தமிழக அரசின் முதல் சுனாமி சேத அறிக்கை தயார்
சென்னை:
![]() |
சுனாமி தாக்குதலால் தமிழகத்திற்கு ஏற்பட்ட சேத விவரங்கள் அடங்கிய முதல் அறிக்கை இன்று தயாராகி விடும் என்று தமிழக அரசுவட்டாரங்கள் தெரிவிக்கின்றன.
தமிழகத்தில் டிசம்பர் 26ம் தேதி சுனாமி அலை தாக்குதல் ஏற்பட்டது. இந்த கோரத் தாக்குதலுக்கு தமிழகத்தில் 10,000க்கும் மேற்பட்டோர்பலியாகியுள்ளனர். பல கோடி மதிப்புள்ள சொத்துக்களுக்கு சேதம் ஏற்பட்டுள்ளது.
சுனாமி தாக்குதலால் ஏற்பட்டுள்ள சேத விவரங்கள் குறித்து தமிழக அரசு அதிகாரிகள் மதிப்பிட்டு வந்தனர். அதன் அடிப்படையில் முதல்அறிக்கையை தமிழக அரசு தயார் செய்துள்ளது. அதற்கு இன்று இறுதி வடிவம் கொடுக்கப்படவுள்ளது.
சுனாமியால் ஏற்பட்ட சேத விவரங்கள், தற்போது எடுக்கப்பட்டு வரும் நிவாரண நடவடிக்கைகள், மேற்கொண்டு மத்திய அரசிடமிருந்தும்,தன்னார்வ தொண்டு நிறுவனங்களிடமிருந்தும் தமிழகத்திற்கு என்ன தேவைப்படுகிறது, மறு சீரமைப்புக்கான தேவைகள், தேவைப்படும்கூடுதல் நிதி உள்ளிட்ட பல்வேறு விவரங்கள் முதல் அறிக்கையில் இடம் பெற உள்ளன.
இன்றே இந்த முதல் அறிக்கை பிரதமர் மன்மோகன் சிங்குக்கு அனுப்பி வைக்கப்படும் என்று தெரிகிறது. இதுகுறித்து தமிழக அரசுஅதிகாரிகள் தரப்பில் தெரிவிக்கையில், சில ஆயிரக்கணக்கான கோடி ரூபாய் அளவுக்கு சேத மதிப்பீடு இருக்கும்.
பொருளாதார, சமுதாய பிரச்சினையை சமாளிப்பதுதான் மிகப் பெரும் சவாலாக இருக்கப் போகிறது. வெறும் பணத்தை மட்டும் வைத்துசுனாமி பிரச்சினையை சமாளிக்க முடியாது. ஏராளமான மருந்துப் பொருட்கள், குடிநீர், அடிப்படை பொருட்கள் உள்ளிட்டவை ஏராளமானஅளவு தேவைப்படுகிறது.
மறுசீரமைப்புக்கு மத்திய அரசு மற்றும் தன்னார்வ நிறுவனங்களின் மிகத் தாராளமான உதவி தேவைப்படுகிறது. பாதிக்கப்பட்டவர்களில் 80சதவீதத்திற்கும் மேற்பட்டோர் மீனவர்கள்தான். அவர்களது படகுகள், மீன்பிடி வலைகள் உள்ளிட்டவை முற்றிலும் சேதமடைந்துள்ளன.
மொத்தம் 20,000க்கும் மேற்பட்ட படகுகள், 1.20 லட்சம் வலைகள் சேதமடைந்துள்ளன. இவற்றை முழுமையாகவோ அல்லதுபகுதியாகவோ சீரமைக்க வேண்டியுள்ளது. இதற்கே பல நூறு கோடி ரூபாய் தேவைப்படும். இதுதவிர 1 லட்சத்திற்கும் மேற்பட்ட வீடுகள்முற்றிலும் சேதமடைந்துள்ளன.
இவையெல்லாவற்றையும் விட மக்களின் மனதில் ஏற்பட்டுள்ள பாதிப்பு சரியாக நீண்ட நாட்கள் பிடிக்கும். மன நிலை பாதிக்கப்பட்டமக்களுக்கு ஆறுதல் கூறவும், அவர்களை பழைய நிலைக்குத் திருப்பிக் கொண்டு வருவதற்காகவும், அவர்களுக்கு ஆலோசனைகள்கூறுவதற்காக ஏற்கனவே 12க்கும் மேற்பட்ட குழுக்கள் அனுப்பப்பட்டுள்ளன என்று அரசுத் தரப்பில் கூறப்படுகிறது.













Click it and Unblock the Notifications