நாகூர் தர்காவின் மதம் கடந்த நிவாரணப் பணி
நாகப்பட்டினம்:
![]() |
கடல் கொந்தளிப்பால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு மத வேற்றுமையின்றி நாகூர் தர்கா உதவி அளித்து வருகிறது.
447 ஆண்டுகள் பழமை வாய்ந்த இந்த நாகூர் மீரான் தர்காவில் கடல் கொந்தளிப்பு ஏற்பட்டதும் 5,000 பேருக்கு புகலிடம் தரப்பட்டது.இப்போதும் இங்கு 1,000 பேர் வரை தொடர்ந்து தங்கியுள்ளனர். இவர்களுக்கு தர்கா மூலமாக தொடர்ந்து உணவும் அளிக்கப்பட்டுவருகிறது.
இது தொடர்பாக நிருபர்களிடம் தர்காவின் ஜமாத் உறுப்பினர் சாகுல் ஹமீது கூறுகையில்,
கடந்த 7 நாட்களாக பாதிக்கப்பட்டவர்களுக்கு உணவு அளித்து வருகிறோம். இதற்காக 15 இளைஞர்களைக் கொண்ட ஒரு குழுஅமைக்கப்பட்டு உள்ளது. ஏராளமான தொண்டு நிறுவனங்கள் தர்காவிற்கு நிவாரணப் பொருட்களை அனுப்பி வருகின்றனர்.
முதல் இரண்டு நாட்களின்போது, சடலங்களைத் தேடும் பணியில் ஜமாத் உறுப்பினர்களும், உயிர் தப்பிய மீனவர்களும் ஈடுபட்டனர். 50குழந்தைகள் உட்பட 200 பேரின் சடலங்கள் தர்காவிற்குச் சொந்தமான மயானத்தில் அடக்கம் செய்யப்பட்டன என்றார்.
தர்காவில் தங்கியிருக்கும் மக்களில் சிலரை நிருபர்கள் சந்தித்தபோது,
சுனாமி அலையின் பயம் இன்னும் எங்களை விட்டுப் போகவில்லை. நாகூர் கடல்பகுதியில் இரண்டு கிராமங்கள் சுத்தமாக அழிந்துவிட்டன.
முதல்வர் ஜெயலலிதா அறிவித்த பணமும், நிவாரணப் பொருட்களும் எங்களை வந்து சேர்ந்து விட்டன. மாவட்ட நிர்வாகம்வழங்கவிருக்கும் வீடு மற்றும் படகுகளை நாங்கள் எதிர்பார்த்திருக்கிறோம் என்றனர்.
-
வருங்கால இளைஞர்களுக்கு வழிவிடுங்க! அதிமுக ராஜசத்யன் திடீர் ட்வீட்! டீகோடு செய்து பார்த்தால்..! -
கோடை விடுமுறை முடிந்து... சென்னை திரும்பும் மக்கள்! 10 கி.மீ தூரத்திற்கு போக்குவரத்து நெரிசல்! -
"2.0 அவதாரம் எடுக்கும் அண்ணாமலை!".. பாஜகவா? புதிய கட்சியா? அரசியல் களத்தை அலற விட்ட போஸ்டர்கள் -
பெங்களூருக்கு ஜில் அப்டேட் கொடுத்த வெதர்மேன்! மழை கொட்டப்போகுது.. சென்னை நிலவரம் என்ன? விவரம்! -
ஆளுநரின் தனி செயலாளர் உட்பட.. தமிழகம் முழுவதும் ஐஏஎஸ் அதிகாரிகள் பலர் பணியிட மாற்றம்! -
இந்திய ரயில்வே வரலாற்றில் விசித்திரம்! சேலம்- சென்னை ஓடும் ரயிலில் ரூ.5.78 கோடி கொள்ளை நினைவிருக்கா? -
கொ*யில் முடிந்த பார் டான்ஸ்.. கொதித்துப் போன கோயம்பேடு! யான்சிக்கு இப்படியா சாவு வரனும்! ஷாக்! -
சென்னையில் விட்டு விளாச போகுது.. இன்று 17 மாவட்டங்களில் கனமழை பெய்யும்.. வானிலை மையம் எச்சரிக்கை -
தமிழக குழந்தைகள் எவ்வளவு பாதுகாப்பாக உள்ளனர்? தடுப்பூசி குறித்து வெளியான புதிய டேட்டா -
சென்னை துறைமுகம் மதுரவாயல் ஈரடுக்கு மேம்பாலம்: 60% பணிகள் ஓவர்! போக்குவரத்து நெரிசல் விரைவில் முடிவு -
வேலூர் டூ கன்னியாகுமரி.. 9 மாவட்டங்களுக்கு ஆரஞ்சு அலர்ட்! கொட்டப்போகும் மழை.. உஷார்! -
Weather: பலத்த இடி, மின்னல், காற்றுடன் 17 மாவட்டங்களுக்கு கனமழை அலெர்ட்! வானிலை மையம் சொல்வதென்ன?













Click it and Unblock the Notifications