உதவி கரம் நீட்டுங்கள்
கடல் கொந்தளிப்பினால் பாதிக்கப்பட்டவர்களுக்கு உதவி செய்ய விருப்பம் உள்ளவர்கள் பிரதமர் மற்றும் முதல்வரின் பொது நிவாரணநிதிக்கு தங்களால் இயன்ற பணத்தை அனுப்பி வைக்கலாம்.
ஸ்டேட் பாங்க், சென்டிரல் பேங்க், யூனியன் பேங்க், தேனா பேங்க், சிண்டிகேட் பேங்க், கார்ப்பரேஷன் பேங்க், பேங்க் ஆப் இந்தியா,இந்தியன் ஓவர்சீஸ் பேங்க், பஞ்சாப் நேஷனல் பேங்க், இந்தியன் பேங்க், அலஹாபாத் பேங்க் மற்றும் சிட்டி பேங்க் ஆகியவற்றில் தங்களதுபணத்தை நேரடியாகவே செலுத்தலாம்.
அல்லது தமிழக முதல்வரின் நிவாரண நிதிக்கோ, பிரதமரின் நிவாரண நிதிக்கோ அனுப்பலாம்.
முதல்வர் நிவாரண நிதிக்கு அனுப்ப:
தமிழக முதல்வரின் பொது நிவாரண நிதிக்கு பணம் அனுப்ப விரும்புவர்கள், CHIEF MINISTERS PUBLIC RELIEF FUND என்றபெயருக்கு செக், டி.டி எடுத்து கீழ்க்கண்ட முகவரிக்கு அனுப்பலாம்.
The Joint Secretary to Government and Treasurer,
Chief Ministers Public Relief Fund,
Finance Department,
Secretariat,
Chennai-600 009.
இந்த முகவரிக்கு மணியார்டரும் அனுப்பலாம்.
பிரதமர் நிவாரண நிதிக்கு அனுப்ப:
பிரதமரின் நிவாரண நிதிக்கு அனுப்ப விரும்புவோர்,
Prime Ministers National Relief Fund என்ற பெயருக்கு காசோலையோ (cheque), வரைவோலையோ (Demand draft) எடுத்து,
Prime Ministers Office,
South Block,
New Delhi-110001
என்ற முகவரிக்கு அனுப்பலாம்.
தமிழக ஹெல்ப்-லைன் தொலைபேசி எண்:
தமிழகத்தில் பொது நிவாரண நிதிக்கு நிதியளிக்க விரும்புவோர் அல்லது பிற வகையான உதவிகளைச் செய்ய விரும்புவோர் 044-28593990 என்றதொலைபேசி எண்ணில் கட்டுப்பாட்டு அறையைத் தொடர்பு கொண்டு தகவல்களைப் பெறலாம்.
சென்னைக்கு வெளியே இருப்போர் மாவட்ட ஆட்சித் தலைவர் அலுவலகங்களை அணுகி ஆட்சியர்களிடம் உதவிகளை அளிக்கலாம்.
இதேபோல, மாநில சிவில் சப்ளைஸ் நிறுவன அலுவலகங்களையும் அணுகி உதவிகளை அளிக்கலாம்.












Click it and Unblock the Notifications