கல்பாக்கம் அணு விஞ்ஞானியும் பலி
Subscribe to Oneindia Tamil
சென்னை:
கல்பாக்கத்தில் கடல் கொந்தளிப்பால் ஏற்பட்ட அலையில் அணு விஞ்ஞானியான டாக்டர் செல்வராஜ் என்பவரும் உயிரிழந்தார்.
தமிழகத்தில் 5,000க்கும் மேற்பட்டவர்களைப் பலிவாங்கிய கடல் கொந்தளிப்பு, செல்வராஜ் என்ற அணு விஞ்ஞானியையும் பலிகொண்டுள்ளது. இவர் கல்பாக்கத்தில் அணு மின் நிலையத்தில் பணியாற்றி வந்தார்.
கடலில் அடித்துச் செல்லப்பட்டு கரையொதுங்கிய அவரது உடலை கல்பாக்கம் அணுமின் நிலைய அதிகாரிகள் அடையாளம் கண்டனர்.கல்பாக்கம் அணுமின் நிலையத்தைச் சேர்ந்த வேறு ஏதேனும் ஊழியர்கள் பலியாகியுள்ளனரா என்ற விவரம் இன்னும் தெரியவில்லை.
கல்பாக்கம் பகுதியில் மட்டும் 66 பேர் பலியாகியுள்ளது குறிப்பிடத்தக்கது.












Click it and Unblock the Notifications