7ல் வெளியே வருவாரா ஜெயேந்திரர்?
காஞ்சிபுரம்:
சங்கரராமன் கொலை வழக்கு தொடர்பாக விஜயேந்திரரை இன்று மீண்டும் விசாரணைக்கு வரச் சொன்னகாஞ்சிபுரம் போலீசார் திடீரென அவரை வர வேண்டாம் என்று கூறிவிட்டனர்.
வாங்க..
மூன்றாவது முறையாக இன்று காஞ்சிபுரம் தனிப்படை முன் விசாரணைக்கு வருமாறு விஜயேந்திரருக்குஉத்தரவிடப்பட்டது. இதற்கான சம்மனை நேற்று மாலை விஷ்ணுகாஞ்சி காவல்நிலைய இன்ஸ்பெக்டர்மோகனவேல் இளையவரிடம் வழங்கினார்.
காஞ்சிபுரம் காட்டுப் பங்களாவில் விசாரணைக்கு நேரில் ஆஜராக அவருக்கு உத்தரவிடப்பட்டிருந்தது.
இதையடுத்து இன்று வழக்கமான பூஜைகளை முடித்துக் கொண்டு காலை 11 மணிக்கு காட்டு பங்களாவுக்குச் செல்லமுடிவு செய்திருந்தார் விஜயேந்திரர்.
வராதீங்க..
இந் நிலையில் நள்ளிரவில் மடத்தைத் தொடர்பு கொண்ட போலீசார், நாளை (இன்று) பலரிடம் விசாரணை நடத்தவேண்டியுள்ளதால் இளையவர் வர வேண்டியதில்லை. அந்த சம்மனை ரத்து செய்கிறோம். நாங்கள்கூப்பிடும்போது வந்தால் போதும் என்று கூறிவிட்டனர்.
இதற்கிடையே விஜயேந்திரர் வெள்ளிக்கிழமையான நாளை காட்டு பங்களாவுக்கு வரவழைக்கப்பட்டு கைதுசெய்யப்படலாம் என போலீஸ் வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.
விஜயேந்திரருக்கு முன் ஜாமீன் வாங்கும் திட்டம் ஏதும் உண்டா என அவரது வழக்கறிஞர் சண்முகத்திடம்கேட்டபோது, அதற்கான அவசியம் ஏதும் இல்லை.
7ம் தேதி...
அதே நேரத்தில் வரும் 7ம் தேதி நடக்கும் மகா பெரியவரின் ஆராதனை நிகழ்ச்சியில் பங்கேற்க ஜெயேந்திரரைஒரு நாள் வெளியே வர அனுமதிக்கக் கோரி வரும் 6ம் தேதி உச்ச நீதிமன்றத்தில் மனு செய்ய இருக்கிறோம்.
இது ஒரு தந்தைக்கு மகன் செய்யும் பூஜை போன்றது. எனவே இதில் ஜெயேந்திரரை பங்கேற்கச் செய்யநடவடிக்கை எடுப்போம் என்றார்.
ஜாமீன் மனுவுக்கு எதிர் மனு:
இந் நிலையில் சங்கரராமன் கொலை வழக்கில் ஜாமீன் கோரி சங்கராச்சாரியார் தாக்கல் செய்த மனுவுக்கு எதிராகஇன்று தமிழக அரசு மனு தாக்கல் செய்தது.
ஜாமீனுக்கு எதிராக மனு:
அதே போல ஆடிட்டர் ராதாகிருஷ்ணன் தாக்கப்பட்ட வழக்கில் ஜெயேந்திருக்கு சென்னை உயர் நீதிமன்றம் ஜாமீன்வழங்கியதை எதிர்த்து நாளை உச்ச நீதிமன்றத்தில் தமிழக போலீசார் எதிர் மனு தாக்கல் செய்யவுள்ளனர்.
-
Annamalai: பாஜக தலைவர்களுக்கு சுமையாக இருக்க விரும்பவில்லை! அண்ணாமலை உருக்கம்! -
திமுகவை சீண்டும் துரை வைகோ.. இன்னைக்கு என்ன சொல்லி இருக்காருன்னு பாருங்க! புது பஞ்சாயத்து -
2031 வரை அண்ணாமலை காத்திருக்க மாட்டார்.. அவரின் உண்மையான திட்டம் இதுதான்.. வெளியான தகவல்! -
Vetri Payanam: கன்னியாகுமரி டூ சென்னை வரை பெண்களுக்கு இலவச பஸ் பயணம்! அறிவிக்கிறாரா முதல்வர் விஜய்? -
அண்ணாமலையின் மூவ்! ஒன்னும் புதுசா இல்லை.. பாஜகவின் இன்னொரு கிளைதான்! கிளம்பும் விமர்சனம்! -
2020-ல் ரஜினி தொடங்கவிருந்த கட்சியில் இணையுமாறு கேட்டார்! நான் மறுத்துவிட்டேன்! அண்ணாமலை பரபரப்பு -
7 ஐபிஎஸ் அதிராரிகள் அதிரடி மாற்றம்.. "மதுரை கமிஷனர் டூ சென்னை சட்டம் ஒழுங்கு!" வெளியான லிஸ்ட் -
தமிழக மின்சார வாரிய தலைமை அலுவலகத்தில் 34 'ஹார்டு டிஸ்க்குகளை திருடியவர்கள் குறித்து புதிய தகவல்கள் -
பேய் மழை வெளுக்கப் போகுது.. கோவை, நீலகிரியில் மிக கனமழை! 11 மாவட்டங்களுக்கு கனமழை எச்சரிக்கை! -
சென்னையில் மழை வெளுக்கப்போகுது.. மொத்தமா 9 மாவட்டங்களுக்கு எச்சரிக்கை! அடுத்த 2 மணி நேரம் உஷார் -
AirTrunk: 3 லட்சம் கோடி மெகா முதலீடு.. சென்னை அம்பத்தூரில் ரூ.10,000 கோடியில் அஸ்திவாரம்! -
நீல நிறமாக மாறிய.. 3 மாத பச்சிளம் குழந்தையின் உடல்! உயிரை காப்பாற்ற உடனே உதவுங்கள்!












Click it and Unblock the Notifications