சென்னை மருத்துவமனையில் விரிசல்; நில அதிர்வு?
சென்னை:
![]() |
சென்னை ஸ்டான்லி அரசு மருத்துவமனை கட்டடத்தில் விரிசல் ஏற்பட்டுள்ளது. நில அதிர்வு காரணமாக இந்த விரிசல் ஏற்பட்டதாக செய்திகிளம்பியதால் அந்தக் கட்டடத்தில் இருந்து நோயாளிகள் வெளியேற்றப்பட்டனர்.
சென்னை ஸ்டான்லி அரசு மருத்துவனையின் பெண்கள் பிரிவு கட்டடத்தில் நேற்று இரவு உட்புறமாக கட்டடத்தில் விரிசல் இருந்ததை சிலநோயாளிகள் பார்த்து நர்ஸ்களிடம் கூறியுள்ளனர். இதையடுத்து டாக்டர்கள் அங்கு விரைந்து வந்து விரிசலைப் பார்வையிட்டனர்.
அது ஏற்கனவே இருந்த விரிசலா அல்லது புதிதாக ஏற்பட்டதா என்று யாருக்கும் தெரியவில்லை. நில அதிர்ச்சி ஏற்பட்டு அதனால் விரிசல்ஏற்பட்டிருக்கலாம் என்று சிலர் கூறியதால் அங்கு பீதி ஏற்பட்டது.
இதைத் தொடர்ந்து முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக அந்தக் கட்டடத்தில் இருந்த 45 பெண்களும் அருகில் இருந்த வேறு கட்டடத்திற்குமாற்றப்பட்டனர். கட்டடம் மூடப்பட்டு சீல் வைக்கப்பட்டுள்ளது. மின் இணைப்பும் துண்டிக்கப்பட்டுள்ளது. கட்டடத்தின் அருகே யாரும்செல்ல வேண்டாம் என்றும் அறிவுறுத்தப்பட்டுள்ளது.
நில அதிர்ச்சி ஏற்பட்டதாக கூறப்பட்டாலும் கட்டடத்திற்குள் இருந்த நோயாளிகள் நில அதிர்ச்சி எதையும் உணரவில்லை என்றுதெரிவித்துள்ளனர். இந்தக் கட்டடம் 100 ஆண்டுகள் பழமையானது என்பது குறிப்பிடத்தக்கது.













Click it and Unblock the Notifications