சென்னையில் புறநகர் ரயில்கள் நிறுத்தம்
Subscribe to Oneindia Tamil
டெல்லி:
சென்னையில் கடல் கொந்தளிப்பு காரணமாக இன்று காலை 11 புறநகர் ரயில்கள் நிறுத்தப்பட்டன. திருச்சியில் பல ரயில்கள் தாமதமாகவந்தன.
கடல் கொந்தளிப்பு காரணமாக தென் இந்தியாவின் பல பகுதிகளில் நேற்று ரயில் போக்குவரத்து பாதிக்கப்பட்டது. அவற்றில்பெரும்பாலான ரயில்கள் இன்று வழக்கம்போல் இயங்கின.
இந்த ரயில்கள் மூலம் நிவாரணப் பொருட்கள் அனுப்பப்பட்டு வருகின்றன.
இருப்பினும் சென்னையில் இன்று காலை 11 புறநகர் ரயில்கள் இன்று ரத்து செய்யப்பட்டன. திருச்சி மண்டலத்தில் 4 ரயில்கள் தாமதமாகஇயங்கி வருகின்றன.
கடல் கொந்தளிப்பில் நாகூர்- திருவாயூர் இடையேயான தண்டவாளப் பாதை சுமார் 2 கிலோ மீட்டர் தூரத்துக்கு சேதமடைந்தது.இப்போது அதனை சரிசெய்யும் பணி நடந்து வருகிறது என்று ரயில்வே செய்திக் குறிப்பு தெரிவிக்கிறது.












Click it and Unblock the Notifications