முதலமைச்சர் நிவாரண நிதிக்கு பர்னாலா நிதியளிப்பு
சென்னை:
![]() |
சுனாமியால் பாதிக்கப்பட்டவர்களுக்கு உதவுவதற்காக ஆளுநர் சுர்ஜித் சிங் பர்னாலா தனது ஒரு மாத ஊதியத்தை, முதலமைச்சர் பொதுநிவாரண நிதிக்கு வழங்கினார்.
ஆளுநர் பர்னாலா தனது ஒரு மாத ஊதியமான ரூ. 36,000த்தை முதலமைச்சர் பொது நிவாரண நிதிக்கு வழங்கியுள்ளார்.
சென்னை பல்கலைக்கழகம் தனது ஊழியர்கள், ஆசிரியர்களிடம் வசூலித்த ரூ. 10 லட்சத்திற்கான காசோலையை ஆளுநரிடம் அனுப்பிவைத்தது. ஆளுநர் அதை முதலமைச்சர் பொது நிவாரண நிதிக்கு அனுப்பி வைத்தார்.
கர்நாடக அரசின் ரூ. 2 கோடி நிதியுதவி:
இந் நிலையில் சுனாமி பாதிப்புக்கு ஆளானவர்களுக்கு உதவுவதற்காக கர்நாடக அரசின் சார்பில் வழங்கப்பட்டுள்ள ரூ. 2 கோடிக்கானகாசோலையை அம்மாநில வருவாய்த்துறை அமைச்சர் எம்.பி.பிரகாஷ், இன்று தமிழக நிதியமைச்சர் பொன்னையனிடம் அளித்தார்.
சுனாமி பேரழிவுக்கு ஆளானவர்களுக்கு உதவுவதற்காக கர்நாடக அரசு தமிழக முதலமைச்சர் பொது நிவாரண நிதிக்கு ரூ 2 கோடிவழங்குவதாக அறிவித்திருந்தது. இதற்கான காசோலையை கர்நாடக வருவாய்த்துறை அமைச்சர் எம்.பி.பிரகாஷ் இன்று சென்னைக்குகொண்டு வந்தார்.
தலைமைச் செயலகத்தில் நிதியமைச்சர் பொன்னையனை சந்தித்த அவர் காசோலையை அவரிடம் கொடுத்தார். அவருக்கு முதல்வர்ஜெயலலிதாவின் சார்பில் நன்றிகளைத் தெரிவித்துக் கொண்டார் பொன்னையன்.
அமெரிக்கா ரூ.6.2 கோடி நிதியுதவி:
இந் நிலையில் சர்வதேச நாடுகளின் மேம்பாட்டுக்கான அமெரிக்க ஆணையம், தமிழகத்தில் கடல் கொந்தளிப்பால் பாதிக்கப்பட்டமக்களுக்கு தூய குடிநீர் வழங்க ரூ.6.2 கோடி நிதி ஒதுக்கியுள்ளது. இந்த நிதியுதவி அரசு சாரா அமைப்புகளுக்கு வழங்கப்படுகிறது.













Click it and Unblock the Notifications