For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

பிணங்களால் நோய் பரவுகிறது: கட்டுப்படுத்த ராணுவம் உதவி!!

By Staff
Google Oneindia Tamil News

சென்னை:

Bodies being buried
சுனாமி தாக்கிய பகுதிகளில் புதைக்கப்படாத பிணங்களால் பல இடங்களில் நோய் பரவி வருவதால் மக்கள் மத்தியில் பெரும் பீதிஏற்பட்டுள்ளது.

நாகப்பட்டிணம், கன்னியாகுமரி, கடலூரில் பல இடங்களில் பிணங்களால் நீர் நிலைகள் கெட்டுப் போயுள்ளன. இந்த நீரை அருந்தியபலருக்கும் வாந்தியும் காலராவும் ஏற்பட்டுள்ளது. மேலும் டைபாய்ட் காய்ச்சலும் பரவி வருகிறது.

தங்களுக்கு உரிய அளவில் நோய் தடுப்புகளை வழங்கவில்லை என பொது மக்கள் அதிருப்தி தெரிவித்துள்ளனர். பல இடங்களில்மருந்துகள், உணவு கேட்டு சாலை மறியல் போராட்டங்களிலும் ஈடுபட்டனர்.

இதையடுத்து நோய்த் தடுப்பில் அரசு நிர்வாகத்துக்கு ராணுவம் உதவ ஆரம்பித்துள்ளது. தென் மண்டல ராணுவ கமாண்டில் இருந்துடாக்டர்களும் மருந்துகளும் இப் பகுதிகளுக்கு அனுப்பப்பட்டுள்ளனர். மேலும் பிணங்களை மீட்டுப் புதைப்பதை வேகப்படுத்த கன ரகபுல்டோசர் உள்ளிட்ட எந்தியரங்களுடன் ராணுவ பொறியாளர்களும் அனுப்பப்பட்டுள்ளனர்.

சுனாமி தாக்கிய தமிழகத்தின் பெரும்பாலான இடங்களில் வெளியில் கண்ணுக்குத் தெரியும் உடல்கள் அகற்றப்பட்டுபுதைக்கப்பட்டுவிட்டன. ஆனால், மண்ணுக்குள் அறைகுறையாகப் புதைந்து கிடக்கும் பிணங்கள், இடிபாடுகளில் கிடக்கும் உடல்கள்,முட்புதர்களில் குப்பையோடு குப்பையாய் சேர்ந்து கிடக்கும் உடல்களை உடனே கண்டுபிடிக்க காண முடியவில்லை.

இதனால் வாசனை வரும் இடத்தைக் குறி வைத்து இடிபாடுகளை நீக்கி, மண்ணைத் தோண்டி உடல்களைத் தேடி எடுத்து வருகின்றனர்மக்கள். மேலும் மோப்ப நாய்களின் உதவியுடன் உடல்களைத் தேடும் பணியில் போலீசாரும் ராணுவத்தினரும் ஈடுபட்டுள்ளனர்.

புதைக்கப்படாத இந்தப் பிணங்கள் காரணமாக பலருக்கும் வாந்தி, பேதி ஏற்பட்டு வருகிறது. மேலும் பலர் காய்ச்சலால்பாதிக்கப்பட்டுள்ளனர். இதையடுத்து நோய் பரவாமல் தடுக்க மருத்துவக் குழுவினர் அப் பகுதிகளுக்கு அனுப்பட்டு வருகின்றனர்.

இந்தப் பணிகளில் மாவட்ட நிர்வாகத்துக்கு ராணுவமும் உதவி வருகிறது.

பல இடங்களில் நோய் தடுப்புக்காக பிளீச்சிங் பெளடர் தெளிக்கப்பட்டு வருகிறது.

குளச்சல் பகுதியில் இங்கு 806 பேர் இறந்ததாக அரசு கூறினாலும் இதைவிட இரு மடங்கு பேர் இறந்திருப்பதாகத் தெரிகிறது. மேலும் 700பேரின் கதி என்னவானது என்று தெரியவில்லை.

கன்னியாகுமரி மாவட்டத்தில் 33 கிராமங்கள் அடியோடு பாதிக்கப்பட்டுள்ளன. சுமார் 1 லட்சம் மக்கள் பாதிக்கப்பட்டுள்ளனர். 7,690வீடுகள் இடிந்துள்ளன. இவர்களில் 26,000 பேர் 44 அரசு முகாம்களில் தங்க வைக்கப்பட்டுள்ளனர்.

இவர்களது ஆயிரக்கணக்கான ஆடு, மாடுகளும் உயிரிழந்துள்ளன.

 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X