தமிழக அரசு மீது ஆளுநரிடம் திமுக புகார்

Subscribe to Oneindia Tamil

சென்னை:

Rescue opration in Velankanni

கடல் கொந்தளிப்பு ஏற்பட்ட பகுதிகளில் தமிழக அரசு மிகவும் அலட்சியமாக நிவாரணப் பணிகளை மேற்கொண்டு வருவதாக திமுகவைச்சேர்ந்த மத்திய அமைச்சர் ராஜா ஆளுநர் பர்னாலாவை சந்தித்துப் புகார் கொடுத்தார்.

மதிய சுற்றுச்சூழல் மற்றும் வனத்துறை அமைச்சர் ராஜா இன்று பர்னாலாவைச் சந்தித்து புகார் மனு கொடுத்தார்.

அதில், கடல் கொந்தளிப்பு ஏற்பட்ட பகுதிகளில் தமிழக அரசு மிகவும் மெத்தனமாக நிவாரண நடவடிக்கைகளில் ஈடுபட்டுள்ளது. மத்தியக்குழுவினரோடு நான் பாதிக்கப்பட்ட பகுதிகளைப் பார்வையிட்டபோது பல இடங்களில் மீட்புப் பணிகளே நடக்காததை நேரில் பார்க்கமுடிந்தது.

குறிப்பாக கன்னியாமகுமரி மாவட்டத்தில் பாதிக்கப்பட்டுள்ள மக்களுக்கு உரிய நிவாரணம் கிடைக்காமல் அவர்கள் தவித்துவருகிறார்கள். அங்கு உடல்களும் அகற்றப்படவில்லை, மீட்புப் பணியும் நடக்கவில்லை. இது குறித்து மாவட்ட ஆட்சியரிடம்கேட்டபோது உரிய பதில் கிடைக்கவில்லை.

இப் பகுதியில் தமிழக முஸ்லீம் முன்னேற்றக் கழககத்தினர் தான் சிதறிக் கிடக்கும் உடல்களை மீட்டு புதைத்து வருகின்றனர். இவர்களுக்குதிமுக மற்றும் சமூக நல அமைப்புகளைச் சேர்ந்த தொண்டர்கள் உதவி வருகின்றனர்.

நாகப்பட்டிணத்திலும் இதே நிலை தான் உள்ளது. அங்கு அரசாங்கம் என்ற ஒன்று இருப்பதாகவே தெரியவில்லை. உடல்களை மீட்கும்இளைஞர்களுக்கு கையுறை கூட வழங்கவில்லை இந்த அரசு.

இந்தப் பிரச்சினையில் ஆளுநர் உடனடியாகத் தலையிட்டு தமிழக அரசுக்கு அறிவுறுத்த வேண்டும் என்று அதில் கூறப்பட்டுள்ளது.

இதுகுறித்து ஆவண செய்வதாக ஆளுநர் பர்னாலா ராஜாவிடம் உறுதியளித்தாக திமுக வெளியிட்ட செய்திக்குறிப்பு தெரிவிக்கிறது.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+