பாண்டிச்சேரி: பலியானோர் எண்ணிக்கை 377 ஆனது
பாண்டிச்சேரி:
கடல் கொந்தளிப்பு காரணமாக பாண்டிச்சேரி மாநிலத்தில் பலியானவர்களின் எண்ணிக்கை 377 ஆக உயர்ந்துவிட்டது.
கடல் கொந்தளிப்பினால் பலியானவர்களின் எண்ணிக்கை உயர்ந்து கொண்டே வருகிறது. கடலூரில் பலியானவர்களின் எண்ணிக்கை 400ஆக உயர்ந்துள்ளது. 300 பேரின் உடல்கள் கடலூரில் உள்ள 3 அரசு மருத்துவமனைகளில் வைக்கப்பட்டுள்ளன.
காரைக்காலில் 265 பேரும் மற்றவர்கள் பாண்டிச்சேரியிலும் பலியானதாக அம் மாநில முதல்வர் ரங்கசாமி தெரிவித்தார். வீடு,உடமைகளை இழந்து பாதிக்கப்பட்ட குடும்பங்களுக்கு 25 கிலோ அரிசியும் தலா ரூ. 2,000மும் வழங்க அவர் உத்தரவிட்டுள்ளார்.
காரைக்காலில் மீட்புப் பணிகளில் உதவுமாறு கடற்படைக்கு ரங்கசாமி கோரிக்கை விடுத்துள்ளார்.
இதுவரை 300 சடலங்கள் கண்டெடுக்கப்பட்டுள்ளன. மொத்தம் 15,000 பேர் வீடிழந்தனர். மேலும் 900 பேரைக் காணவில்லை.
இந் நிலையில் மத்திய அரசு முதற்கட்டமாக ரூ.25 கோடி நிதியுதவியை பாண்டிச்சேரிக்கு வழங்குவதாக மத்திய உள்துறை அமைச்சர்சிவராஜ் பாட்டீல் தெரிவித்தார்.
மத்திய அமைச்சர்கள் மணிசங்கர் அய்யர், தயாநிதி மாறன் ஆகியோரும் கடலூர், மயிலாடுதுறை மற்றும் காரைக்கால் பகுதிகளில் இன்றுபார்வையிடுகின்றனர்.
-
அண்ணாமலை தொடங்கும் புது இயக்கம்.. பெரிய பிளானில் மாஜி ஐபிஎஸ்.. அப்போ கட்சி எப்போது? கசிந்த தகவல் -
சென்னையில் விட்டு விளாச போகுது.. இன்று 17 மாவட்டங்களில் கனமழை பெய்யும்.. வானிலை மையம் எச்சரிக்கை -
ஐஏஎஸ் அதிகாரிகள் பணியிட மாற்றம்! நாகை, தஞ்சை, திருச்சிக்கு புதிய ஆட்சியர்கள் நியமனம்! -
கோடை விடுமுறை முடிந்து... சென்னை திரும்பும் மக்கள்! 10 கி.மீ தூரத்திற்கு போக்குவரத்து நெரிசல்! -
ராணிப்பேட்டை டூ தேனி வரை.. 16 மாவட்டங்களில் பேய் மழை! வார்னிங் கொடுத்த வானிலை மையம் -
பெங்களூருக்கு ஜில் அப்டேட் கொடுத்த வெதர்மேன்! மழை கொட்டப்போகுது.. சென்னை நிலவரம் என்ன? விவரம்! -
Ajith Kumar: நடிகர் அஜித்குமாரின் தாய் மோகினி காலமானார்! -
வேளாங்கண்ணி பேராலயத்துக்கு வந்த சென்னை மருத்துவ மாணவி.. யாருக்குமே இப்படி ஆகக்கூடாது -
தமிழகத்தில் முந்தைய ஆண்டுகளை விட அதிகரித்த சர்க்கரை நோய் பாதிப்பு! பெண்களை விட ஆண்களுக்கு அதிகம் -
சென்னை துறைமுகம் மதுரவாயல் ஈரடுக்கு மேம்பாலம்: 60% பணிகள் ஓவர்! போக்குவரத்து நெரிசல் விரைவில் முடிவு -
Weather: பலத்த இடி, மின்னல், காற்றுடன் 17 மாவட்டங்களுக்கு கனமழை அலெர்ட்! வானிலை மையம் சொல்வதென்ன? -
கத்திரி முடிந்தும்.. குறையாத வெப்பத்தின் தாக்கம்! 14 மாவட்டங்களில் செஞ்சுரி போட்ட வெயில்!












Click it and Unblock the Notifications