தீவுகள் இடம் பெயர்ந்தன: பூமியின் வேகம் குறைந்தது!!
லாஸ் ஏஞ்சல்ஸ்:
![]() |
இந்தியப் பெருங்கடலில் ஏற்பட்ட பயங்கரமான நில நடுக்கத்தால் இந்தோனேஷியாவின் சுமத்ரா அருகே உள்ள தீவுகள் இடம்பெயர்ந்துவிட்டதாகத் தெரியவந்துள்ளது.
கடந்த ஞாயிற்றுக்கிழமை சுமத்ரா தீவு அருகே கடலுக்குள் நிகழ்ந்த பெரும் நில நடுக்கத்தின் (9.0 ரிக்டர் அளவு) காரணமாககடும் கடல் கொந்தளிப்பு ஏற்பட்டது. இதனால் இந்தோனேஷியா, தாய்லாந்து, இந்தியா, இலங்கை மலேசியா நாடுகளில்68,000க்கும் அதிகமானோர் பலியானார்கள்.
இந்த நில நடுக்கத்தின் மற்றொரு விளைவாக கடலுக்கு அடியே இருக்கும் பாறை அடுக்குகள் 98 அடி (30 மீட்டர்) வரைநகர்ந்துள்ளன. இதன் காரணமாக நிக்கோபார் தீவுகளும், சிமுலே தீவும் சில அடிகள் இடம் பெயர்ந்துவிட்டன.
செயற்கைக் கோள்கள் மூலம் எடுக்கப்பட்ட படங்களை வைத்து அமெரிக்க நிலவியல் நிபுணர்கள் இந்த அதிர்ச்சிகரமானதகவலைத் தெரிவித்துள்ளனர்.
பூமியின் வேகம் குறைந்தது?
இதற்கிடையே இந்தோனேஷியாவில் ஏற்பட்ட மிக பயங்கரமான நில நடுக்கத்தால் பூமியின் சுற்று வேகத்தில் கூட சிறு மாற்றம்ஏற்பட்டுள்ளதாக அமெரிக்க வல்லுனர்கள் கூறியுள்ளனர்.
பூமி தன்னைத் தானே சுற்றும் வேகத்தில் 3 மைக்ரோ வினாடிகள் குறைய வாய்ப்புள்ளதாகவும் இதனால் வருடத்தில் ஒரு நாள் குறையவாய்ப்பிருப்பதாகவும் கூட அவர்கள் தெரிவித்துள்ளனர். இது தொடர்பாக ஆராய்ச்சி மேற்கொண்ட அமெரிக்க விஞ்ஞானிகள் பல அதிர்ச்சியூட்டும்தகவல்களை வெளியிட்டுள்ளனர்.
அதன் விவரம் வருமாறு:
இந்திய பீடபூமி தாழ்ந்து, பர்மியப் பீடபூமி உயர்ந்துவிட்டது. ஆசிய வரைபடத்தில் சிறு மாறுதல்களும் ஏற்பட்டுள்ளன. இதன் காரணமாக தட்பவெப்பநிலையில் மாறுதல்கள் ஏற்படக்கூடும்.
பூமி தன்னைத்தானே சுற்றும் வேகம் 3 மைக்ரோ வினாடி குறைந்திருக்க வாய்ப்புள்ளது. இதன் காரணமாக ஆண்டின் 365 நாட்களில் ஒரு நாளை நாம்இழக்க வேண்டியதிருக்கும். இது குறித்து முழு விவரங்கள் 3 வாங்களில் தெரியவரும் என்று கூறப்பட்டுள்ளது.
-
AMMK: அமமுக போட்டியிடும் 11 தொகுதியின் உத்தேச பட்டியலை கொடுத்த தினகரன்! கோவில்பட்டி எங்கே? -
தமிழக சட்டசபையில் உங்கள் குரல் ஒலிக்குமா? நிருபர் கேட்ட கேள்வி! வைகோ சொன்ன ஸ்டன்னிங் பதில்! -
ஷாக்..ஏப்-1ல் வாகன ஓட்டிகளுக்கு காத்திருக்கும் அதிர்ச்சி! டோல் கட்டணத்தை உயர்த்தும் NHAI! எங்கெங்கே? -
வேட்புமனு தாக்கல் செய்ய.. 4 நாட்கள்தான்! அதிரடியாக அறிவித்த தேர்தல் ஆணையம்! -
மழையெல்லாம் ஓவர்.. இனி வறண்ட வானிலைதான்! உஷாரா இருங்க மக்களே! வெதர் அப்டேட்! -
அதை சொல்ல யாருக்கும் அருகதை இல்லை.. வீட்டிலும், ஆபீஸிலும் இதுதான் நடக்குது செல்வராகவன் ஆதங்கம் -
56 out of 234: விசிகவுக்கு "6+2!" திமுக கூட்டணியில் எந்தெந்த கட்சிகளுக்கு எத்தனை தொகுதிகள்? -
கேஸ் மானியம் ₹300 வந்தாச்சா? வங்கிக்கு போகவே வேண்டாம்… வீட்டிலேயே 2 நிமிஷத்தில் தெரிஞ்சுக்கலாம் -
அமெரிக்காவை வீழ்த்தும் ஈரான்.. ஆட்டம் காணும் மிதக்கும் அரண்மனை.. ஒரே இரவில் பஸ்பம் ஆன $13000000000! -
டிரம்ப் வயிற்றில் பாலை வார்த்த ஈரான்.. அமெரிக்காவுக்கு முதல் முறையாக பச்சைக்கொடி -
உடைந்தது திமுக கூட்டணி..தனித்துப் போட்டியிடும் விசிக! அதிரடியாக அறிவித்த திருமா! அவரே சொன்ன விளக்கம் -
வைகோவால் 25 சீட் போச்சு.. அன்புமணியால் திமுகவுக்கு 50 சீட் காலி.. 2016இல் விஜயகாந்த் விழுந்த கதை!













Click it and Unblock the Notifications