தேசிய கீதத்தில் சிந்து வார்த்தை நீக்கப்படுமா?
Subscribe to Oneindia Tamil
டெல்லி:
தேசிய கீதத்தில் சிந்து என்ற வார்த்தையை நீக்கக் கோரி தாக்கல் செய்யப்பட்ட மனு தொடர்பாக பதில் அளிக்குமாறு மத்திய அரசுக்கு உச்சநீதிமன்றம் நோட்டீஸ் அனுப்பியுள்ளது.
ரவீந்திரநாத் தாகூர் எழுதிய ஜனகன மண எனத் தொடங்கும் பாடல் இந்தியாவின் தேசியகீதமாக உள்ளது. இந்தப் பாடலில், இந்தியாவின்பகுதிகளாக இருக்கும் மாநிலங்களைக் குறிப்பிட்டு, பஞ்சாப சிந்து குஜராத மராட்டா திராவிட உத்கல வங்கா என்று ஒரு வரி உள்ளது.
இதில் சிந்து மாநிலம் பாகிஸ்தானின் ஒரு பகுதியாக உள்ளது. எனவே சிந்து என்ற வார்த்தையை தேசிய கீதத்திலிருந்து நீக்க வேண்டும் என்றுகோரி உச்ச நீதிமன்றத்தில் ஒரு மனுத் தாக்கல் செய்யப்பட்டது.
இந்த மனுவை விசாரித்த உச்ச நீதிமன்றம், இது தொடர்பாக பதிலளிக்குமாறு மத்திய அரசுக்கு நோட்டீஸ் அனுப்பியது.












Click it and Unblock the Notifications