விரைவு:

இதற்கிடையே கடல் கொந்தளிப்பினால் சிக்கி காயமடைந்த 300 பேரை அந்தமானிலிருந்து அழைத்து வர விமானப்படை சிறப்பு விமானம் இன்றுகாலை அந்தமான் சென்றுள்ளது.

இந்த 300 பேருடன், கொந்தளிப்பில் சிக்கி இறந்த 20 பேரின் உடல்களும் சென்னைக்குக் கொண்டு வரப்படுகின்றன.

காயமடைந்து கொண்டு வரப்படும் 300 பேருக்கும் சிகிச்சை அளிப்பதற்காக சென்னை நகரின் பல்வேறு மருத்துவமனைகளில் ஏற்பாடுகள் செய்யப்பட்டுதயார் நிலையில் உள்ளன. விமான நிலையத்தில் ஆம்புலன்ஸ்களும் குவிக்கப்பட்டுள்ளன.

அந்தமான் சென்றார் சோனியா:

இந் நிலையில் காங்கிரஸ் தலைவர் சோனியா காந்தி அந்தமானில் மீட்பு நடவடிக்கைகளைப் பார்வையிடச் சென்றார். அவருடன் விமானப் படைத் தளபதிகிருஷ்ணசாமி, அகில இந்திய காங்கிரஸ் செயலாளர் அம்பிகா சோனி ஆகியோரும் உடன் சென்றனர்.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+