உலக வரலாற்றில் மாபெரும் நிவாரணப் பணி
ஜெனீவா:
![]() |
கடல் கொந்தளிப்பால் பாதிக்கப்பட்ட ஆசிய நாடுகளுக்கு பெரிய அளவிலான நிவாரணப் பணிகளை உலக நாடுகள் மேற்கொண்டுவருகின்றன.
கடந்த ஞாயிற்றுக்கிழமை இந்தோனேஷியா கடல் பகுதியில் ஏற்பட்ட நில நடுக்கத்தால் பெரும் கடல் கொந்தளிப்பு ஏற்பட்டது. இதில்55,00க்கும் மேற்பட்டவர்கள் பலியானார்கள்.
இதைடுத்து பாதிக்கப்பட்ட பகுதிகளில் உலக நாடுகள், சர்வதேச தொண்டு நிறுவனங்கள் தீவிர நிவாரணப் பணிகளை மேற்கொண்டுள்ளன.
பாதிக்கப்பட்டவர்களுக்கு உடனடி நிவாரணம் வழங்க 44 மில்லியன் டாலர் தேவைப்படுவதாக செஞ்சிலுவைச் சங்கம் தெரிவித்துள்ளது.இதன் பொதுச் செயலாளர் மார்க் நிஸ்கலா கூறுகையில்,
மிகப் பெரிய அளவில் பாதிப்பு ஏற்பட்டுள்ளதால் நிவாரணப் பணிகளை மேற்கொள்வது பெரிய சவலாக உள்ளது என்றார்.
சீனா, டென்மார்க், பிரான்ஸ், இந்தியா மற்றும் ரஷ்யா ஆகிய நாடுகள் இலங்கைக்கு டன் கணக்கில் உணவுப் பொருட்களையும்,மருந்துகளையும் விமானங்களில் அனுப்பி வருகின்றன.
இந்தியாவில் பாதிக்கப்பட்டவர்களுக்கு 114 மில்லியன் டாலர் அளவிற்கு உடனடி நிவாரணப் பணிகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.இந்தியாவில் நிவாரண முகாம்களில் தங்க வைக்கப்பட்டவர்களுக்கு தொற்றுநோய் பரவ வாய்ப்புள்ளதாக தொண்டு நிறுவன ஊழியர்கள்தெரிவித்துள்ளனர்.
தென்னிந்தியாவில் ஆய்வு செய்த யுனிசெஃப் அதிகாரி லிஸட் பர்க்கர்ஸ் கூறுகையில், முகாம்களில் சுத்தமான தண்ணீர் கிடைப்பதுஅரிதாகி வருகிறது. இதனால் நோய் பரவும் வாய்ப்பு அதிகரித்து வருகிறது என்றார்.
இந்தோனேஷியா, மியான்மர், தாய்லாந்து, மலேசியா ஆகிய நாடுகளும் பலத்த பாதிப்புக்குள்ளாகியுள்ளன. இந்தோனேஷியாவில்27,000க்கும் அதிகமானோர் பலியாகியிருப்பார்கள் என்று அஞ்சப்படுகிறது.
இங்கு டெங்கு காய்ச்சலும், வயிற்றுப்போக்கும் பரவ வாய்ப்பிருப்பதாக செஞ்சிலுவை சங்கத்தை சேர்ந்த ஹாடி குஸ்வோயா கூறினார்.
நியூயார்க்கில் ஐ.நா. அதிகாரி ஜேன் இஜிலண்ட் கூறுகையில், உலக வரலாற்றிலேயே முதன் முறையாக மிகப் பெரிய அளவில் நிவாரணப்பணிகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.
பல இடங்களில் சடலங்களை அடையாளம் கண்டு எடுத்துச் செல்ல ஆட்கள் இல்லாததால் பெரும்பாலான சடலங்கள் மொத்தமாகஅடக்கம் செய்யப்படுகின்றன. சடலங்கள் அழுகி குடிநீரைப் பாதிக்கும் முன்பு அவற்றை அடக்கம் செய்ய வேண்டியுள்ளது.
இது மிகப் பெரிய பணியாகும். பல பில்லியன் டாலர் மதிப்புக்கு அழிவு ஏற்பட்டுள்ளது என்று கூறினார்.
பாதிக்கப்பட்ட பகுதிகளில் உயிர் பிழைத்தவர்கள் அப்பகுதியை விட்டு வெளியேறிய வண்ணம் உள்ளனர். மக்களைமீட்கவும்,காயமடைந்தவர்களை மருத்துவமனைக்குக் கொண்டு செல்லவும் நூற்றுக்கணக்கில் கப்பல்கள், ஹெலிகாப்டர்கள் மற்றும் விமானங்கள்பயன்படுத்தப்பட்டு வருகின்றன.













Click it and Unblock the Notifications