தமிழகம் வந்தார் பாட்டீல்: ஜெவுடன் சந்திப்பு

Subscribe to Oneindia Tamil

சென்னை:

Patil meets Jayalalitha

கடல் கொந்தளிப்பால் ஏற்பட்ட சேதத்தை நேரில் கண்டறிய மத்திய உள்துறை அமைச்சர் சிவராஜ் பாட்டீல் இன்று தமிழகம் வந்தார்.ஆளுநர் மாளிகையில் அவரை முதல்வர் ஜெயலலிதா சந்தித்துப் பேசினார்.

சிவராஜ் பாட்டீல் நேற்று ஆந்திராவில் கடல் கொந்தளிப்பால் பாதிக்கப்பட்ட இடங்களை விமானம் மூலம் பார்வையிட்டார்.அதனையடுத்து இன்று காலை அவர் சென்னை வந்தார்.

விமான நிலையத்தில் செய்தியாளர்களிடம் அவர் பேசுகையில்,

பாதிக்கப்பட்ட பகுதிகளில் தமிழக அரசு சிறப்பாக நிவாரணப் பணிகளை மேற்கொண்டு வருகிறது. மீட்பு நடவடிக்கைகளுக்காக விமானம்மற்றும் ஹெலிகாப்டர்களை தமிழக அரசு எதிர்பார்க்கிறது. அவற்றை மத்திய அரசு வழங்கும்.

பாதிக்கப்பட்ட மக்களுக்கு நிவாரண நிதி வழங்க மத்திய அரசின் உதவியை தமிழக அரசு கேட்டுள்ளது. அதையும் மத்திய அரசு வழங்கத்தயாராகவே இருக்கிறது. பாதிக்கப்பட்ட பகுதிகளுக்கு நேரில் சென்று ஆய்வு செய்து, அது குறித்து முடிவு எடுப்பேன்.

அந்த இடங்களுக்குச் செல்லும் முன்பு முதல்வர் ஜெயலலிதாவைச் சந்தித்து பேசவிருக்கிறேன். இலங்கையில் மீட்புப் பணிகளைமேற்கொள்ள இரண்டு கப்பல்கள் அனுப்பப்பட்டு விட்டன என்றார்.

பின்னர் ஆளுநர் மாளிகை சென்ற பாட்டீல் அங்கு ஜெயலலிதாவுடன் ஆலோசனை நடத்தினார். அப்போது தமிழக சேதம் குறித்துகுறிப்பிட்ட ஜெயலலிதா, மத்திய அரசிடம் இருந்து தாராள நிதியை எதிர்பார்ப்பதாகக் கூறினார். இந்த சந்திப்பு சுமார் 25 நிமிடங்கள்நீடித்தது.

Patil visits chennaiபின்னர் செய்தியாளர்களிடம் பேசிய சிவராஜ் பாட்டீல், மக்களுக்குத் தேவையான உதவிகளை செய்யும்படி முதல்வரிடம் கேட்டுக்கொண்டதாகவும், மத்திய அரசு நிச்சயம் உதவி செய்யும் என்று கூறியதாகவும் தெரிவித்தார்.

இதனையடுத்து ஜெயலலிதா கடலூர், நாகப்பட்டினம் மாவட்டங்களைப் பார்வையிட விமானத்தில் கிளம்பிச் சென்றார்.

பின்னர் சிவராஜ் பாட்டீல் சென்னையில் பட்டினப்பாக்கம், நொச்சிக்குப்பம், சீனிவாசபுரம் ஆகிய இடங்களைப் பார்வையிட்டார்.அப்போது தங்களுக்கு மாநில அரசு உரிய முறையில் நிவாரண உதவிகளைச் செய்யவில்லை என பல பொது மக்களும் புகார் கூறினர்.

அதன்பின்பு அப்பல்லோ மருத்துவமனைக்குச் சென்று சிகிச்சை பெற்று வருபவர்களுக்கு ஆறுதல் கூறினார். பின்னர் கடலூர், நாகப்பட்டினம்மாவட்டங்களுக்குச் செல்கிறார்.

இன்றிரவு சென்னையில் தங்கும் பாட்டீல், நாளைக் காலை அந்தமான் செல்கிறார்.

அத்வானி தமிழகம் வருகை:

இந் நிலையில் சென்னையில் பாதிக்கப்பட்ட இடங்களை பாஜக தலைவர் அத்வானி இன்று நேரில் பார்வையிட்டார்.

கடல் கொந்தளிப்பில் உயிரிழந்த குடும்பங்களுக்கு தனது ஆழ்ந்த இரங்கல்களைத் தெரிவித்த அத்வானி, இது தேசிய அழிவு என்றுகுறிப்பிட்டார். பாதிக்கப்பட்ட மாநிலங்களுக்குத் தேவையான உதவிகளைச் செய்யுமாறு பாஜக ஆளும் மாநிலங்களின் முதல்வர்களுக்குஅவர் வேண்டுகோள் விடுத்தார்.

தமிழகம் வந்த அத்வானி, சென்னையில் பாதிக்கப்பட்ட இடங்களுக்கு நேரில் சென்று பார்வையிட்டார். அவருடன் முன்னாள் பாஜகதலைவர் வெங்கைய்யா நாயுடு, அகில இந்திய பாஜக செயலாளர் இல.கணேசன் ஆகியோரும் உடன் சென்றனர்.

பாதிக்கப்பட்ட மக்களை சந்தித்து ஆறுதல் கூறிய அத்வானி, தேவையான நிவாரண நிதி வழங்க மத்திய, மாநில அரசுகளுடன் பேசுவதாகஉறுதியளித்தார். பின்னர் நிவாரண முகாம்களுக்கும் சென்று பார்வையிட்டார். பின்னர் கடலூர், நாகப்பட்டினம் மாவட்டங்களுக்குப்புறப்பட்டுச் சென்றார்.

முன்னதாக அந்தமான் நிக்கோபார் மாநிலத்தின் துணை நிலை ஆளுநருடன் தொலைபேசியில் பேசிய அத்வானி, அங்கு சேத விவரங்களைக்கேட்டறிந்தார்.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+