மீண்டும் சுனாமி: மத்திய அரசு எச்சரிக்கை வாபஸ்
டெல்லி:
![]() |
தமிழகம் உள்ளிட்ட கடலோரப் பகுதிகளில் மீண்டும் சுனாமி அலைகள் தாக்கக் கூடும் என்று நேற்று காலை விடுத்த எச்சரிக்கையை மத்தியஅரசு இரவில் வாபஸ் வாங்கிவிட்டது.
கடந்த ஞாயிற்றுக்கிழமை நடந்த கடல் கொந்தளிப்பின் அதிர்ச்சியில் இருந்து தமிழகம் இன்னும் மீளாத நிலையில் நேற்று காலை மத்தியஉள்துறை அமைச்சகத்தின் சார்பில் தமிழகம், கேரளா, ஆந்திரா, அந்தமான், ஒரிஸ்ஸா மாநிலங்களுக்கு ஒரு அவசர எச்சரிக்கைஅனுப்பப்பட்டது.
அதில், சுமத்ரா தீவுப் பகுதியில் நில நடுக்கங்கள் தொடர்ந்து வருவதால் அடுத்த 48 மணி நேரத்தில் மீண்டும் கடலோரப் பகுதிகளில் சுனாமிதாக்கக் கூடும் என்று எச்சரிக்கப்பட்டிருந்தது.
அதற்கு ஏற்க கடலில் கொந்தளிப்பும் அதிகமாக இருந்ததால் மக்கள் அலறியடித்த வண்ணம் கடலோரப் பகுதிகளை விட்டு ஓடினர். மீட்புநடவடிக்கையில் ஈடுபட்டிருந்த தீயணைப்புப் படையினரும் போலீசாரும் தான் முதலில் ஓடினர்.
சென்னையில் ஆரம்பித்து கன்னியாகுமரி வரை லடசக்கணக்கான மக்கள் கையில் முடிந்ததை மட்டும் எடுத்துக் கொண்டு கிடைத்தவாகனங்களிலும் ஏறியும், வாகனங்கள் கிடைக்காதவர்கள் கால் நடையாகவும் ஓடினர்.
இதனால் தமிழகம் முழுவதுமே பெரும் பதற்றம் நிலவியது.
இந் நிலையில் சுமத்ரா தீவு அருகே பெரிய அளவில் பூகம்பம் ஏதும் ஏற்படவில்லை என்று வானிலை ஆராய்ச்சி மையம் அறிவித்தது.மேலும் மீண்டும் இப்போதைக்கு சுனாமி ஆபத்து ஏதும் இல்லை என்றும் கூறியது.
இதையடுத்து தான் விடுத்த எச்சரிக்கையை உள்துறை அமைச்சகம் நேற்றிரவில் வாபஸ் வாங்கிக் கொண்டது.
இந்த எச்சரிக்கையால் நாகப்பட்டிணம் பகுதிக்குச் செல்ல இருந்த பிரதமர் மன்மோகன் சிங் தனது பயணத்தை ரத்து செய்துவிட்டுஹெலிகாப்டரிலேயே சேதத்தைப் பார்வையிட்டுவிட்டுத் திரும்பியது குறிப்பிடத்தக்கது.
-
தமிழக சட்டசபை செயலாளர் சீனிவாசன் திடீர் ராஜினாமா.. பதவியை எட்டிப்பிடித்த சாந்தி.. பின்னணி என்ன? -
சூட்டோடு சூடா.. அதையும் ஒரு கை பாத்துருவோம்! அடுத்த பரிட்சைக்கு தயாரான விஜய்! வேகமெடுக்கும் பணிகள்! -
கொ*யில் முடிந்த பார் டான்ஸ்.. கொதித்துப் போன கோயம்பேடு! யான்சிக்கு இப்படியா சாவு வரனும்! ஷாக்! -
"RSS பிடியில் தமிழ்நாடு.." இந்து முன்னணி தலைவரிடம் வாழ்த்து பெற்ற அமைச்சர்கள்.. திமுக கடும் தாக்கு -
வேளாங்கண்ணி பேராலயத்துக்கு வந்த சென்னை மருத்துவ மாணவி.. யாருக்குமே இப்படி ஆகக்கூடாது -
"வரும் சட்டமன்ற கூட்ட தொடரிலேயே ஆணவ கொலைக்கு எதிரான தனி சட்டம்!" அமைச்சர் வன்னியரசு முக்கிய தகவல் -
கோடை விடுமுறை முடிந்து... சென்னை திரும்பும் மக்கள்! 10 கி.மீ தூரத்திற்கு போக்குவரத்து நெரிசல்! -
வருங்கால இளைஞர்களுக்கு வழிவிடுங்க! அதிமுக ராஜசத்யன் திடீர் ட்வீட்! டீகோடு செய்து பார்த்தால்..! -
தமிழகத்தில் 3வது குழந்தை பெற்றுக்கொண்டால் சலுகை? சுகாதாரத்துறை அமைச்சருக்கு விசிக கடிதம் -
விஜய் நிறைவேற்றியே ஆகணும்.. பழைய ஓய்வூதியம் டூ 4 ‘டிமாண்ட்'.. பிரஷர் போடும் அரசு ஊழியர் சங்கம் -
வாட்டி எடுத்த வெயில்! வேலூரில் அதிகபட்சமாக 106°F பதிவு! 15 இடங்களில் செஞ்சுரி! -
ராணிப்பேட்டை டூ தேனி வரை.. 16 மாவட்டங்களில் பேய் மழை! வார்னிங் கொடுத்த வானிலை மையம்













Click it and Unblock the Notifications