தமிழகத்தில் பலியானோர் எண்ணிக்கை 12,000
சென்னை:
தமிழகத்தில் சுனாமி பேய் அலைகளுக்குப் பலியானவர்கள் எண்ணிக்கை 10,000 முதல் 12,000 வரை இருக்கலாம் என்று கருதப்படுகிறது.
ஆனால், தமிழக அரசின் கணக்கின்படி 13 கடலோர மாவட்டங்களில் மொத்தம் 6,207 பேர் பலியானதாக அறிவிக்கப்பட்டுள்ளது. மேலும்2,732 பேர் காயமடைந்து சிகிச்சை பெற்று வருவதாகக் கூறப்பட்டுள்ளது.
தமிழகத்தில் சுனாமியால் பாதிக்கப்பட்ட கடலோரப் பகுதிகள்
அரசின் கணக்கின்படி பலியானவர்கள் விவரம்:
நாகப்பட்டிணம்- 4,379
கன்னியாகுமரி- 808
கடலூர்- 571
காஞ்சிபுரம்- 124
சென்னை- 204
விழுப்புரம்- 47
திருவள்ளூர்- 27
புதுக்கோட்டை- 15
திருவாரூர்- 10
தஞ்சாவூர்- 9
ராமநாதபுரம்- 6
திருநெல்வேலி- 4
தூத்துக்குடி- 3
அரசின் கணக்கில் காணாமல் போன ஆயிரக்கணக்கானவர்கள் சேர்க்கப்படவில்லை என்பது குறிப்பிடத்தக்கது. வேளாங்கண்ணி பகுதியில்ஆயிரம் உடல்கள் மீட்கப்பட்டுள்ளன. இங்கு கிருஸ்துமஸை ஒட்டி சுற்றுலா வந்து பல நூறு பேரின் உடல்களைக் காணவில்லை.
அதே போல நாகப்பட்டிணத்தில் ரெட் கிராஸ் புதைத்த உடல்கள் மட்டும் 4,900. இதைத் தவிர குடும்பத்தினர், பொது மக்கள் ஆகியோரும்அனாதையாகக் கிடந்த பல உடல்களைப் புதைத்துள்ளனர். இந்த மாவட்டத்தில் பல நூறு பேரைக் காணவில்லை. ஆனால் மொத்த பலியே4,379 தான் என்கிறது அரசு.
இதே போல கடலூரிலும் கன்னியாகுமரியிலும் நூற்றுக்கணக்கானவர்களைக் காணவில்லை. குளச்சல் பகுதியில் பல கடலோர கிராமங்களேமொத்தமாகக் காணாமல் போய்விட்டன. இப் பகுதிகளிலும் ஆயிரக்கணக்கான சாவுகள் கணக்கில் வரவில்லை.
இந் நிலையில் அதிகாரப்பூர்வமற்ற தகவல்களின்படி 12,000 பேர் வரை தமிழகத்தில் பலியாகிவிட்டதாகத் தெரிகிறது.
-
தமிழகத்தில் 3வது குழந்தை பெற்றுக்கொண்டால் சலுகை? சுகாதாரத்துறை அமைச்சருக்கு விசிக கடிதம் -
வேளாங்கண்ணி பேராலயத்துக்கு வந்த சென்னை மருத்துவ மாணவி.. யாருக்குமே இப்படி ஆகக்கூடாது -
"வரும் சட்டமன்ற கூட்ட தொடரிலேயே ஆணவ கொலைக்கு எதிரான தனி சட்டம்!" அமைச்சர் வன்னியரசு முக்கிய தகவல் -
கோடை விடுமுறை முடிந்து... சென்னை திரும்பும் மக்கள்! 10 கி.மீ தூரத்திற்கு போக்குவரத்து நெரிசல்! -
ஆளுநரின் தனி செயலாளர் உட்பட.. தமிழகம் முழுவதும் ஐஏஎஸ் அதிகாரிகள் பலர் பணியிட மாற்றம்! -
விஜய் நிறைவேற்றியே ஆகணும்.. பழைய ஓய்வூதியம் டூ 4 ‘டிமாண்ட்'.. பிரஷர் போடும் அரசு ஊழியர் சங்கம் -
திருச்செங்கோடு தேர் திருவிழாவில் சோகம்.. சக்கரத்தில் சிக்கி இளைஞர் பலி! முதலமைச்சர் விஜய் இரங்கல்! -
வருங்கால இளைஞர்களுக்கு வழிவிடுங்க! அதிமுக ராஜசத்யன் திடீர் ட்வீட்! டீகோடு செய்து பார்த்தால்..! -
பெங்களூருக்கு ஜில் அப்டேட் கொடுத்த வெதர்மேன்! மழை கொட்டப்போகுது.. சென்னை நிலவரம் என்ன? விவரம்! -
சென்னையில் விட்டு விளாச போகுது.. இன்று 17 மாவட்டங்களில் கனமழை பெய்யும்.. வானிலை மையம் எச்சரிக்கை -
ராணிப்பேட்டை டூ தேனி வரை.. 16 மாவட்டங்களில் பேய் மழை! வார்னிங் கொடுத்த வானிலை மையம் -
"2.0 அவதாரம் எடுக்கும் அண்ணாமலை!".. பாஜகவா? புதிய கட்சியா? அரசியல் களத்தை அலற விட்ட போஸ்டர்கள்












Click it and Unblock the Notifications