சென்னையில் 30 கி.மீ. தூரத்துக்கு தடுப்பு சுவர்: பாலு

Subscribe to Oneindia Tamil

சென்னை:

Coastal areaசென்னையில் கடலோரப் பகுதிகளில் 30 கி.மீ. நீளத்துக்கு வெள்ளத் தடுப்புச் சுவர் கட்டப்படும் என்று மத்திய கப்பல் போக்குவரத்து மற்றும்தரைவழிப் போக்குவரத்துத் துறை அமைச்சர் டி.ஆர். பாலு தெரிவித்தார்.

பாதிக்கப்பட்ட இடங்களில் பார்வையிட்ட டி.ஆர்.பாலு செய்தியாளர்களுக்கு அளித்த பேட்டியில் கூறியதாவது:

மீட்புப் பணிகளில் ஈடுபட்டவர்களிடம் உணவு, குடிநீர், தங்கும் இடம், மருத்துவ வசதி ஆகியவற்றைத் தடையின்றி வழங்கும்படிகூறினேன்.

பிரதமரையும், மத்திய அமைச்சரவைச் செயலரையும் தொடர்புக் கொண்டு, நிவாரணப் பணிகளை மேற்கொள்ள உறுதுணையாக இருக்கவேண்டும் என்று கேட்டுக் கொண்டேன்.

இத்தகைய பாதிப்புகளில் இருந்து கடலோர மக்களைக் காப்பாற்ற வெள்ளத் தடுப்புச் சுவர் கட்ட வேண்டும் என்று சட்டப் பேரவைஉறுப்பினர் வைத்தியலிங்கம் வைத்த கோரிக்கையால் பாலவாக்கம் பகுதியில் வெள்ளத் தடுப்புச் சுவர் கட்டப்பட்டது. அதனால்அப்பகுதியில் சேதம் ஏற்படாமல் தடுக்கப்பட்டது.

இதேபோல் வெள்ளத் தடுப்புச் சுவரை தென் சென்னை தொகுதி கடலோரப் பகுதிகளில் 30 கி.மீ. நீளத்துக்குக் கட்டித் தர எனது தொகுதிநிதியில் இருந்து முதற்கட்டமாக ரூ.1 கோடியை ஒதுக்கீடு செய்துள்ளேன். மேலும் நிதி தேவைப்பட்டால், ஒதுக்கீடு செய்வேன்.

இதை முறையாகப் பயன்படுத்திக் கொள்ள தொடர்புடைய ஊராட்சிகளின் தலைவர்கள் திட்ட மதிப்பீட்டைத் தயார் செய்து கொண்டு எனதுதொகுதி அலுவலகத்தை உடனடியாக அணுகலாம் என்று டி.ஆர். பாலு கூறினார்.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+