ரவி சுப்பிரமணியம் கைது
சென்னை:
சங்கரராமன் கொலை வழக்கில் தேடப்பட்டு வந்த முக்கிய குற்றவாளியான ரவி சுப்பிரமணியம் கைது செய்யப்பட்டார். அவரை 3 நாட்கள்போலீஸ் காவலில் வைத்து விசாரிக்க நீதிமன்றம் அனுமதி அளித்தது.
ரவியை கேரள மாநிலம் குருவாயூரில் வைத்து போலீசார் நேற்று கைது செய்துள்ளனர்.
அவரை காஞ்சிபுரம் நீதிமன்றத்தில் போலீசார் இன்று ஆஜர்படுத்தினர். அப்போது ரவியை போலீஸ் காவலில் அனுப்பக் கோரி போலீசார்மனு தாக்கல் செய்தனர்.
இதனை ஏற்ற நீதிபதி உத்தமராஜன், ரவியை 3 நாட்கள் காவலில் வைத்து விசாரிக்க அனுமதியளித்தார்.
இதைத் தொடர்ந்து ரவி சுப்பிரமணியம் காட்டுப் பங்களாவிற்கு அழைத்துச் செல்லப்பட்டார்.
சுனாமி: ஜெயேந்திரரின் ஜாமீன் ஒத்திவைப்பு
இந் நிலையில், ஆடிட்டர் தாக்கப்பட்ட வழக்கில் ஜெயேந்திரர் தாக்கல் செய்த மனு இன்று மீண்டும் உயர் நீதிமன்றத்தில் விசாரணைக்குவந்தது. இதை நீதிபதி பாலசுப்பிரமணியம் விசாரித்துக் கொண்டிருந்தார்.
அப்போது நீதிமன்றத்துக்கு வானிலை ஆய்வு மையத்திடம் இருந்து ஒரு தகவல் வந்தது. அதில், கடலில் மீண்டும் பெரும் அலைகள் ஏற்படவாய்ப்பிருப்பதாகக் கூறப்பட்டிருந்தது.
இதையடுத்து விசாரணையை நீதிபதி நாளைக்கு ஒத்தி வைத்துவிட்டார்.
நீதிமன்றம் அமைந்துள்ள பகுதியில் இருந்து சிறிது தூரத்தில் தான் கடல் இருப்பது குறிப்பிடத்தக்கது.
-
பிறப்பொக்கும் எல்லா உயிர்க்கும்.. என சொன்ன வள்ளுவர் சனாதனியா? ஆளுநர் மன்னிப்பு கோர வேண்டும் -சிபிஎம் -
Ajith Kumar: நடிகர் அஜித்குமாரின் தாய் மோகினி காலமானார்! -
இந்திய ரயில்வே வரலாற்றில் விசித்திரம்! சேலம்- சென்னை ஓடும் ரயிலில் ரூ.5.78 கோடி கொள்ளை நினைவிருக்கா? -
ராணிப்பேட்டை டூ தேனி வரை.. 16 மாவட்டங்களில் பேய் மழை! வார்னிங் கொடுத்த வானிலை மையம் -
விஜய் நிறைவேற்றியே ஆகணும்.. பழைய ஓய்வூதியம் டூ 4 ‘டிமாண்ட்'.. பிரஷர் போடும் அரசு ஊழியர் சங்கம் -
பெங்களூருக்கு ஜில் அப்டேட் கொடுத்த வெதர்மேன்! மழை கொட்டப்போகுது.. சென்னை நிலவரம் என்ன? விவரம்! -
திருச்செங்கோடு தேர் திருவிழாவில் சோகம்.. சக்கரத்தில் சிக்கி இளைஞர் பலி! முதலமைச்சர் விஜய் இரங்கல்! -
சென்னையில் விட்டு விளாச போகுது.. இன்று 17 மாவட்டங்களில் கனமழை பெய்யும்.. வானிலை மையம் எச்சரிக்கை -
தமிழகத்தில் 30 ஐஏஎஸ் அதிகாரிகள் அதிரடி மாற்றம்.. மதுரை உள்பட பல மாவட்டங்களின் கலெக்டர்கள் இடமாற்றம் -
தமிழகத்தில் முந்தைய ஆண்டுகளை விட அதிகரித்த சர்க்கரை நோய் பாதிப்பு! பெண்களை விட ஆண்களுக்கு அதிகம் -
தமிழக குழந்தைகள் எவ்வளவு பாதுகாப்பாக உள்ளனர்? தடுப்பூசி குறித்து வெளியான புதிய டேட்டா -
வெயிலுக்கு இன்று ‘பிரேக்’.. சென்னை உட்பட பல மாவட்டங்களில் மழை பெய்ய வாய்ப்பு.. வானிலை மையம் அப்டேட்!












Click it and Unblock the Notifications