For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

நாகையில் 4,900 உடல்கள்: தமிழகத்தில் பலி 9,000

By Staff
Google Oneindia Tamil News

நாகப்பட்டிணம்:

 bodies being buried togetherநாகப்பட்டிணத்தில் மட்டும் இதுவரை 4,900 உடல்கள் மீட்கப்பட்டு புதைக்கப்பட்டுள்ளதாக ரெட் கிராஸ் அமைப்பு தெரிவித்துள்ளது.

தமிழகம் முழுவதுமே 3,900 பேர் தான் உயிரிழந்ததாக தமிழக அரசு கூறிக் கொண்டிருந்தது. நாகப்பட்டிணத்தில் உயிரிழப்பு 2,500என்றது. ஆனால், நாகை மாவட்டத்தில் மட்டுமே 4,900 உடல்களை மீட்டு புதைத்துள்ளது ரெட் கிராஸ்.

இதையடுத்து தமிழகம் முழுவதும் 6,085 பேர் பலியாகிவிட்டதாக தமிழக அரசின் மூத்த அதிகாரி ஒருவர் கூறியுள்ளார். நாகப்பட்டிணம்மாவட்டத்தில் 4,332 பேர் பலியாகியுள்ளதாகக் கூறினார்.

கன்னியாகுமரி மாவட்டத்தில் 808 பேரும், கடலூரில் 559 பேரும், சென்னையில் 173 பேரும், காஞ்சிபுரம் மாவட்டத்தில் 103 பேரும்மேலும் 8 மாவட்டங்களில் 110 பேரும் உயிரிழந்ந்ததாகவும், மொத்தத்தில் 7,000 பேர் உயிரிழந்துள்ளதாகவும் அந்த அதிகாரிதெரிவித்தார்.

ஆனால், நாகப்பட்டிணம் நகரில் இருந்து 2,400 உடல்களும், இம் மாவட்டத்தில் உள்ள வேளாங்கண்ணியில் இருந்து 1,500 உடல்களும்,மாவட்டத்தின் பிற பகுதிகளில் இருந்து 1,000 உடல்களும் மீட்கப்பட்டு புதைக்கப்பட்டுள்ளதாக செஞ்சிலுவைச் சங்கத்தின் தஞ்சாவூர்மாவட்டப் பொறுப்பாளர் ராஜ் மனோகர் தெரிவித்துள்ளார்.

இதனால் மாநிலம் முழுவதும் பலியானவர்கள் எண்ணிக்கை 9,000த்துக்கும் அதிகம் இருக்கும் என்று தெரிகிறது.

இதைத் தவிர மேலும் பல உடல்களை தங்களது அமைப்பின் தொண்டர்கள் மீட்டு வருவதாகவும் கூறியுள்ளார்.

காயமடைந்தவர்கள் தஞ்சாவூர், திருவாரூர், நாகப்பட்டிணம் மருத்துவமனைகளில் சேர்க்கப்பட்டு வருவதாகவும், மேலும் தமிழக,கர்நாடகத்தைச் சேர்ந்த 30 மருத்துவக் குழுக்கள் மாவட்டத்தின் பல பகுதிகளிலும் முகாம்களை அமைத்து சிகிச்சை அளித்து வருவதாகவும்தெரிவித்தார்.

செஞ்சிலுவைச் சங்கத்தின் இந்த மீட்பு முயற்சிகளுக்கு ஆர்.எஸ்.எஸ். அமைப்பின் தொண்டர்களும் முழு அளவில் உதவி புரிந்துவருகின்றனர்.

மீட்கப்படும் பல உடல்கள் அடையாளம் தெரியாத அளவுக்கு சிதைந்துவிட்டதால் உறவினர்களுக்காக காத்திருக்காமல் அவைஉடனடியாகப் புதைக்கப்பட்டு வருகின்றனர்.

நாகூரில் இருந்து வேளாங்கண்ணி வரை சுமார் 14 மீனவ கிராமங்கள் ஒட்டுமொத்தமாக கடலுக்குள் இழுத்துச் செல்லப்பட்டுள்ளன.

வேதாரண்யம் அருகே ஆறுகாட்டுத் துறை, புஷ்பவனம், தரங்கம்பாடி அருகே உள்ள சந்திரபாடி, ஆக்கூர், சின்னங்குடி, குமரக்குடி ஆகியகிராமங்கள் அடியோடு அழிந்து போய்விட்டன.

நாகூர் தர்காவின் திருமண மண்டபத்தில் ஆயிரக்கணக்கானவர்கள் தங்க வைக்கப்பட்டுள்ளனர். ஆனால், இவர்களுக்கு முறையாகஉணவும், மாற்று உடைகளும் தரப்படவில்லை. இதனால் அவர்கள் சாலை மறியலில் ஈடுபட்டனர்.

நாகப்பட்டிணம் மாவட்டத்துக்கு பிஎச்இஎல், ஹூயுன்டாய் நிறுவனங்கள் லாரிகளில் மருந்துப் பொருட்களை அனுப்பி வைத்துள்ளன.

 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X