For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

கருணாநிதி பரப்பிய வதந்தி: ஜெ.

By Staff
Google Oneindia Tamil News

சென்னை:

தனது உடல் திலம் குறித்து திமுகவினரை விட்டு வதந்தி பரப்பி விட்டது கருணாநிதிதான் என்று முதல்வர்ஜெயலலிதா குற்றம் சாட்டியுள்ளார்.

சென்னையில் செய்தியாளர்களிடம் பேசிய ஜெயலலிதா கூறியதாவது:

கருணாநிதியின் உடல் நலம் குறித்து போலீஸார் தான் வதந்தி பரப்பியதாக திமுக குற்றம் சாட்டியுள்ளது. ஆனால்உண்மையில், கருணாநிதியின் உத்தரவின் பேரில்தான், அவரது உடல் நலம் குறித்த வதந்தியை திமுகவினரேபரப்பியுள்ளனர்.

சுனாமி தாக்குதலால் பாதிக்கப்பட்ட பகுதிகளில் நிவாரணப் பணிகளில் போலீஸார் முழு வீச்சில் ஈடுபட்டுள்ளனர்.அவர்களுக்கு வேறு எதைப் பற்றியும் சிந்திக்க நேரமில்லை, சாப்பிடக் கூட செல்லாமல் அவர்கள் முழு வீச்சில்பணியில் ஈடுபடுத்தப்பட்டிருந்தனர்.

ஆனால், சுனாமி பாதிக்கப்பட்ட பகுதிகளைப் போய்ப் பார்க்க விருப்பமில்லாத கருணாநிதி, அவராகவே போய்மருத்துவமனையில் சேர்ந்து கொண்டு வதந்திகளைப் பரப்பிக் கொண்டிருக்கிறார்.

அவரை விர அவரது பேரன் தயாநிதி மாறன் மிகவும் சிறுபிள்ளைத்தனமாக இருக்கிறார். மிகப் பெரியஅளவிலான தேசிய சீரழிவு ஏற்படும்போது, அரசின் நிவாரண நடவடிக்கைகள் சரியில்லை என்று ஒரு மத்தியஅமைச்சர் அதிருப்தி தெரிவிப்பது சுத்த சிறுபிள்ளைத்தனமானது.

இவற்றை அப்படியே புறக்கணித்து விட்டு, நிவாரணப் பணிகளில் கவனம் செலுத்துவதுதான் நல்லது.

தயாநிதி மாறனின் கருத்துக்கள் பரிசீலனைக்கே உரியவை அல்ல. மாவட்ட நிர்வாகம் ஒவ்வொன்றும் நிவாரணப்பணிகளை போர்க்கால அடிப்படையில் செய்து வருகின்றன.

அரசியல், நிர்வாகம் ஆகியவற்றில் நல்ல அனுபவம் அல்லது குறைந்தபட்ச அனுபவமாவது இருந்தால்தான்இதுபோன்ற விஷயங்களில் கருத்து சொல்வது நல்லது.

சிறந்த நிர்வாகிகளான உள்துறை அமைச்சர் சிவராஜ் பாட்டீல், ஆளுநர் பர்னாலா போன்றோர் தமிழக அரசின்நிடவடிக்கைகளை மிகவும் பாராட்டியுள்ளனர். எனவே அனுபவமே இல்லாத கத்துக்குட்டிகளின் கூக்குரலுக்குநாம் கவலைப்படத் தேவையில்லை என்றார் ஜெயலலிதா.

(ஆளுநர் மாற்றத்தின்போது சிவராஜ் பாட்டீல் பேசியதை டேப் செய்து, வெளியிட்டு அவரை கடுமையாகக் குறை சொன்னதும் முதல்வர்ஜெயலலிதாவே தான் என்பது நினைவுகூறத்தக்கது.)

 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X