சுனாமி: உறுப்புகள் இழந்தோருக்கு ரூ. 25,000 உதவி
Subscribe to Oneindia Tamil
சென்னை:
![]() |
சுனாமி தாக்குதலின்போது கைகள், கால்கள் மற்றும் பிற உடல் உறுப்புகளை இழந்தோருக்கு தலா ரூ. 25,000 கருணைத் தொகைவழங்கப்படும் என்று ஜெயலலிதா தெரிவித்துள்ளார்.
இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில்,
உடல் உறுப்புகளை இழந்தோருக்கு தலா ரூ. 25,000 கருணைத் தொகை வழங்கப்படும். மேலும் அவர்களுக்கு அரசு மருத்துவமனையில்இலவச சிகிச்சை அளிக்க ஏற்பாடு செய்யப்படும்.
மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு ஒரு வாரத்திற்கு மேல் தங்கி உள் நோயாளியாக சிகிச்சை பெற்று வருவோருக்கு தலா ரூ. 5,000வழங்கப்படும்.
பெற்றோரை இழந்து அநாதைகளாக்கப்பட்ட குழந்தைகளுக்கு ரூ. 2 லட்சம் தருவதாக முதலில் அறிவித்திருந்தேன். தற்போது அந்தத்தொகை ரூ. 5 லட்சமாக உயர்த்தப்பட்டுள்ளது.
குழந்தைகளின் பேரில் இந்தத் தொகை வைப்பு நிதியில் சேர்க்கப்பட்டு 18 வயது நிரம்பியவுடன் வழங்கப்படும் என்று ஜெயலலிதாதெரிவித்துள்ளார்.













Click it and Unblock the Notifications