கடலூர் கிராமங்களை தத்தெடுக்கும் விவேக் ஓபராய்!
கடலூர்:
சுனாமியால் மிகக் கடுமையாகப் பாதிக்கப்பட்ட கடலூர் மாவட்டத்தின் சில கிராமங்களைத் தத்தெடுத்து பாதிக்கப்பட்டவர்களுக்கு உதவஇந்தி நடிகர் விவேக் ஓபராய் முன் வந்துள்ளார்.
![]() |
தனது பெற்றோர் சுரேஷ் ஓபராய், யசோதரா ஆகியோருடன் கடலூர் மாவட்டம் தேவனாம்பட்டினம் மீனவர் கிராமத்திற்கு வந்தார் விவேக்.
அவர்களுடன் அவரது ஆன்மீக குரு சுவாமி சிதானந்த சரஸ்வதி, ஸ்விட்சர்லாந்து நாட்டைச் சேர்ந்த லில்லி மற்றும் ஏராளமான தன்னார்வத்தொண்டர்களும் வந்தனர்.
தேவானம்பட்டினம் கிராமம் முழுவதையும் பார்வையிட்ட விவேக் ஒபராய் மக்களையும் சந்தித்து ஆறுதல் கூறினார். பாதிக்கப்பட்டமீனவர்களை சந்தித்த ஓபராய், தான் ஒரு நடிகர் என்றும், மும்பையிலிருந்து வந்திருப்பதாகவும் அறிமுகப்படுத்திக் கொண்டு ஆறுதல்கூறினார்.
பாதிக்கப்பட்ட பகுதிகளிலிருந்து ஓரிரண்டு கிராமங்களைத் தேர்ந்தெடுத்து அந்தக் கிராமங்களைச் சேர்ந்தவர்கள் புது வாழ்க்கையைத்தொடங்க உதவப் போவதாகவும் ஓபராய் தெரிவித்தார்.
இந்தக் கிராமங்களில் அனைத்து அடிப்படை வசதிகளும் இருக்கும். மிகச் சிறந்த கட்டடக் கலை நிபுணர்களைக் கொண்டு டிசைன்வடிவமைக்கப்பட்டு இந்தப் பணிகள் மேற்கொள்ளப்படும். புவியியல்ரீதியான சர்வேயும் நடத்தப்பட்டு, பூகம்பத்தால் பாதிக்கப்படாதவீடுகளும் கட்டித் தரப்படும் என்றார் ஓபராய்.
சென்னையில் படித்தவர் என்பதால் தமிழிலும் நன்றாகவே பேசினார் ஓபராய்.
ஓபராய் யார் என்றே தெரியாமல் பல கிராமத்தினர் அவரது பேச்சைக் கேட்டதோடு உதவ முன் வந்த அவருக்கு நன்றி தெரிவித்துக்கொண்டனர்.
ஓபராயின் அறிவிப்பு குறித்து கடலூர் மாவட்ட ஆட்சித் தலைவர் ககன்தீப் சிங் பேடி கூறுகையில், ஓபராய் போன்ற பிரமுகர்கள் அதிகஅளவில் உதவ முன் வந்தால் கடலூர் போன்ற பாதிக்கப்பட்ட ஊர்களைச் சேர்ந்த மக்கள் விரைவிலேயே புது வாழ்வைத் தொடங்கிடமுடியும்.
ஓபராய் போல மேலும் முக்கியஸ்தர்கள் கிராமங்களைத் தத்தெடுக்க முன் வர வேண்டும் என்றார்.
சென்னையில் இருந்து 10 லாரிகள் நிறைய உணவுப் பொருட்கள், துணிகள், அத்தியாவசியப் பொருட்களையும் கடலூர் பகுதிக்கு அனுப்பிவைத்துள்ளது ஓபராய் குடும்பம்.













Click it and Unblock the Notifications