பிணங்களில் நகை திருடும் கும்பல்: நாய்கள் குதறிய உடல்கள்

Subscribe to Oneindia Tamil

நாகப்பட்டிணம்:

Dead body lying in beach

வேளாங்கண்ணி பகுதியில் இறந்து கிடப்பவர்களின் உடல்களில் இருந்து நகைகளைத் திருடி வருகின்றன சில கும்பல்கள்.

சுனாமியால் மிக பயங்கர சேதத்தை அனுபவித்துள்ளது வேளாங்கண்ணி. இங்கு கிருஸ்துமஸை ஒட்டி வழிபாடு நடத்த ஆயிரக்கணக்கானமக்கள் நாட்டின் பல பகுதிகளில் இருந்து வந்திருந்தனர்.

வந்த இடத்தில் கடல் அலைகளுக்குப் பலியாகிவிட்டனர். இந்த சோகத்தில் வேளாங்கண்ணியே கலங்கிப் போய் நிற்கிறது.

இந் நிலையில் இறந்து போன உடல்களை வைத்து அரசு உதவியான ரூ.1 லட்சத்தைப் பெற சில கும்பல்கள் புறப்பட்டுள்ளன. இந்தஉடல்களை அதிகாரிகளிடம் காட்டி பலியானது தங்களது குடும்ப உறுப்பினர் தான் என்று பொய் சொல்லி வருகின்றனர்.

இப்படி இறந்தோர் உடலை வைத்து பணம் பார்க்கும் கூட்டம் ஒரு பக்கம் அலைய இன்னொரு கும்பலோ பிணங்களின் காது, மூக்கு, கை,கழுத்தில் உள்ள நகைகளைக் குறி வைத்து அலைந்து கொண்டிருக்கிறது.

மேலும் வேளாங்கண்ணி கடைவீதியில் தப்பிப் பிழைத்த சில கடைகைளக் கூட சில திருட்டுக் கும்பல்கள் உடைத்துத் திருடி வருகின்றன.

நாய்கள் தின்ற உடல்கள்:

மனிதர்கள் ஒரு பக்கம் இப்படி உடல்களை வைத்து லாபம் ஈட்ட முனைந்து கொண்டிருக்க இன்னொரு பக்கம் கரையொதுங்கிக் கிடக்கும்உடல்களை நாய்கள் கடித்துக் குதறி வருகின்றன.

கடலூரில் கலாவள்ளி என்ற நர்ஸ் ஒருவரின் உடலை அப் பகுதியினர் கண்டடெடுத்தபோது அதை நாய்கள் குதறிக் கொண்டிருந்தன. இதேபோலத்தான் பல உடல்களும் நாய்களால் கடித்துக் குதறப்பட்டுள்ளன.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+