இறந்தோர் குடும்பங்களுக்கு ரூ. 1 லட்சம் உதவி: ஜெ.
சென்னை:
கடல் கொந்தளிப்பினால் இறந்தவர்களின் குடும்பங்களுக்கு ரூ. 1 லட்சம் வழங்கப்படும் என முதல்வர் ஜெயலலிதா அறிவித்துள்ளார்.
சென்னையில் புயலால் பாதிக்கப்பட்ட பகுதிகளை ஹெலிகாப்டர் மூலம் பார்வையிட்ட பின்னர் செய்தியாளர்களிடம் அவர் பேசுகையில்,இயற்கையின் இந்த எதிர்பாராத சீற்றத்தால் சென்னையின் கடலோரப் பகுதிகள் உள்பட தமிழக கடலோரப் பகுதிகள் மிகக் கடுமையாகபாதிக்கப்பட்டுள்ளன.
மீட்பு நடவடிக்கைகளை முடுக்கி விட்டுள்ளேன். மாவட்ட ஆட்சித் தலைவர்களுடனும் பேசியுள்ளேன். மீட்பு நடவடிக்கைகள் தொடர்ந்துநடந்து கொண்டிருப்பதால் இறந்தோரின் எண்ணிக்கையும் அதிகரிக்கும் வாய்ப்புகள் உள்ளன.
இந்த பாதிப்பால் உயிரிழந்தோரின் குடும்பங்களுக்கு தலா ரூ. 1 லட்சம் வழங்க உத்தரவிட்டுள்ளேன். மேலும், தமிழக அரசின் நிதிஆதாரத்தை மட்டும் வைத்துக் கொண்டு இந்த இடர்பாட்டை சமாளிக்க முடியாது.
எனவே மத்திய அரசு தாராள நிதியுதவி அளிக்க வேண்டும். தமிழகத்திற்குத் தேவையான அனைத்து உதவிகளும் அளிக்கப்படும் என்றுபிரதமர் மன்மோகன் சிங் உறுதியளித்துள்ளார். எனவே மத்திய அரசு தாராள நிதியுதவி அளிக்கும் என்று நம்புகிறேன்.
அதேபோல, நல்ல மனம் படைத்தவர்களும் தாராளமாக உதவி செய்ய முன்வர வேண்டும். முதலமைச்சர் பொது நிவாரண நிதிக்கு தங்களதுநன்கொடைகளை வழங்க முன்வர வேண்டும் என்றார் ஜெயலலிதா.
முன்னதாக ராயப்பேட்டை அரசு மருத்துவமனைக்கும் ஜெயலலிதா சென்றார். அங்கு குடும்பத்தினரை இழந்து கதறிக்கொண்டிருந்தவர்களைச் சந்தித்து ஆறுதல் தெரிவித்தார். காயமடைந்து அனுமதிக்கப்பட்டிருந்தவர்களையும் பார்த்து ஆறுதல் கூறினார்.
பின்னர் மருத்துவர்களிடம் பேசிய அவர், தொற்று நோய் பரவாமல் தடுக்கத் தேவையான நடவடிக்கைகளை எடுக்க வலியுறுத்தினார்.மாநகராட்சி சுகாதார அதிகாரிகளுக்கும் இதே வேண்டுகோளை விடுத்தார்.
கடலூர் மாவட்டத்தில் பாதிக்கப்பட்ட கிராமங்களை ஹெலிகாப்டர் மூலம் ஜெயலலிதா பார்வையிட்டார். அப்போது ஹெலிகாப்டரைநிறுத்துவதற்குக் கூட சரியான இடமில்லாமல் எங்கும் கடல்நீர் புகுந்திருந்தது. அதனால் ஜெயலலிதா ஹெலிகாப்டரில் இருந்தபடியே சேதஇடங்களைப் பார்வையிட்டுத் திரும்பினார்.
இன்றும் ஜெயலலிதா கன்னியாகுமரி, நாகப்பட்டனம், கடலூர் ஆகிய மாவட்டங்களுக்கு ஹெலிகாப்டர் மூலம் சென்று பாதிக்கப்பட்டபகுதிகளைப் பார்வையிடவுள்ளார். கன்னியாகுமரி மாவட்டத்தில் கன்னியாகுமரி, முட்டம், கோவளம், கடியபட்டினம் ஆகியஇடங்களுக்கு ஜெயலலிதா செல்கிறார்.
-
வேளாங்கண்ணி பேராலயத்துக்கு வந்த சென்னை மருத்துவ மாணவி.. யாருக்குமே இப்படி ஆகக்கூடாது -
"2.0 அவதாரம் எடுக்கும் அண்ணாமலை!".. பாஜகவா? புதிய கட்சியா? அரசியல் களத்தை அலற விட்ட போஸ்டர்கள் -
பெங்களூருக்கு ஜில் அப்டேட் கொடுத்த வெதர்மேன்! மழை கொட்டப்போகுது.. சென்னை நிலவரம் என்ன? விவரம்! -
சென்னையில் விட்டு விளாச போகுது.. இன்று 17 மாவட்டங்களில் கனமழை பெய்யும்.. வானிலை மையம் எச்சரிக்கை -
சென்னை துறைமுகம் மதுரவாயல் ஈரடுக்கு மேம்பாலம்: 60% பணிகள் ஓவர்! போக்குவரத்து நெரிசல் விரைவில் முடிவு -
ஐஏஎஸ் அதிகாரிகள் பணியிட மாற்றம்! நாகை, தஞ்சை, திருச்சிக்கு புதிய ஆட்சியர்கள் நியமனம்! -
ராணிப்பேட்டை டூ தேனி வரை.. 16 மாவட்டங்களில் பேய் மழை! வார்னிங் கொடுத்த வானிலை மையம் -
அண்ணாமலை தொடங்கும் புது இயக்கம்.. பெரிய பிளானில் மாஜி ஐபிஎஸ்.. அப்போ கட்சி எப்போது? கசிந்த தகவல் -
Ajith Kumar: நடிகர் அஜித்குமாரின் தாய் மோகினி காலமானார்! -
கனிமவள கொள்ளைக்கு ‘செக்'.. 67 குவாரிகளுக்கு பூட்டு - 469 வாகனங்கள் பறிமுதல்! அமைச்சர் பிரபு அதிரடி -
இந்திய ரயில்வே வரலாற்றில் விசித்திரம்! சேலம்- சென்னை ஓடும் ரயிலில் ரூ.5.78 கோடி கொள்ளை நினைவிருக்கா? -
வெயிலுக்கு இன்று ‘பிரேக்’.. சென்னை உட்பட பல மாவட்டங்களில் மழை பெய்ய வாய்ப்பு.. வானிலை மையம் அப்டேட்!












Click it and Unblock the Notifications