வெளிநாட்டு நிதி உதவியை ஏற்க மறுத்த இந்தியா
வாஷிங்டன்:
சுனாமி பேரலையால் பாதிக்கப்பட்ட பகுதிகளில் நிவாரணப் பணிகளை மேற்கொள்ள ஐ.நா உள்பட வெளிநாடுகளின் நிதியுதவிதேவையில்லை என இந்தியா தெரிவித்துவிட்டது.
அமெரிக்கா 350 மில்லியன் உதவி:
இதற்கிடையே சுனாமி தாக்குதலுக்கு உள்ளான நாடுகளுக்கு 350 மில்லியன் டாலர் உதவி வழங்குவதாக அமெரிக்க அதிபர் புஷ் தனதுபுத்தாண்டு தின உரையில் தெரிவித்தார்.
முதலில் 35 மில்லியன் டாலரை அறிவித்த புஷ் பின்னர் சுனாமி தாக்குதலின் பேரழிவு மிக அதிகமாக இருப்பதால் 10 மடங்கு அதிக நிதிஉதவியை அறிவித்துள்ளார்.
1.2 பில்லியன் டாலர் குவிந்தது:
இதற்கிடையே சுனாமி தாக்குதலில் பாதிக்கப்பட்ட இந்தியா, இலங்கை உள்ளிட்ட 12 நாடுகளுக்கும் உதவ ஐநா சபை திரட்டி வரும் நிதிக்குஇதுவரை 1.2 பில்லியன் டாலர் குவிந்துள்ளது.
நிதியுதவியை ஒதுக்கியது இந்தியா:
ஆனால், தங்களுக்கு சர்வதேச நிதியுதவி ஏதும் தேவையில்லை என ஐ.நா. சபையிடம் இந்தியா தெரிவித்துவிட்டது.
நிவாரணப் பணிகளுக்கு தன்னிடம் போதிய நிதி வசதி இருப்பதாகவும், மிக மோசமாக பாதிக்கப்பட்ட நாடுகளுக்கு ஐ.நா. உதவலாம்என்றும் இந்தியா கூறிவிட்டது.
பாதிக்கப்பட்ட மாநில அரசுகளுக்கு மத்திய அரசு கோடிக்கணக்கில் நிதியுதவியைக் குவித்துள்ளது குறிப்பிடத்தக்கது. தமிழகத்துக்கு ரூ. 250கோடியை கடந்த இரு தினங்களில் மத்திய அரசு ஒதுக்கியுள்ளது.












Click it and Unblock the Notifications