மார்கழியில் ஒரு கார்த்திகை!
சென்னை:
ஆண் குழந்தைகளுக்கு ஆபத்து என்ற தகவல் பரவியதால் சென்னை மற்றும் புறநகர்ப் பகுதிகளில் வீடுகளுக்கு முன்பு அகல் விளக்குகள்வைத்து பெண்கள் சாமி கும்பிட்டனர். இதனால் கார்த்திகை திருநாள் போல சென்னை நகரமெங்கும் அகல் விளக்கு மயமாகக் காட்சிஅளித்தது.
தமிழகத்தில் அவ்வப்போது ஏதாவது ஒரு ஆன்மீக, ஜோதிட வதந்தி பரவுவது வழக்கமாகி விட்டது. சில ஆண்டுகளுக்கு முன்பு தென்மாவட்டங்களில் ஒரு வதந்தி பரவியது.
சகோதரிகளுக்கு பச்சைப் புடவை எடுத்துக் கொடுத்தால் நல்லது என்ற வதந்தி பரவியதால், தென் மாவட்டம் முழுவதும் பச்சைப் புடவைஎடுக்கும் படலம் தீவிரமாக காணப்பட்டது. அந்த வதந்தி இப்போது தென் மாவட்டங்களில் ஆண்டுதோறும் நிரந்தரமாகி விட்டது.
இந்த ஆண்டு மஞ்சள் புடவை எடுத்துக் கொடுத்தால் நல்லது என்று கூறப்பட்டது. இதனால் கடந்த சில மாதங்களாக மஞ்சள் புடவை எடுக்கமக்கள் கூட்டம் அலை மோதி வருகிறது.
இந்த வரிசையில் இப்போது சென்னையில் ஒரு வதந்தி பரவியுள்ளது. சனி மற்றும் செவ்வாயின் பார்வை ஆண் குழந்தைகள் மீதுபடிந்திருப்பதால், ஆண் குழந்தைகள் வைத்திருப்போர் வீடுகளுக்கு முன்பு அகல் விளக்குகளை ஏற்றி, குழந்தைகளைச் சுற்றி தேங்காய்உடைக்க வேண்டும் என்பதுதான் அந்த வதந்தி.
இதையடுத்து சென்னை நகர் மற்றும் புறநகர்ப் பகுதிகளில் பெண்கள், தங்களது வீடுகளுக்கு முன்பு அரிசியைப் போட்டு அதன் மீது அகல்விளக்குகளை ஏற்றி , அருகே ஒரு டம்பளரில் தண்ணீரையும் வைத்து வழிபட்டனர். குழந்தைகளின் தலையைச் சுற்றி தேங்காயும்உடைக்கப்பட்டது.
இந்த திடீர் வதந்தி காரணமாக சென்னை நகர வீடுகளுக்கு முன்பு அகல் விளக்குகள் மயமாக காணப்பட்டது. கார்த்திகை மாதம் முடிந்துமார்கழி நடந்து கொண்டிருக்கும் இந்த நேரத்தில் திடீரென்று வீடுகளுக்கு முன்பு அகல் விளக்குகள் வைக்கப்பட்டதால் பலருக்கும் குழப்பம்ஏற்பட்டது.
இதேபோல, திருவண்ணாமலை, திருவேற்காடு உள்ளிட்ட ஊர்களிலும் அகல் விளக்குகள் ஏற்றப்பட்டதாக செய்திகள் தெரிவிக்கின்றன.












Click it and Unblock the Notifications